விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சமூக வலைதளத்தில் கழுதை ஒன்று விலையுயர்ந்த Ford காரை இழுத்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த முழு விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Ford (ஃபோர்டு) நிறுவனத்தின் விலையுயர்ந்த கார் மாடல்களில் Endeavour (என்டீயோவர்)-ம் ஒன்று. இது ஓர் SUV ரக கார் மாடலாகும். இந்த கார் மாடலையே கழுதை ஒன்று சாலையில் இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு Endeavour காரின் உரிமையாளருக்கு தெரிந்தே நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆம் பொதுமக்கள், தனக்கு காரை விற்பனைச் செய்த விற்பனையாளர் மற்றும் Ford நிறுவனத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே இத்தகைய செயலை Endeavour காரின் உரிமையாளர் செய்திருக்கின்றார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் நகரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் மீனா. இவரே தனது Ford Endeavour காரை கழுதையைக் கொண்டு சாலையில் இழுத்து சென்று வலம் வந்தவர்.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த காரை அர்ஜூன் மீனா கடந்த 2016ம் ஆண்டு ஜெய்பூரைச் சேர்ந்த Ks Ford (கேஎஸ் ஃபோர்டு) எனும் கார் விற்பனையாளரிடத்தில் இருந்து வாங்கியிருக்கின்றார். அன்றைய நாளில் இருந்து தற்போது வரை அக்காரில் பல்வேறு சிக்கல்களை அவர் சந்தித்திருக்கின்றார்.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குறிப்பாக, கியர்பாக்ஸில் மிகப் பெரிய சிக்கல்கள் இருப்பதை அவர் உணர்ந்திருக்கின்றார். இதுகுறித்து தனது கார் விற்பனையாளரிடத்திலும், சர்வீஸ் மையத்திலும் பல முறை அவர் புகாரளித்திருக்கின்றார். இருப்பினும், இதுநாள் வரை தனக்கான தீர்வு கிடைக்கவில்லை என்பது அர்ஜூன் மீனாவின் குற்றாச்சாட்டு.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதேசமயம், ஒவ்வொரு முறையும் கார்குறித்து புகார் அளிக்கும்போதும், தாங்கள் உடனடியாக சரி செய்து தருவதாகக் கூறி அவர் சமாதானப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார். ஆகையால், பெரும்பாலான நேரங்கள் Ford Endeavour கார் அர்ஜூன் மீனாவிடம் இருந்ததைக் காட்டிலும், மிக அதிக நாட்கள் விற்பனையாளர்கள் மற்றும் அவர்களின் சர்வீஸ் மையங்களியே இருந்திருக்கின்றது.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இருப்பினும், அதில் இருக்கும் கோளாறுகள் சரி செய்யப்பட்டதாக தெரியவில்லை என்கிறார் அர்ஜூன் மீனா. இந்த நிலையிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு தனது விலையுயர்ந்த காரை கழுதையை வைத்து இழுத்து சென்று ஊர்வலம் வந்திருக்கின்றார். அப்போது, அக்காரை மேளம் அடித்தும் ஊர்வலம் அழைத்துச் சென்றிருக்கிந்றார். இந்த நிகழ்வுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் இதுபோன்று நிகழ்வு அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் கழுதுகளை வைத்து இழுத்து சென்று, கவன ஈர்ப்பு போராட்டம் செய்த சம்பவங்கள் நாட்டில் பல அரங்கேறியிருக்கின்றன. MG, Skoda, ஏன் Jaguar சொகுசு கார் உரிமையாளர்கள்கூட இது மாதிரியான சிக்கல்களைக் கடந்த காலங்களில் சந்தித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மேற்கூறிய கார்களின் வரிசையில் தற்போது Ford Endeavour காரின் உரிமையாளர் சேர்ந்திருக்கின்றார். இந்தியாவில் 2021 Ford Endeavour கார் ரூ. 33,81,600 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்சபட்ச மாடலின் விலை ரூ. 36,26,600 ஆகும்.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.0 லிட்டர் டீசல் Titanium+ 4x2 AT (விலை: ரூ. 33,81,600), 2.0 லிட்டர் டீசல் Titanium+ 4x4 AT (விலை: ரூ. 35,61,600), 2.0 லிட்டர் டீசல் Endeavour Sport 4X4 AT (விலை: ரூ. 36,26,600) ஆகிய தேர்வுகளிலேயே 2021 Ford Endeavour விற்பனைக்குக் கிடைக்கிறது.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இத்தகைய விலையுயர்ந்த காரிலேயே சிக்கல் இருப்பதாகக் கூறி அர்ஜூன் மீனா கழுதையை வைத்து இழுத்துச் சென்று சாலையில் ஊர்வலம் செய்திருக்கின்றார். இந்த சம்பவம் ஜெய்பூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ராஜஸ்தான் மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இதுமாதிரயான புகார்கள் ஏதேனும் வரும் எனில் உடனடியாக வாடிக்கையாளர்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது சட்டம் ஆகும்.

விலையுயர்ந்த Ford காரை இழுத்து சென்ற கழுதை... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் இதுமாதிரியான சட்டங்கள் இருந்தாலும், அதனை சட்ட ரீதியாக அடைய பல மாதங்கள், வருடங்கள் வரை ஆகின்றன. ஆம், இதுபோன்று வழக்குகள் தற்போதும் பல நிலுவையில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. எனவேதான், ஒரு சில வாடிக்கையாளர்கள் இதுமாதிரியான விநோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ford endeavour owner uses donkey to pull his car here is why
Story first published: Thursday, August 19, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X