நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

புதிய டாடா சஃபாரி கார் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

டாடா கிராவிட்டாஸ் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் கிராவிட்டாஸ் காரை சஃபாரி என ரீபேட்ஜ் செய்வதாக அறிவித்து தற்போது டாடா மோட்டார்ஸ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக டாடா சஃபாரி கடந்த 2019ம் ஆண்டு விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

வரும் ஜனவரி 26ம் தேதி டாடா சஃபாரி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. அதன்பின்னர் வெகு விரைவில் விற்பனைக்கும் கொண்டு வரப்படும். இந்த சூழலில் புதிய டாடா சஃபாரி குறித்து தற்போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், வேரியண்ட்கள், இருக்கை அமைப்பு, வண்ணங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை குறித்த தகவல்கள் அடங்குகின்றன.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

டாடா கிராவிட்டாஸ் காரை நாம் 2020 ஆட்டோ எக்ஸ்போவிலும், அதற்கு முன்னதாக 2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் பஸ்ஸார்டு என்ற பெயரிலும் பார்த்துள்ளோம். இடைப்பட்ட காலத்தில் இந்த எஸ்யூவியை டாடா படிப்படியாக மேம்படுத்தியுள்ளது. டீம் பிஎச்பி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய டாடா சஃபாரி மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கும்.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

பேஸ் வேரியண்ட் XE என்ற பெயரில் அழைக்கப்படும். இதற்கு அடுத்தபடியாக XM வேரியண்ட் இருக்கும். அதே சமயம் XZ டாப் வேரியண்ட்டாக இருக்கும். XZ வேரியண்ட்டிற்கு கீழாக XT நிலைநிறுத்தப்படும். இரண்டாவது வரிசையில் 2 விதமான இருக்கை அமைப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

இதன்படி 7 சீட்டர் மாடலின் இரண்டாவது வரிசையில் பென்ச் வகை இருக்கை அமைப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் அமர முடியும். அதே சமயம் 6 சீட்டர் மாடலின் இரண்டாவது வரிசையில் இரண்டு தனித்தனி கேப்டன் இருக்கைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

மேலும் தற்போது வரை ராயல் ப்ளூ, ஆர்கஸ் ஒயிட் மற்றும் டேடோனா க்ரே என புதிய டாடா சஃபாரி காரில் மூன்று வண்ண தேர்வுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பொதுவாகவே டாடா நிறுவனம் பாதுகாப்பு வசதிகளில் குறை வைக்காது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதன்படி புதிய டாடா சஃபாரி காரில், ரியர் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

அதே சமயம் டாப் 2 வேரியண்ட்களான XT மற்றும் XZ வேரியண்ட்களில் பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம்.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

ஜனவரி 26ம் தேதி வெளியிடப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் தொடங்கப்படும். ஜனவரி கடைசி வாரத்தில் டீலர்ஷிப்களுக்கு டெஸ்ட் டிரைவ் கார்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்னதாக ஜனவரி 3வது வாரத்தில் டீலர்ஷிப் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹாரியரை விட புதிய டாடா சஃபாரி 63 மிமீ நீளமாகவும், 80 மிமீ உயரமாகவும் இருக்கும்.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

எனவே தாராளமான இடவசதியை எதிர்பார்க்கலாம். அதே சமயம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் ஏசி வெண்ட்கள், டிரைவிங் மோடுகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் எகிறும் எதிர்பார்ப்பு... புத்தம் புதிய டாடா சஃபாரி கார் குறித்த ஃப்ரெஷ் தகவல்கள்...

அதே சமயம் டாடா ஹாரியர் எஸ்யூவியில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுதான் புதிய டாடா சஃபாரி காரிலும் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய டாடா சஃபாரி தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Fresh Details Of 2021 Tata Safari Leaked. Read in Tamil
Story first published: Tuesday, January 12, 2021, 21:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X