ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

டீசல் கார்களை காட்டிலும் ஐரோப்பாவில் முதல்முறையாக எலக்ட்ரிக் & ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

ஐரோப்பா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக் வாகனங்களை தான் சார்ந்திருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நம் இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை தற்போது தான் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

ஆனால் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் அறிமுகமாகி வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவில் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை ஏறக்குறைய நன்றாக வளர்ந்துவிட்டது.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

இதனை வெளிக்காட்டும் விதத்திலேயே ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் கார்களின் விற்பனை நடந்துள்ளது. கடந்த மாதத்தில் எலக்ட்ரிக் & ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்கள் டீசல் கார்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

ஜடோ ஐரோப்பா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ஸ்ட்டில் மொத்தம் 1,51,737 யூனிட் மின்மயமாக்கப்பட்ட வாகனங்கள் ஐரோப்பிய கண்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் சுமார் 61 சதவீதம் அதிகமாகும்.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

அதேநேரம் கடந்த மாதத்தில் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட டீசல் கார்களை காட்டிலும் ஏறக்குறைய 10,100 யூனிட்கள் அதிகமாகும். ஆனால் 2020 ஆகஸ்ட்டில் வேறு கதையாக இருந்தது. அதாவது அந்த மாதத்தில் எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் டீசல் கார்கள் சுமார் 158,300 என்ற மிக பெரிய வித்தியாசத்துடன் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

ஐரோப்பாவில் கடந்த மாத மொத்த விற்பனையில் இவி & ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்கள் கிட்டத்தட்ட 21 சதவீத பங்கை பெற்றுள்ளன. அதேநேரம் டீசல் கார்கள் இதனை காட்டிலும் 1 சதவீதம் குறைவாக, 20% விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய சந்தையை பொறுத்தவரையில், இவ்வாறு நடப்பது இதுவே முதல்முறையாகும்.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

ஐரோப்பிய கண்டத்தில், இவி & ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்கள் விற்பனையில் பெற்ற இரண்டாவது அதிக மார்க்கெட் பங்கு இதுவாகும். வழக்கம்போல் பெட்ரோல் கார்கள் தான் கடந்த மாதத்தில் ஐரோப்பாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்த விற்பனையில் பெட்ரோல் கார்களின் பங்கு 56% ஆகும்.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

டீசல் கார்களின் விற்பனை மட்டுமில்லாமல், ஐரோப்பாவில் பெட்ரோல் கார்களின் விற்பனையும் மாதத்திற்கு மாதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. இதனால் டீசல் கார்களை போல் பெட்ரோல் கார்களையும் மின்மயமாக்கப்பட்ட கார்கள் விற்பனையில் முந்தும். இதற்கு நீண்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டியதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்களை காட்டிலும் பேட்டரி எலக்ட்ரிக் கார்கள் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட்டில் ஐரோப்பாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் மாடலாக ஃபோக்ஸ்வேகன் ஐடி.3 விளங்குகிறது. இதனை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு டெஸ்லா மாடல் 3 உள்ளது.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஃபோக்ஸ்வேகனின் மற்றொரு மாடர்ன் பேட்டரி காரான ஐடி.4 பிடித்துள்ளது. ஆனால் இதன் விற்பனை எண்ணிக்கை மேலுள்ள இரண்டை காட்டிலும் சற்று பெரிய இடைவெளி உடன் உள்ளது. ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனங்களை பொறுத்தவரையில், ஃபோர்டு குகா PHEV மற்ற அனைத்து ஹைப்ரீட் வாகனங்களை காட்டிலும் முன்னிலையில் உள்ளது.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

இதனை தொடர்ந்தவாறு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி PHEV மற்றும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் PHEV உள்ளிட்டவை உள்ளன. இதுகுறித்து ஜடோ டைனாமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை அதிகரிப்பதில் ஒப்பந்தங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தாலும், மக்களிடையே கார்கள் வாங்கும் பழக்கத்தில் அடிப்படை மாற்றத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

ஐரோப்பாவில் விற்பனையில் டீசல் கார்களை முந்திய எலக்ட்ரிக் கார்கள்!! வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்

இங்குள்ள மக்கள் இவி-களினால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி அறிந்துள்ளனர் என்றார். இருப்பினும் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய தேவை இன்னும் தீர்ந்தப்பாடில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனங்களால் திட்டமிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவிரி செய்ய முடியாமல் போக, கடந்த ஆகஸ்ட்டில் ஐரோப்பாவில் புதிய கார் பதிவுகள் கிட்டத்தட்ட 18% குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

Most Read Articles

English summary
For the first time ever, EVs & PHEVs beat diesel car sales in Europe.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X