நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

Ford நிறுவனம் Mustang Mach-E இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. நிறுவனம் அண்மையில் இந்தியாவை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியிட்டது. இந்நிலையில் புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரங்களை கீழே காணலாம்.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இந்திய சந்தையை விட்டு வெளியேற இருப்பதாக மிகவும் அதிர்ச்சியான தகவலை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நேற்றைய தினம் வெளியிட்டது. ஆண்டுக்கு 4 லட்சங்கள் வாகன உற்பத்தி என இந்தியாவில் கொடி கட்டி பறந்து வந்த இந்த அமெரிக்க உற்பத்தியாளர் போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்காத காரணத்தினால் இந்தியாவில் பெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இதனால் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி தொடர் விற்பன சரிவு ஒரு பக்கம் அவரை வாட்டி வதைத்தது. இதுபோன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக நிறுவனம் இந்தியாவை விட்டே வெளியேறுவதாக அறிவித்தது.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலைப்பாட்டில் நிறுவனத்திற்கு பெரிய அளவில் உடன்பாடில்லை என்றாலும் சில கட்டாயத்தினால் நிறுவனம் வெளியேறியது. இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக நாட்டின் சில முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

ஆனால், எந்தவொரு நிறுவனம் ஃபோர்டின் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. இதன்விளைவாக, நாட்டை விட்டே வெளியேற இருப்பதாக அறிவித்திருக்கின்றது. அதேவேலையில், சென்னை ஆலையை எஞ்ஜின் உற்பத்திக்காக இயக்க இருப்பதாகவும், இவற்றை ஏற்றுமதிக்காக மட்டுமே நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக கூறியிருக்கின்றது.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இந்தநிலையினால் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்பட்ட ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் அறிமுகம் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல கார் மாடல்களின் வரத்து ரத்தாகியிருக்கின்றது. அதேவேலையில் நிறுவனம் தற்போது ஆச்சரியமளிக்கும் வகையில் மிகவும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கின்றது.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

நிறுவனம் இந்தியர்களின் எதிர்பார்ப்பில் பெரிதும் ஆளுகைச் செய்துக் கொண்டிருக்கும் மஸ்டாங் மேக்-இ காரின் இந்திய அறிமுகம் கட்டாயம் அரங்கேறும் அறிவித்திருக்கின்றது. இந்தியாவில் வாகன உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியிருப்பதனால் ஃபோர்டு மஸ்டாங் மேக்-இ கார் சிபியூ வாயிலாக விற்பனைக்கு வரும்.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இது ஓர் க்ராஸோவர் ரக எலெக்ட்ரிக் காராகும். நிறுவனத்தின் மிக சிறந்த கார் எலெக்ட்ரிக் காராக இது இருக்கின்றது. ஃபோர்டு நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை 2019ம் ஆண்டிலேயே உலகளவில் அறிமுகம் செய்துவிட்டது. இக்கார் அனைத்து வீல் இயக்கம் கொண்ட கான்ஃபிகரேஷன் அல்லது பின் பக்க வீல் இயக்கம் கான்ஃபிகரேஷன் ஆகிய இருவிதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இதே தேர்விலேயே இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மஸ்டாங் மேக்-இ காரும் எதிர்பார்க்கப்படுகின்றது. ரியர் வீல் இயக்கம் கொண்ட மஸ்டாங் மேக் இ 270 பிஎச்பி திறன் வெளிபாட்டிலும், அனைத்து வீல் இயக்கம் கொண்ட மேக்-இ 487பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். இதேபோல் 370 கிமீ ரேஞ்ஜ் மற்றும் 491 கிமீ ரேஞ்ஜ் ஆகிய இரு விதமான பயண தூரம் திறனிலும் இக்கார் விற்பனையில் இருக்கிறது.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இத்தகைய பிரம்மிக்க வைக்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தையே இந்தியாவில் செய்ய இருப்பதாக ஃபோர்டு உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் மற்றுமொரு அதிக சிறப்பு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் காராக எஃப்-150 லைட்னிங் பிக்-அப் ட்ரக் இருக்கின்றது.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த கார் மிக விரைவில் உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு ஏற்கனவே புக்கிங் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டி வருகின்றது. அதிக கவர்ச்சியான உருவம் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் எஃப்-150 எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக் உருவாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், உலகளவில் மின் வாகன பிரியர்களின் கவனத்தை இக்கார் கவர்ந்து வருகின்றது.

நாட்டை விட்டு வெளியேறிய Ford... சோகம் வேண்டாம் நம்ம ஆளுங்களுக்கு பிடித்த கார் விரைவில் அறிமுகமாகிறது!

ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் மேக்-இ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரு இருப்பது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபக்கம் நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஈகோஸ்போர்டு சந்தையை விட்டு வெளியேறுவது சிலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford confirmed mustang mach e india launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X