சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்.. ஒற்றை முழு சார்ஜில் 1000கிமீ போகும்! இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

சீனா கார் உற்பத்தி நிறுவனமான ஜிஏசி அயோன் எல்எக்ஸ் ப்ளஸ் எனும் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜிஏசி குழுமம் (GAC Group), அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. தனது அயோன் (Aion) பிராண்டில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அக்காருக்கு அயோன் எல்எக்ஸ் ப்ளஸ் ( Aion LX Plus) எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஓர் க்ராஸோவர் ரக எலெக்ட்ரிக் காராகும்.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

இதனையே ஒற்றை முழுமையான சார்ஜில் 1000 கிமீ தூரம் பயணிக்கும் திறனில் ஜிஏசி குழுமம் உருவாக்கியிருக்கின்றது. மிக விரைவில் இந்த அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் சீன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் இதன் வருகையை எதிர்நோக்கி சீனர் காத்திருக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஒரு முழுமையான சார்ஜில் 500 கிமீ தூரம் வரை மட்டுமே ரேஞ்ஜ் கொடுக்கும் திறனில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. எனவே சீனா நாட்டில் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் இக்கார் இந்தியர்களை சற்றே பொறாமையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

சீன நிறுவனம் இந்த காரை முதன் முதலில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குவாங்சூ ஆட்டோ ஷோ (Guangzhou)-விலேயே உலகளவில் வெளியீடு செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை மீண்டும் ஒரு முறை வெளியீடு செய்து உலக மின் வாகன பிரியர்களைக் கவர்ந்திருக்கின்றது.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

2022 ஜனவரி 6ம் தேதி அன்று இந்த கார் சீனாவில் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. இக்காரில் 1000 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வகையில் 144.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அயோன் எல்எக்ஸ் ப்ளஸ் எலெக்ட்ரிக் காரின் உயர் நிலை வேரிண்டிலேயே இந்த உச்சபட்ச திறன் கொண்ட பேட்டரி இடம் பெற இருக்கின்றது.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

இந்த பேட்டரியை ஜிஏசி நிறுவனமே உற்பத்தி செய்திருக்கின்றது. எளாஸ்டிக் ஷீட்டுகளைக் கொண்டு இப்பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், 20 சதவீத சிறியதாகவும், 14 சதவீதம் இலகு ரகத்திலும் இப்பேட்டரி காணப்படுகின்றது. இது ஒரு கிலோ அடர்த்திக்கு 205 Wh ஆற்றலைக் கொண்டிருக்கின்றது.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

பிராண்டின் கூற்றுப்படி, இந்த பேட்டரி தொழில்நுட்பம், குளிர்ந்த வெப்பநிலையில் மேம்படுத்தப்பட்ட ஆற்றல், சக்தி மற்றும் செயல் திறன் ஆகியவற்றை வெளியேற்றும். சிலிக்கான் ஸ்பாஞ்சு தொழில்நுட்பமும் இப்பேட்டரியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலிக்கான் கொண்ட அனோட் ஒரு ஸ்பாஞ்சு மென்மையானதாக செயல்படும்.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

தொடர்ந்து, ஜிஏசி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரில் இரு மின் மோட்டார்களை பயன்படுத்தியுள்ளது. இது அனைத்து (நான்கு) வீல்களுக்கும் இயங்கு திறனை வழங்கும். மேலும், இந்த செட்-அப் 225 குதிரை திறனை வழங்கும். மேலும், வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தையும் இந்த மோட்டார்கள் வெளிப்படுத்தும்.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

ஒன்றரை தசாப்தங்களுக்கும் அதிகமான ஆண்டு காலமாக இந்த கான்செப்ட் உருவாக்கப்பட்டை நிறுவனம் உருவாக்கி வந்ததாக தெரிவித்திருக்கின்றது. இதனையே ஷாங்காய் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தியது. இது காட்சிப்படுத்திய அயோன் வி ப்ளஸில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வெறும் 8 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை செய்யும்.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

அதேநேரத்தில் வெறும் 5 நிமிடங்களில் 30-80 சதவீதம் வரை இது சார்ஜ் பெற்றுவிடும். இத்தகைய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையே ஜிஏசி இக்காரில் வழங்கி வருகின்றது. இந்த சிறப்பு வசதிகள் ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்களையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்... ஒரு முற சார்ஜ் பண்ணா 1000 கிமீ போகும்... இப்படி ஒரு இ-கார் இங்கே வர மாட்டிக்குதே!

சீனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் சிலவற்றிலும் இக்காரை விற்பனைக்குக் கொண்டு செல்ல தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆனால், இதன் இந்திய வருகை என்பது கேள்விக்குறியே. அதேநேரத்தில் இந்தியாவில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Most Read Articles

English summary
Gac unveild aion lx plus e crossover car with 1000 km range
Story first published: Friday, December 24, 2021, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X