10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் மோசமான ஆண்டாக நடப்பு 2021ம் ஆண்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் அமைந்திருப்பதாக ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) அறிவித்திருக்கின்றது. இதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் துரதிர்டவசமான ஆண்டாக 2021 இந்திய வாகனத்துறைக்கு அமைந்திருக்கின்றது. பொதுவாக, திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்கள் என்றாலே அந்த மாதத்தில் புதிய வாகனங்களின் விற்பனைச் சூடிபிடித்த வண்ணம் காணப்படும். வழக்கமான மாதங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகளவில் விற்பனை இருக்கும்.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

ஆனால், இந்த ஆண்டு அதுமாதிரி எந்த நிகழ்வும் இந்தியாவில் தென்படவில்லை எனவேதான். இந்திய வாகனத்துறைக்கு 2021ம் ஆண்டின் இந்த பண்டிகைக் காலம் மிகவும் அவலமான பண்டிகைக் காலமாக மாறியிருக்கின்றது. இந்திய வாகனத்துறையின் இந்த நிலைமைக்கு ஐந்து காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

செமிகன்டக்டர் பற்றாக்குறை (semiconductor shortage)

இந்த பிரச்னை இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தென்படுகின்றது. பல நிறுவனங்கள் செமிகன்டக்டர் பற்றாக்குறை பிரச்னையால் வாகன உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றன. இதனால், உரிய நேரத்தில் வாகனங்களை டெலிவரி கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. இந்த நிலை நிறுவனங்களின் வருமானத்திற்கு ஆப்பு வைத்திருக்கின்றது.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்களின் மிக மோசமான நிலைமைக்கு இதுவும் ஓர் காரணமாக பாரக்கப்படுகின்றது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில செமி கன்டக்டர் பற்றாக்குறை பிரச்னையால் தங்களுக்கு கிடைத்திருக்கும் புக்கிங்குகளை ரத்து செய்யத் தொடங்கியிருக்கின்றன. இது ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தாலும், பல நிறுவனங்கள் இதனால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றன. இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸும் கூட செமிகன்டக்டர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு 6 மாதங்கள் காத்திருப்பு காலமும், பிற தயாரப்புகளுக்கு 2 மாதங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் உருவாகியுள்ளது.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

விலை உயர்வு

அண்மைக் காலங்களாக புதிய வாகனங்களின் விலை உயர்த்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன. மாருதி சுசுகி தொடங்கி நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வரை அண்மையில் அதன் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தின. வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான செலவு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வைச் செய்து வருகின்றன. இதனால், முன்னதாக மலிவு விலையில் விற்கப்பட்டு வந்த கார்கள் சில சற்றே காஸ்ட்லியானதாக மாறியிருக்கின்றன. இதன் விளைவாக தற்போது விற்பனை பாதிக்கத் தொடங்கியுள்ளது.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

கொரோனா வைரஸ்

செமி கன்டக்டர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்றது. வாகன உற்பத்தியைப் போலவே வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியையும் மிகக் கடுமையாக இது பாதிக்கச் செய்தது. இதன் விளைவாக இந்திய வாகன உலகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கின்றது.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

எரிபொருள் விலை உயர்வு

இந்தியாவில் அண்மைக் காலமாக எரிபொருளின் (பெட்ரோல், டீசல்) விலை மிகக் கடுமையாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக மக்கள் பலர் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அதேநேரத்தில், பலர் வாகனங்களின் தொடர் விலை உயர்வு மற்றும் எரிபொருளின் தொடர் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் புதிய வாகனம் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டிருக்கின்றனர்.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

தற்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110 தாண்டி விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையும் இந்திய வாகன உலகின் தற்போதைய துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

10 ஆண்டுகளில் இதுமாதிரியான ஓர் மோசமான ஆண்டு அமையவில்லை! இதோ இதற்கான ஐந்து காரணிகளின் பட்டியல்!

புதுமுகங்களின் வரவு குறைவு

சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இந்தியர்களையும், இந்திய வாகன உலகத்தையும் அலங்கரிக்கும் வகையில் புதுமுகங்களைக் களமிறக்கியிருக்கின்றன. அதேநேரத்தில், மாருதி சுசுகி சில முன்னணி நிறுவனங்கள் புதுமுகங்களைக் களமிறக்குவதில் தவறிவிட்டன. இதுவும், தற்போது மிகக் குறைவான வாகன விற்பனையை இந்திய வாகனம் உலகம் பெற முக்கிய காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Here is 5 factors that are having an overbearing impact on the Indian automotive sector
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X