டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

பிரபல கால்பந்தாட்ட விளையாட்டு வீரரான டேவிட் பெக்கம் மிக மிக விலையுயர்ந்த மஸராட்டி (Maserati) சூப்பர் காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

உலகின் மிகவும் விலையுயர்ந்த சூப்பர் கார்களில் ஒன்று மஸராட்டி (Maserati) நிறுவனத்தின் எம்சி20 ஃபரிசீரி எடிசன் (MC20 Fuoriserie). இந்த காரையே பிரபல கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் வாங்கியிருக்கின்றார். தனக்கு மிகவும் பிடித்தமான தோற்றத்தில் வந்திருப்பதன் காரணத்தினால் இக்காரை டேவிட் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

இந்த காரின் பெரும்பாலான பகுதிகளுக்கு கண்ணாடி போன்று மினு மினுக்கக் கூடிய கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, திரிசூல எம்பளம், பேட்ஜ் ஆகியவற்றைக் கொண்டு இந்த கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதனால் வழக்கமான எம்சி20 வெர்ஷனைக் காட்டிலும் இந்த ஃபரிசீரி எடிசன் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. கருப்பு நிறத்தைத் தொடர்ந்து பேஸ்டல் பிங்க் நிறமும் காரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

குறிப்பாக, பேட்ஜ் மற்றும் ப்ரெம்போ பிரேக் காலிபர் ஆகிய பகுதிகளில் இந்த நிறம் பளிச்சென தென்படுகின்றது. வெளிப்புறத் தோற்றத்தைப் போலவே காரின் உட்புறமும் மிகவும் கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், தற்போது பெக்கம் வாங்கியிருக்கும் எம்சி 20 சூப்பர் காரின் உட்புறத்தில் அல்கான்டரா மற்றும் லெதர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

இத்துடன், கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தால் இதன் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது கான்ட்ராஸ்டான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. இத்துடன், இருக்கை மற்றும் ஹெட்ரெஸ்ட் போன்றவற்றில் பிங்க் நிற தையல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

தொடர்ந்து, டேவிட் பெக்கம் பெற்றிருக்கும் காரில் சிறப்பு வேலைப்பாடாக அலுமினியம் ஃபினிஷ் கொண்ட சென்ட்ரல் டன்னல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய சிறப்பான காரையே பெக்கம் அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார். புதிய மஸராட்டி எம்சி 20 ஃபரிசீரி எடிசன் குறித்து டேவிட் பெக்கம் கூறியிருப்பதாவது,

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

"இந்த காரை நிறுவனத்தின் சிறப்பு கஸ்டமைசேஷன் வாயிலாக எனக்கு பிடித்தவாறு லேசாக மாற்றியிருக்கின்றேன். எனவே, எனக்கு பிடித்தமான வாகனமாக இது மாறியிருக்கின்றது. நிறம், உட்புறம் என அனைத்தும் எனது சுவைக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கின்றது" என்றார்.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

மஸராட்டி நிறுவனம் அதன் கஸ்டமைசேஷன் குழுவின் வாயிலாக அதன் வாடிக்கையாளர்களின் டேஸ்டிற்கு ஏற்ப கார்களை மாற்றியமைத்து தருகின்றது. இதன் அடிப்படையிலேயே டேவிட் பெக்கம் கேட்ட ஸ்டைலில் புதிய எம்சி 20 வழங்கப்பட்டிருக்கின்றது. கால்பந்தாட்ட விளையாட்டு வீரரிடம் இதுபோன்று எக்கசக்க சிறப்பு வசதிகள் கொண்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

அந்தவகையில், அரிய வகை மற்றும் ஆடம்பர கார்கள் பல இவரிடத்தில் உண்டு. வழக்கமான தேர்வாக விற்பனைக்குக் கிடைக்கும் எம்சி 20 சூப்பர் ரூ. 3.65 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், டேவிட் பெக்கம் வாங்கியிருப்பது சிறப்பு மாடிஃபிகேஷன் கொண்ட சூப்பர் கார் என்பதால், இதைவிட பல மடங்கு அதிக விலைக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FBeckham%2Fvideos%2F340142024176399%2F

ஆனால், துள்ளியமான விலை விபரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. எம்சி 20 சூப்பர் காரில் உயர் திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட நெட்யூனோ எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 3.0 லிட்டர் வி6 எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 630 எச்பி பவர் வரை வெளியேற்றும் திறன் கொண்டது.

டேவிட் பெக்கம் வாங்கிய மிக மிக விலையுயர்ந்த கார்... எப்பா இவ்ளோ பெரிய தொகைய கொடுத்து வாங்கியிருக்காரா?

வெறும் 2.9 செகண்டுகளில் இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிமீ ஆகும். இக்காரில் ஜிடி, ஸ்போர்ட், கோர்ஸா, வெட் ஆகிய நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான இயக்க அனுபவத்தை வழங்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Footballer david beckham buys brand new maserati mc20 fuoriserie edition
Story first published: Tuesday, December 21, 2021, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X