வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், எஃப்-150 லைட்னிங் (F-150 Lightning) எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கை சமீபத்தில் வெளியிட்டது. அமெரிக்காவில் உள்ள டீலர்ஷிப்களுக்கு ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கடந்த மே 20ம் தேதியே இந்த வாகனத்திற்கு முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

ஃபோர்டு நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போகும் அளவிற்கு, எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. வெறும் இரண்டே நாட்களில், ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு 44,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பது, ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜிம் ஃபேர்லி இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். வெறும் 48 மணி நேரத்தில், ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு 44,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாகவும் சமூக வலை தளங்களில் அவர் தெரிவித்துள்ளார்.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

ஃபேஸ், எக்ஸ்எல்டி, லாரியட் மற்றும் பிளாட்டினம் என மொத்தம் 4 வேரியண்ட்களில், போர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் கிடைக்கும். மேலும் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மற்றும் எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் என 2 வகையான பேட்டரி தொகுப்புகளுடன் போர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் விற்பனை செய்யப்படும்.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

இதில், ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடல் 426 பிஎச்பி பவரையும், 1,051 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் மாடல் 563 பிஎச்பி பவரையும், 1,051 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இந்த எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கின் பேட்டரியை, 15 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு வெறும் 41 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

இதற்கு 150kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்த வேண்டும். ஸ்டாண்டர்டு ரேஞ்ச் மாடலின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 370 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். அதே நேரத்தில், எக்ஸ்டெண்டட் ரேஞ்ச் மாடலின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 482 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

அமெரிக்காவில் தற்போது எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் சைபர்டிரக்கிற்கும் முன்பதிவுகள் குவிந்து வருவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. டெஸ்லா சைபர்டிரக்கிற்கு தற்போது வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

வெறும் 48 மணி நேரத்தில் இவ்வளவு முன்பதிவுகளா? ஃபோர்டு எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கு உச்சகட்ட வரவேற்பு!

டெஸ்லா சைபர்டிரக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே இவ்வளவு முன்பதிவுகள் குவிந்து விட்டன. டெஸ்லா சைபர்டிரக்கின் பாணியில், ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கிற்கும் தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford F-150 Lightning Electric Pick-up Truck Receives Over 44,500 Bookings In Just 2 Days. Read in Tamil
Story first published: Wednesday, May 26, 2021, 21:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X