மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 ஆஃப் ரோடு எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன. ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 ஆஃப் ரோடு எஸ்யூவி இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படங்கள் வெளியே கசிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

அத்துடன் இந்த படங்கள் வெளியாகியிருப்பது, ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த படங்களை விக்ரம் கன்வார் என்பவர், முகநூல் குழுவில் பகிர்ந்துள்ளார். இதில், மேம்படுத்தப்பட்ட முன் பகுதியுடன் ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் குர்காவை நம்மால் காண முடிகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி, கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது நடந்து கிட்டத்தட்ட 15 மாதங்களாகி விட்டன. ஆனால் புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 ஆஃப் ரோடு எஸ்யூவியை எதிர்பார்த்து இந்தியர்கள் இன்னமும் காத்து கிடக்கின்றனர்.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

ஆனால் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியே கசிந்துள்ளதால், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய குர்கா பிஎஸ்-6 எஸ்யூவியை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். புதிய குர்கா எஸ்யூவியின் இன்ஜினில்தான் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட 2.6 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 2021 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் முன்பகுதி புத்தம் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் மாடலை போலவே முன் பகுதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய க்ரில் அமைப்பு, புதிய பம்பர் மற்றும் ரீ-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மேலும் காரை சுற்றிலும் பாடி-கிளாடிங், திருத்தியமைக்கப்பட்ட டெயில்லேம்ப்கள், டெயில்கேட் உடன் இணைக்கப்பட்ட ஸ்பேர் டயர் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

அதே நேரத்தில் உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு புதிய வசதிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன்படி 2021 ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில், புதிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எம்ஐடி டிஸ்ப்ளே உடன் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டி... ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்-6 சீக்கிரமே விற்பனைக்கு வரப்போகுது... படங்கள் லீக்!

அதே நேரத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எஸ்யூவிக்கு சில ஆஃப்டர் மார்க்கெட் ஆக்ஸஸெரீஸ்களையும் வழங்கும் என தெரிகிறது. புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி, மஹிந்திரா தார் எஸ்யூவியுடன் போட்டியிடும். கடந்தாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Force Gurkha BS6 Official Images Leaked: Here Are All The Details. Read in Tamil
Story first published: Tuesday, May 25, 2021, 23:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X