"நீங்கள் இல்லை என்பது என்னை அழ வைக்கிறது"... சோகத்தில் மூழ்க வைத்த பிரபல கிரிக்கெட் வீரரின் டுவிட்டர் பதிவு!

இழந்த தந்தையை நினைத்து பிரபல கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் வெளியிட்ட டுவிட்டர் பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. இளைய மற்றும் சுறு சுறுப்பான விளையாட்டுக்கு பெயர்போன இவர், இந்திய அணிக்காக ஆற்றிய பணிகள் ஏராளம். இவரின் தந்தை ஹிமான்சு பாண்டியா. இவரே கடந்த ஜனவரி 16ம் அன்று இருதய அடைப்பு நோயின் காரணமாக உயிரிழந்தார். இவரின் இழப்பில் இருந்து தற்போது வரை அவரது குடும்பத்தினர் மீளவில்லை என தெரிகின்றது.

குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்திக் பாண்டியா, அவரது தந்தையை எண்ணி தற்போதும் மிகுந்த வேதனையில் இருப்பதை அவரது சமூக வலை தள பக்கங்கள் காண்பிக்கின்றன. சமீபத்திய டுவிட்டர் பதிவில், முதல் முறையாக தனது தந்தைக்கு ஆச்சரிய பரிசாக ஜீப் காம்பஸ் காரை வழங்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, மிகுந்த நெகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கின்றார், பாண்டியா.

இதுமட்டுமின்றி அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற சில வீடியோக்களையும் பதிவிட்டு அவரின் (தந்தையின்) நினைவில் மீண்டும் மூழ்கியிருக்கின்றார். "நீங்கள் இங்கு இல்லை என்பது என்னை அழுக வைக்கின்றது! மிட்டாயைப் பார்த்த சிறு பிள்ளை ஆனந்தமடைவதைப்போல் உங்களின் இந்த சிரிப்பைப் பார்க்கையில் எனக்குள்ளும் மகிழ்ச்சி உண்டாகின்றது. நான் உங்களை மிகவும் மிஸ் செய்கின்றேன். லவ் யூ அப்பா" என அவர் பதிவிட்டிருக்கின்றார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்த பதிவு அவரின் ரசிகர்கள் மத்தியில் பெருத்த நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது தந்தையை ஆனந்தப்படுத்த ஜூப் நிறுவனத்தின் சொகுசு காரை வழங்கியிருக்கின்றாரா? எனவும் ஆச்சரியமடைய வைத்திருக்கின்றது.

ஹர்திக் பரிசாக வழங்கியது ஜீப் நிறுவனத்தின் லிமிடெட் எடிசன் காம்பஸ் மாடல் காராகும். இதனை வீடியோவில் டீலர்ஷிப் மையத்தின் பணியாளர் விளக்குவதை நம்மால் கேட்க முடிகின்றது. தற்போது இந்த வெர்ஷனிலான ஜீப் காம்பஸ் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய தலைமுறை காம்பஸ் மாடல் காரே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

புதிய தலைமுறை காம்பஸ் காரை கடந்த ஜனவரி 27ம் தேதி அன்றே ஜீப் நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியது. இக்காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்தும் பல்வேறு புதுப்பித்தல்களுடன் காட்சியளிக்கின்றது. ஆகையால், பழைய மாடலைக் காட்டிலும் புதிய மாடல் காம்பஸ் அட்டகாசமான சிறப்பம்சங்களைக் கொண்ட காராக காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், புத்தம் புதிய பகல் நேர எல்இடி மின் விளக்கு, ஸ்லீக் ரகத்திலான ஹெட்லேம்ப், 7 பலகைகளை நிலை நிறுத்தியதைப் போன்ற க்ரில், அதிக இட வசதி என எக்கசக்க அம்சங்களுடன் இக்கார் இம்முறை விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதேபோன்று காரின் உட்பகுதியில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரு சில பாகங்களை புதுப்பித்து பொருத்திய ஜீப், டேஷ்போர்டு விஷயத்தில் சமரசம் ஏதுமின்றி முழுக்க முழுக்க புதிய ஒன்றை பயன்படுத்தியிருக்கின்றது. 10.1 இன்சிலான எஃப்சிஏ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இதில் காண முடிகின்றது. இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகளைக் கொண்டது.

இதுதவிர, 3 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் இரு தையல்கள் கொண்ட லெதர் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என பலவற்றை காரின் உட்பகுதியில் நம்மால் காண முடிகின்றது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உருவம், தோற்றம் மற்றும் வசதி ஆகியவற்றை சார்ந்தே அமைந்திருக்கின்றன. ஆகையால், எஞ்ஜினைப் பொருத்தவரை எந்தவொரு மாற்றத்தையும் ஜீப் காம்பஸ் காரில் வழங்கவில்லை.

இந்த கார் தற்போதும் 170பிஎஸ், 350 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடிய 2.0 லிட்டர் மல்டிஜெட் 2 டீசல் எஞ்ஜின் மற்றும் 163 பிஎஸ், 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் என இருவிதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இதில் டீசல் எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும், பெட்ரோல் எஞ்ஜின் 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைத்து வருகின்றன. இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 16.99 இல் இருந்து தொடங்குகின்றது. இதன் உச்சபட்ச விலை ரூ. 28.29 லட்சங்கள் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hardik Pandya Shares Emotional Video Of His Father. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X