Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 1 hr ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 2 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபோர்டு கார்களை இனி இந்த விலைகளில்தான் வாங்க முடியும்!! ஷோரூம் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு
ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அனைத்து இந்திய கார்களது எக்ஸ்ஷோரூம் விலைகளையும் ரூ.35,000 வரையில் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போல் ஃபோர்டு இந்தியா நிறுவனமும் அதன் தயாரிப்புகளின் விலைகளை, விலை அதிகரிப்புடன் திருத்தியமைத்துள்ளது.

இதன்படி ஃபிகோ, அஸ்பியர், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டேவியர் என குறிப்பிட்ட சில ஃபோர்டு மாடல்களின் விலைகள் வேரியண்ட்களை பொறுத்து ரூ.4,000-ல் இருந்து ரூ.35,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு இந்தியாவில் விற்பனை செய்துவரும் மலிவான கார்களுள் ஒன்றான ஃபிகோவின் விலை குறைவான வேரியண்ட்டின் விலை ரூ.15,000 வரையிலும், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளூ வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.19,000 மற்றும் ரூ.4,000 அதிகரிக்கப்பட்டுள்ளன.

முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்ட ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரின் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விலைகளும் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ரூ.5,000 அளவில் உயர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல் ஃபோர்டின் காம்பெக்ட் செடான் காரான அஸ்பியர் ரூ.5,000 அளவில் விலை உயர்வை தனது அனைத்து வேரியண்ட்களிலும் ஏற்றுள்ளது. இந்த அமெரிக்க கார் பிராண்ட் பிரபலமான முழு-அளவு எஸ்யூவி மாடலான எண்டேவியரின் டைட்டானியம் 4X2 ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலையில் கை வைக்கப்படவில்லை.

ஆனால் மற்ற வேரியண்ட்களின் விலைகள் கிட்டத்தட்ட ரூ.35,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு பிஎஸ்6 இணக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் எண்டேவியர் இரு மற்றும் 4-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் வழங்கப்படுகிறது.

ஃபோர்டின் அதிகப்பட்ச விலை உயர்வை பெற்றுள்ள இந்த எஸ்யூவி காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதில்லை. விலை அதிகரிப்புகளுடன், ஈக்கோஸ்போர்ட் என்ற ஒரே ஒரு மாடலின் விலையை மட்டும் ஃபோர்டு நிறுவனம் குறைத்துள்ளது. இதனால் இந்த ஃபோர்டு கார் இனி ரூ.8 லட்சத்திலேயே கிடைக்கும்.