ஃபோர்டு இந்தியா இணையப் பக்கத்தில் இருந்து மஸ்டாங் கார் நீக்கம்... காரணம் இதுதான்!

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

இந்திய ஸ்போர்ட்ஸ் கார் மார்க்கெட்டில் குறைவான விலையில் மிகச் சிறந்த தேர்வாக ஃபோர்டு மஸ்டாங் கார் இருந்து வருகிறது. ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விதமான அம்சங்களுடன் நிறைவை தருவதால், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இருந்து மஸ்டாங் கார் திடீரென நீக்கப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

இருப்பினும், ஃபோர்டு மஸ்டாங் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், தற்போது இணையப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

இதுவரை விற்பனையில் இருந்த ஃபோர்டு மஸ்டாங் கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட 2 டோர் கூபே ரகத்தை சேர்ந்தது. இந்த மாடலில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 396 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மாடலைவிட சற்றே குறைவான பவரை வெளிப்படுத்தும் விதத்தில், இந்திய மாடல் இருந்து வந்தது. இந்திய மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருந்தது.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

இந்த நிலையில், அதிக செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் கூடுதல் மாற்றங்கள் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலானது 2018ம் ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பர்களுடன் மாற்றம் கண்டுளளது. இந்த காரில் 12 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி லைட்டுகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் புதிய ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 569 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய இணையப்பக்கத்தில் இருந்து நீக்கம்!

நடப்பு ஆண்டு மத்தியில் அல்லது பிற்பாதியில் புதிய ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. விலை சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படும். இந்த புதிய மாடல் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்துவதாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has removed Mustang sports car from Indian website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X