ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

ஃபோர்டு மஸ்டாங் கார் ஸ்டண்டின்போது விபத்தில் சிக்காமல் தப்பி செல்லும் காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

ஃபோர்டு நிறுவனத்தின் பிரபலமான சூப்பர் கார்களில் மஸ்டாங் காரும் ஒன்று. இந்த காரை இந்தியாவில் ஒரு சில நபர்களே பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இக்காரை பயன்படுத்தி வரும் ஓர் நபர், அக்காரில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றது.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

அதிர்ஷ்டவசமாக அக்கார் விபத்து போன்ற எந்தவொரு அசம்பாவிதங்களையும் சந்திக்கவில்லை. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோவை சிஎஸ்12 வ்ளாக்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் அதீத திறன் வெளிப்பாட்டிற்கு பெயர்போனவை சூப்பர் கார்கள். அந்தவகையில், பல மடங்கு வேகத்தில் செல்லக் கூடியதே ஃபோர்டு மஸ்டாங். இது மணிக்கு உச்சபட்சமாக 299 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஸ்போர்ட்ஸ் ரக காரான இதனை வழக்கமான சாலையில் வைத்து இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

அதேசமயம், முன் அனுபவம் இல்லாத நபர்களால் இக்காரை கையாள்வது என்பதும் அவ்வளவு லேசானது அல்ல. ஏனெனில் வழக்கமான கார்களை விட இது பல மடங்கு அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியது. எனவேதான் முதல் முறையாக மஸ்டாங் போன்ற சூப்பர் கார்களை கையாள்பவர்கள் லேசான சிரமங்களைச் சந்திப்பது உண்டு.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

ஆனால், ஏற்கனவே முன்னனுபவம் உள்ளவர்கள் இக்காரை கையாளும்போது எந்த சிக்கலும் இருக்காது. ஆமாங்க, கை தேர்ந்தவர்களுக்கு இக்கார் நண்பனைபோன்று இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த திறன் இக்காரில் இருக்கின்ற காரணத்தினாலயே விபத்தைச் சந்திக்க இருந்த நேரத்திலும், அதனை அது அசால்டாக தவிர்த்திருக்கின்றது.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

இதற்கு ஓட்டுநரின் கை தேர்ந்த திறனும் முக்கிய காரணமாகும். எனவேதான் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த காணொளி காட்சிகளே யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கும் வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

காரில் ட்ரிஃப்ட் செய்யும்போதே இந்த விபரீத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ஆனால், இதனை மிக லாவமாக அதன் டிரைவர் கையாண்டு விபத்தைத் தவிர்த்திருக்கின்றார். இதற்காக அவரை பலர் பாராட்டினாலும், பொது சாலையில் ஸ்டண்டில் ஈடுபட்டதற்காக பொதுமக்கள் சிலர் இளைஞரை வசைபாடி வருகின்றனர்.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

பொதுசாலையில் இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவது அபராதத்திற்கு செயலாகும். இதனைத் தடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறையினர் உச்சபட்ச அபராதங்களை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், தற்போது விதிமீறலில் ஈடுபட்டிருக்கும் சூப்பர் கார் உரிமையாளர்களுக்கும் அபராதம் வழங்க எக்கசக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த கார் ஸ்டண்ட் விதிமீறலில் மட்டும் ஈடுபடவில்லை, அது மாடிஃபிகேஷன் எனப்படும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டிருக்கின்றது. ஆகையால், நிச்சயம் அக்காருக்கு அபராதம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், தற்போது வரை அவருக்கு அபராதம் வழங்கப்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ஜஸ்ட் மிஸ்... லைட்டா அசந்திருந்தா பல கோடி ரூபாய் கார் காலியாயிருக்கும்... சாகசத்தின்போது தப்பிய மஸ்டாங் கார்!!

ஃபோர்டு மஸ்டாங் காரில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 363 பிஎச்பி மற்றும் 515 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ford Mustang GT Nearly Misses Crashes While Doing Drift. Read In Tamil.
Story first published: Monday, June 7, 2021, 17:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X