ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

ஒரு மினி ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன் உடன் ஓர் கார் உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. யுட்யூப் சேனல் ஒன்று வெளியிட்ட வீடியோவின் வாயிலாக இந்த தகவல் வெளி வந்துள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே பார்க்கலாம், வாங்க.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

ஓர் ஹெலிகாப்டரின் எடையையே தாங்கி நிற்கும் திறனை ஓர் கார் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கோடா நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் கோடியாக் எஸ்யூவியும் ஒன்று. இந்த கார் மாடலே ஓர் மினி ஹெலிகாப்டரை தனக்கு மேல் தாங்கி நிற்கும் திறனுடன் உருவாகியிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் வீடியோ பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

டாப் கியர் எனும் யுட்யூப் சேனலே இந்நிகழ்வு குறித்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. வீடியோவில் இடம் பெற்றிருப்பது இன்னும் விற்பனைக்கே வராத புதிய தலைமுறை கோடியாக் ஆகும். மிக விரைவில் அது விற்பனைக்கு இருக்கின்றது. இந்த நிலையிலேயே கோடியாக் பக்கம் மக்களைக் கவரும் விதமாக புதிய விளம்பர வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

புதிய தலைமுறை கோடியாக் இந்தியாவில் நட்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உற்பத்தி பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு அறிமுகத்தை முன்னிட்டு கோடியாக் இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

இதைத் தொடர்ந்து புதிய தலைமுறையாக கோடியாக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஒட்டுமொத்த எஸ்யூவி கார் பிரியர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் புதிய கோடியாக் பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

இதன் வாயிலாக அதிக எடையைக் கூட தாங்கும் திறன் உடன் 2021 கோடியாக் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதுகுறித்த வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த வாகன பிரியர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக இதேபோன்று புதிய தலைமுறை க்ரெட்டா காரின் அதிக உறுதியான கட்டுமானத்தை வெளிக்காட்டும் வகையில் ஓர் வீடியோவை ஹூண்டாய் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

இந்த நிலையிலேயே கோடியாக் காரின் உறுதி தன்மையை வெளிக்காட்டும் வகையில் ஸ்கோடா நிறுவனம் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. புதிய 2021 கோடியாக் அதிக கவர்ச்சியான கார் மாடலாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, பட்டாம்பூச்சியை பிரதிபலிக்கும் ஸ்டைலிலான க்ரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் உள்ளிட்டவை 2021 கோடியாக்-இல் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

காரின் பின் பக்கத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து, ரூஃப் ரெயில், சுறா துடுப்பு தோன்ற அமைப்பு உடைய ஆன்டெனா, புதிய ஸ்டைலிலான அலாய் வீல் மற்றும் ஸ்பாய்லர் ஆகியவையும் காரின் கவர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

வெளிப்புறத்தைப் போலவே கோடியாக்-இன் உட்புறத்திலும் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், இரு ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல், புதிய ஸ்டைலான மற்றும் அதிக சொகுசான வசதி கொண்ட இருக்கைகள், தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கு பதிலாக புதிய டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு ஹெலிகாப்டரையே தாங்கி நிற்கும் திறன்! அட என்ன காருங்க இது? வீடியோவ பாத்தீங்க மெர்சலாயிடுவீங்க!

தொடர்ந்து, பனோரமிக் சன்ரூஃப், பன்முக வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், பன்முக ஏர் பேக், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, பிரீமியம் ஸ்பீக்கர், வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆர்ம்ரெஸ்ட், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் என பல தரப்பட்ட பிரீமியம் வசதிகளுடம் 2021 கோடியாக் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு வழங்கப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூவல் க்ளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Here is a video helicopter lands on the roof of a skoda kodiaq suv
Story first published: Monday, October 4, 2021, 17:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X