தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக மைலேஜ் தரும் கார்களின் ஃப்ரெஷ் லிஸ்டை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வரும் தீபாவளி பண்டிகை தினத்தில் புதிய காரை வாங்குவோர்க்கு உதவும் வகையில் இப்பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

தீபாவளி பண்டிகைத் தினத்தை ஒட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் வாகன நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையில் அதிக மைலேஜ் தரும் கார்களை தேர்வு செய்ய உதவும் விதமாக இப்பதிவை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம். ஆம், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

இந்தியர்கள் மத்தியில் மைலேஜ் அதிகம் தரும் கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. தற்போது பெட்ரோல, டீசல் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. ஆகையால், பலர் அதிக மைலேஜ் தரும் வாகனங்களை தேட தொடங்கியிருக்கின்றனர். இதுமாதிரியானோர்க்கு உதவும் பொருட்டு மிக சிறந்த மைலேஜ் திறன் கொண்ட கார்களின் பட்டியல் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 5 கார்கள் பற்றிய தகவல் வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios):

மைலேஜ்: டீசல் 26.2 கிமீ, சிஎன்ஜி 18.9 கிமீ

புதிய மாசு உமிழ்வு இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பின்னர் பெரும்பாலான டீசல் வாகனங்களின் வர்த்தகம் நிறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, சிறிய எஞ்ஜின் கொண்ட டீசல் எஞ்ஜின் வாகனங்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இந்த விஷயத்தில் மாறுபட்டு செயல்படுகின்றன. அந்தவகையில், ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியாஸ் கார் மாடலில் தற்போதும் டீசல் எஞ்ஜின் தேர்வை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

இத்துடன், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வும் இந்த காரில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், டீசல் எஞ்ஜின் தேர்வே அதிக மைலேஜை தருகிறது. இது ஒரு லிட்டர் டீசலுக்கு 26.2 கிமீ மைலேஜை வாரி வழங்குகின்றது. இதற்கு அடுத்தபடியாக சிஎன்ஜி தேர்வு இருக்கின்றது. இது அதிகபட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 18.9 கிமீ மைலேஜ் வழங்குகிறது. தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. ஆகையால், இதன் சிஎன்ஜி வெர்ஷனை தேர்வு செய்வது மிக சிறந்தது.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

ஹூண்டாய் அவுரா (Hyundai Aura):

மைலேஜ்: டீசல் 25.35 கிமீ, சிஎன்ஜி 28 கிமீ

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காரை போலவே அவுரா செடான் ரக காரும் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 1.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் மற்றும் பெட்ரோல் - சிஎன்ஜி வசதிக் கொண்ட 1.2 லிட்டர் ஆகிய மோட்டார் தேர்வில் ஹூண்டாய் அவுரா விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், டீசல் மோட்டார் 25.35 கிமீ ரேஞ்ஜையும், சிஎன்ஜி 28 கிமீ ரேஞ்ஜையும் வழங்குகின்றது.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

டாடா டியாகோ (Tata Tiago):

மைலேஜ்: பெட்ரோல் 23.84 கிமீ

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக டியாகோ இருக்கின்றது. இது ஓர் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட காராகும். குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வின் வாயிலாகவே இந்த கார் மிக அதிக பாதுகாப்பான வாகனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது ஒற்றை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எஞ்ஜினே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.84 கிமீ வரை மைலேஜ் வழங்குகின்றது. இது மிக சிறந்த மைலேஜ் திறன் ஆகும்.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

அண்மையில், விற்பனைக்கு வந்த டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து என்ற பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது குறிப்பிடத்தகுந்தது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங் ஆகும். சிறியவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கை பஞ்ச் பெற்றிருக்கின்றது.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

மாருதி சுசுகி வேகன்-ஆர்

மைலேஜ்: பெட்ரோல் எஞ்ஜின் 21.79 கிமீ, சிஎன்ஜி 32.52 கிமீ

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் வேகன்-ஆர் மாடலும் ஒன்று. இந்த கார் தற்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 21.79 கிமீ மைலேஜும், 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 20.52 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மோட்டார் 32.52 கிமீ மைலேஜையும் வழங்கும்.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

ரெனால்ட் கைகர்

மைலேஜ்: பெட்ரோல் 20.53 கிமீ

நாட்டின் மலிவு விலை காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ரெனால்ட் கைகர். இந்த காரே இப்பிரிவின் மிக அதிக ரேஞ்ஜை வழங்கும் காராக இருக்கின்றது. நிஸான் மேக்னைட் உள்ளிட்ட மாடல்களைக் காட்டிலும் அதிக மைலேஜை இது வழங்குகின்றது. அதிகபட்சமாக 20.53 கிமீ வரை இதன் பெட்ரோல் எஞ்ஜின் மைலேஜ் வழங்குகின்றது.

தீபாவளிக்கு புது கார் வாங்க போறீங்களா... இதோ உங்களுக்காக இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியல்!!

மேலே பார்த்த அனைத்து மைலேஜ் தகவலும் அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இந்த பண்டிகைக் காலத்தில் புதிய காரை வாங்க செல்வோர்க்கு உதவும் விதமாக நாட்டின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றோம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here fresh list of top 5 most fuel efficient cars
Story first published: Thursday, October 21, 2021, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X