ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

எண்டேவியரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான டைட்டானியம் 4X2-இன் விற்பனையை இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

ஃபோர்டு எண்டேவியர் மாடல் டைட்டானியம் 4x2, டைட்டானியம்+ 4X2, டைட்டானியம்+ 4X4, ஸ்போர்ட் 4X4 என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

இதில் தற்போது டைட்டானியம் 4X2 வேரியண்ட்டின் விற்பனையை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி உள்ளது. இதனால் இனி மற்ற மூன்று வேரியண்ட்களில் தான் இந்த எஸ்யூவி கார் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது. மேலும் இதனால் எண்டேவியரின் ஆரம்ப விலை ரூ.33.80 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

இந்த அமெரிக்க கார் பிராண்டின் ப்ரீமியம் எஸ்யூவி மாடலாக விளங்கும் எண்டேவியர் 2.0 லிட்டர் ஈக்கோப்ளூ டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

இந்த என்ஜின் உடன் ஒரே ஒரு 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டுமே தேர்வாக வழங்கப்படுகிறது. இதனுடன் பிராண்டின் ‘செலக்ட்-ஷிஃப்ட்' தொழிற்நுட்பமும் வழங்கப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்டை பொறுத்து என்ஜினின் ஆற்றலை பின் சக்கரங்களுக்கோ அல்லது அனைத்து சக்கரங்களுக்கோ வழங்குகிறது.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

இவற்றுடன் மணல், பனி/சகதி, பாறை என மூன்று விதமான பாதை மேலான்மை அமைப்பும் வழங்கப்படுகிறது. எண்டேவியரில் மற்ற ஓட்டுனர் உதவி அம்சங்களாக ஹில் லாஞ்ச் உதவி, டிராக்‌ஷன் கண்ட்ரோல், மலைப்பாதைகளில் ஏறுவதற்கு தேவையான கண்ட்ரோல், வாகனம் சுழற்றலை குறைத்தல் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

வெளிப்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டிருக்கும் இந்த ஃபோர்டு காரில் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், கருப்பு நிற க்ரில், ஸ்கஃப் தட்டுகள், மேற்கூரை தண்டவாளங்கள், பக்கவாட்டு படிக்கட்டுகள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

உட்புறத்தில் 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, பனோராமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், மடக்கக்கூடிய மூன்றாம் இருக்கை வரிசை, சாவியில்லா நுழைவு மற்றும் பொத்தான் ஸ்டார்ட் முதலியவற்றை எண்டேவியர் ஏற்கிறது.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

இவை காட்டிலும் முக்கிய அம்சமாக ‘ஃபோர்டுபாஸ்' என்ற ஃபோர்டின் இணைப்பு தொழிற்நுட்பம் இந்த காரில் வழங்கப்படுகிறது. இது ஓட்டுனர் தனது எண்டேவியர் காரை தொலைவில் இருந்து கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. மேலும் வாகனத்தை பற்றிய ஏகப்பட்ட தகவல்களை வழங்குகிறது.

ஃபோர்டு எண்டேவியரின் ஆரம்ப விலை இனி ரூ.33.80 லட்சம்!! மலிவான வேரியண்ட்டின் விற்பனை நிறுத்தம்!

பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏழு காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வேக லிமிட் உடன் க்ரூஸ் கண்ட்ரோல், அவசரகால உதவி, ஆக்டிவ் பார்க்கிங் வழிக்காட்டுதல் உடன் பின்பக்கத்தை காட்டும் கேமிரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் செமி-ஆட்டோமேட்டிக் பார்க் உதவியை எண்டேவியர் ஏற்கிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford discontinues the Endeavour Titanium 4X2 base variant in India. As a result, the premium off-road SUV now retails at a starting price of Rs 33.80 lakh, ex-showroom (India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X