சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

2021 இந்தியன் நேஷன் ரேல்லி சாம்பியன்ஷிப்-இன் சென்னையில் நடைபெற இருந்த பந்தய சுற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் முழு விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஆஃப் இந்தியா (Federation of Motor Sports Clubs of India), சென்னையில் நடைபெற இருந்த 2021 இந்தியன் நேஷனல் ரேலி சேம்பியன்ஷிப் (Indian National Rally Championship) போட்டியின் சுற்றை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

இந்த போட்டி ஒத்தி வைப்பிற்கு கொரோனா வைரஸ் காரணம் இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவலாக உள்ளது. சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில், தலைநகர் சென்னையை கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் மக்களைக் குளிர்விக்கும் வகையில் கடந்த சில தினங்களாக மழை பொழிந்து வருகின்றது.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

இந்த திடீர் மழை பொழிவே 2021 இந்தியன் நேஷனல் ரேலி சேம்பியன்ஷிப் போட்டியின் சென்னை சுற்று ரத்து செய்யப்பட காரணமாக அமைந்திருக்கின்றது. மழையினால் பந்தயம் நடைபெறும் சுற்று பாதைகளில் லேசாக பாதித்திருக்கின்றன.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

மழை நீர் நிரம்பியும், ஈரப்பதத்துடன் சாலைகள் காட்சிளிக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டே ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஆஃப் இந்தியா சென்னையில் நடைபெற இருந்த போட்டியை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கின்றது.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

ஜூலை 31 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய ஏதேனும் ஓர் தேதியில் போட்டி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த போட்டி தள்ளி போவது இது முதல் முறையல்ல.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்த போட்டி ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டிருந்தநிலையிலேயே தற்போத மழையின் காரணமாக மீண்டும் கார் பந்தம் தள்ளி போயிருக்கிறது. முதலில் இப்போட்டி ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

அப்போது, வைரசின் இரண்டாம் அலை பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தினால் இது தள்ளிப்போடப்பட்டது. மிக விரைவில் மீண்டும் போட்டி நடைபெறும் தேதியை பந்தய ஒருங்கிணைப்பாளரும், ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஆஃப் இந்தியாவும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னையில் நடைபெற இருந்த பிரபல கார் பந்தயம் ரத்து! காரணம் கொரோனா இல்ல!

தற்போது தள்ளி போடப்பட்டிருக்கும் போட்டியானது ஆறு கட்டங்களாக நடைபெற இருக்கின்றது. சென்னை மட்டுமின்றி பெங்களூரு, கோவை, டெல்லி-என்சிஆர், ஹம்பி மற்றும் நாகலாந்து ஆகிய பகுதிகளிலும் இப்போட்டியை நடத்த பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
FMSCI Announced 2021 INRC Chennai Round Postponed Due To Heavy Rain. Read In Tamil.
Story first published: Tuesday, July 20, 2021, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X