நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

குஜராத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Limited) நிறுவனத்துடனான டெண்டர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குஜராத் மாநில அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு, 10 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை வழங்கியுள்ளதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்த அரசு அதிகாரிகள், ஒற்றுமையின் சிலையுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

இந்தியாவின் சுதந்திர தினம் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. அப்போது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. குஜராத் மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை குஜராத் மாநில அரசு வழங்குகிறது. நேற்று முன் தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் மிகவும் குறைவு. இதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அம்மாநில அரசு வழங்கி வரும் மானியமே காரணம்.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 30.2 kWh லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

இஇஎஸ்எல் நிறுவனம் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். உற்பத்தியாளர்களிடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் இஇஎஸ்எல் நிறுவனம் அவற்றை அரசு துறைகள் மற்றும் கேப் நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி வருகிறது.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

தற்போது குஜராத் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு புதிய தயாரிப்புகள் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டுள்ளன.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

ஆனால் இதில் சுமார் 70 சதவீத சந்தை பங்கை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கொண்டுள்ளது. இந்திய சாலைகளில் தற்போதைய நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இயங்கி கொண்டுள்ளன. இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

இதை வைத்து பார்க்கும்போது, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விற்பனை என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் கிடையாது. எனினும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்களுக்கு மாற்றாக இதனை குறிப்பிடலாம்.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா நெக்ஸான் ஐசி இன்ஜின் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது. இதை தொடர்ந்து அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ஐசி இன்ஜின் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஆனால் இதன் அறிமுகம் எப்போது? என்ற உறுதியான தகவல் எதுவும் தற்போதைக்கு நமக்கு கிடைக்கவில்லை.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

அதேபோல் மஹிந்திரா நிறுவனமும் தனது எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் வரும் காலங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது வேண்டுமானால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 என இரண்டு கார்களின் ஐசி இன்ஜின் மாடல்களும் மிகவும் பாதுகாப்பானவை.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இந்த இரண்டு கார்களும் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பை ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளன. இந்தியாவை சேர்ந்த இந்த இரண்டு நிறுவனங்களும் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தரமான கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்.

நாட்டிலேயே ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை மிக குறைவு! குஜராத்தில் இன்னொரு தரமான சம்பவம்! தமிழ்நாடு கத்துக்கணும்!

இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என்பதே உண்மை. ஆனால் வரும் காலங்களில் தமிழ்நாட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாம் நம்பலாம்.

Most Read Articles

English summary
Gujarat acquires 10 tata nexon electric suv s here are all the details
Story first published: Tuesday, August 17, 2021, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X