அரசியல்வாதிகளுக்கு பிடிச்ச காரை வீட்டு வாசலில் கொண்டுவந்து நிறுத்திய மகன்.. சந்தோஷத்தில் அசந்துபோன தாய்-தந்தை!

அரசியல்வாதிகளின் பிரியமான கார் ஒன்றை தாய், தந்தைக்கு ஆச்சரிய பரிசாக வழங்கியிருக்கின்றார் ஹரியான மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அரசியல்வாதிகளுக்கு ரொம்ப பிடிச்ச கார்... அப்பா, அம்மாவுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்திய இளைஞர்...

டொயோட்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி-யும் ஒன்று. இந்த காரே இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான காராகவும் இருக்கின்றது. பெரும்பாலான அரசியல்வாதிகளிடத்தில் இக்கார் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அரசியல்வாதிகளுக்கு ரொம்ப பிடிச்ச கார்... அப்பா, அம்மாவுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்திய இளைஞர்...

அதிக இடவசதி, சொகுசு மற்றும் கம்பீரமான உருவம் ஆகியவற்றால் அநேகரை இக்கார் கவர்ந்து வருகின்றது. அந்தவகையில், அரசியல்வாதிகள் மட்டுமின்றி தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் சிலரையும் இக்கார் கவர்ந்திருக்கின்றது.

அரசியல்வாதிகளுக்கு ரொம்ப பிடிச்ச கார்... அப்பா, அம்மாவுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்திய இளைஞர்...

இத்தகைய சிறப்பான காரையே இந்திய இளைஞர் ஒருவர் தனது தாய்-தந்தைக்கு பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார். இந்த குடும்பத்தினர் பற்றிய முழுமையான விபரம் வெளிவரவில்லை. அதேசமயம், இது ஹர்யானா மாநிலத்தில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரின் பதிவெண்ணும் இதையே உறுதி செய்கின்றது.

அரசியல்வாதிகளுக்கு ரொம்ப பிடிச்ச கார்... அப்பா, அம்மாவுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்திய இளைஞர்...

தாய், தந்தைக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் இந்தியாவில் ரூ. 30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்பநிலை மாடலின் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை வேரியண்டான ஃபார்ச்சூனர் லெஜண்டரின் விலை ரூ. 39 லட்சங்கள் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அரசியல்வாதிகளுக்கு ரொம்ப பிடிச்ச கார்... அப்பா, அம்மாவுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்திய இளைஞர்...

இத்தகைய விலையுயர்ந்த சொகுசு வசதிகள் அதிகம் கொண்ட காரையே தனது தாய்-தந்தையர்களின் பயணத்திற்காக இளைஞர் தற்போது வாங்கிக் கொடுத்துள்ளார். எதற்காக இப்பரிசு வழங்கப்பட்டது என்ற துள்ளியமான தகவல் தெரியவில்லை. அதேசமயம், வெளிவந்துக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, இக்காரை தாய்-தந்தையரின திருமண நாளை முன்னிட்டு வாங்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

அரசியல்வாதிகளுக்கு ரொம்ப பிடிச்ச கார்... அப்பா, அம்மாவுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்திய இளைஞர்...

2021 மாடல் ஃபார்ச்சூனரை டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது. லெஜண்டர் எனும் கூடுதல் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் இக்கார் அதிக ஸ்போர்ட்ஸ் மற்றும் லக்சூரி வசதிகளைக் கொண்ட மாடலாக இருக்கின்றது. எனவேதான் இதன் விலையும் பல மடங்கு உயர்வாக இருக்கின்றது.

அரசியல்வாதிகளுக்கு ரொம்ப பிடிச்ச கார்... அப்பா, அம்மாவுக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்திய இளைஞர்...

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றுடன் கூடிய இணைப்பு வசதிக் கொண்ட பெரிய திரை, 11 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுமட்டுமின்றி காற்றோட்டத்தை உறுதிப்படுத்தக் கூடிய இருக்கைகள், சன்ரூஃப் போன்ற பிரீமியம் வசதிகளுடன் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தற்போது டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் வி-ஜிடி ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 164 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இதேபோன்று, வி-ஜிடி எஞ்ஜின் 204 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Haryana Youngman Gifted Toyota Fortuner Luxury SUV To His Parents. Read In Tamil.
Story first published: Tuesday, May 18, 2021, 13:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X