விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் கத்தாரில் செயல்பாடும் ஓர் உணவகத்தைப் பார்த்து மிரண்டுபோனதாகவும், அதுகுறித்து வைரலாகி வரும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

உலக நாடுகள் அனைத்தும் கொடிய வைரஸ் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைக்கும் நோக்கில் அதிக கட்டுப்பாடுகளை உலக நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டிலும் கடும் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

அங்கு, உணவகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விதிகள் காரணமாக ஓர் தனியார் உணவு விடுதி விநோதமாக தங்களின் வாடிக்கையாளர்களை உபசரிக்கத் தொடங்கியுள்ளது.

விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

அதன் விநோத உபசரிப்புகுறித்த வீடியோவை பிரபல இந்திய தொழிலதிபர் ஒருவர் தற்போது பகிர்ந்துள்ளார். உணவகம், வாடிக்கையாளர்களுக்கான உணவை நேரடியாக காருக்கே கொண்டு தரக்கூடிய வீடியோதான் அது. இந்த வீடியோவையே ஆர்பிஜி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயன்கா பகிர்ந்துள்ளார்.

விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

முன்னதாக இவ்வீடியோவை கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் மலையாளி ஒருவர் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது அதிகளவில் வைரலானதை அடுத்து தொழிலதிபர் ஹர்ஷ் கோயன்காவின் கண்களில் சிக்கியிருக்கின்றது.

விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

இதையடுத்தே காருக்குள் உணவு பரிமாறும் விநோத உணவகம் குறித்த வீடியோவை அவர் பகிர்ந்திருக்கின்றார். சாப்பாட்டு மேஜைக்காக உணவகம், மரத்தாலான ஓர் பலகையைப் பயன்படுத்தியிருக்கின்றது. நீளமான அந்த பலகை காரின் இரு பக்க ஜன்னல்கள் மீதும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

மேலும், ஆடாத வகையில் இருக்கும் வகையிலும் அந்த உணவகம் மரப் பலகையை தயார் செய்திருக்கின்றது. இதைக்கொண்டே உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவுகளை ரெஸ்டாரண்ட் பரிமாறி வருகின்றது. உணவகங்களுக்குள் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணுவதற்கு தடை விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கையில் கத்தாரைச் சேர்ந்த உணவம் களமிறங்கியிருக்கின்றது.

இந்தியாவில் காரில் இருந்தபடியே கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. மிக சமீபத்தில் டெல்லியின் துவார்கா பகுதியில் காரில் அமர்ந்தபடியே பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

விநோத ரெஸ்டாரண்டை பார்த்து மிரண்டுபோன தொழிலதிபர்... ஹோட்டலுக்கு உள்ளே தான சாப்பிட கூடாது...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதிலும் இதுமாதிரியான விநோத சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, கார்கள் ஆம்புலன்ஸாக மாற்றப்படுவது, வாகனங்கள் காய்கறி கடைகளாக மாறுவது போன்ற பல்வேறு விநோத சம்பவங்கள் அரங்கேறி மக்களை ஈர்த்து வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Harsh Goenka Shared Video About 'In Car Dining' Restaurant. Read In Tamil.
Story first published: Friday, May 28, 2021, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X