Just In
- 6 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 9 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 9 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 11 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புத்தம் புதிய காரில் வந்த பிரச்னை! டாடா எடுத்த நடவடிக்கையால் மிரண்டுபோன சஃபாரி ஓனர்! வீடியோவே வெளியிட்டுட்டாரு
டாடா மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் புத்தம் புதிய சஃபாரி காரின் உரிமையாளர் மிரண்டுபோயிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

பொதுவாகவே, காரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதனை சரி செய்ய சர்வீஸ் சென்டருக்கு எடுத்து வரவே பெரும்பாலான வாகன விற்பனையாளர்கள் அறிவுருத்துவர். ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த சம்பவத்தில் வேறு விதமான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றார் புதுமுக வரவு சஃபாரி எஸ்யூவி கார் உரிமையாளர்.

இந்த அனுபவத்தால் ஆச்சரியமுற்ற அவர், இதற்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றார். அப்படி என்ன அனுபவத்தை அவர் பெற்றார்?, என்பது குறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அண்மை அறிமுகமாக சஃபாரி எஸ்யூவி கார் இருக்கின்றது.

இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த வரவேற்பை அதிகரிக்கச் செய்யும் வகையில், பல்வேறு வழிகளில் சஃபாரி காரை டாடா விளம்பரப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், மிக சமீபத்தில் புனே-மும்பை எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் பிரமாண்ட விளம்பர பதாகையை நிறுவியது. இதுவே, இந்தியாவின் மாபெரும் விளம்பர பதாகை ஆகும்.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளின்போது கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் சஃபாரி காரை காட்சிப்படுத்தவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரியான விளம்பரங்கள் இல்லாமல் சில சஃபாரி கார் உரிமையாளர்களும் தங்களின் சார்பாக அக்காருக்கு விளம்பரத்தை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். இது வாடிக்கையாளர்களின் விலைமதிப்பற்ற விளம்பரங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நாம் பார்க்க இருக்கும் இந்த சம்பவமும் வாடிக்கையாளர் ஒருவரின் விலைமதிப்பற்ற விளம்பரத்தைப் பற்றியதுதான். ஆனால், இந்த உரிமையாளர் எடுத்த உடனேயே சஃபாரி காரை புகழ்ந்து தள்ளி வீடியோ வெளியிடவில்லை. இவர் மொத்த தனது சஃபாரி கார்குறித்து இரு வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றார்.

ஒன்று, காரில் ஏற்பட்ட கோளாறு குறித்தும், அதை தவறான வழியில் கையாண்ட டாடா சர்வீஸ் மையத்தின் குறைபாடு குறித்தும் கூறியிருக்கின்றார். இரண்டாவது வீடியோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது குற்றச்சாட்டுக்கு எப்படி நடவடிக்கை எடுத்தது என்பதை விமர்சிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்றது.

புதிய சஃபாரி காரின் உரிமையாளர் தனது காருக்கான முதல் சர்வீஸை மேற்கொள்வதற்காக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில் காரை விட்டிருக்கின்றார். பின்னர், சர்வீஸ் முடித்து அக்காரை வீட்டுக்கு எடுத்து சென்றபோது இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரில் டீசல் எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட் (Diesel Exhaust Fluid) அளவு குறைவாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

டீசல் எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட் என்பது யூரியாவை கொண்ட முக்கிய திரவாகும். இது, உமிழ்வு அளவைக் குறைக்க உதவும். இது இல்லை என்றால் காரில் இருந்து வெளிவரும் மாசின் அளவு அதிகரித்துக் காணப்படும். தொடர்ந்து, இது வற்றிப் போகுமளவிற்கு காலியாகி இருந்தால் காரின் இயக்கமே தடைபடும். இந்த முக்கியமான திரவத்தை சர்வீஸ் சென்டர் பணியாளர்கள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்பதை நினைத்து பேரதிர்ச்சிக்கு ஆளானார் சஃபாரி காரின் உரிமையாளர்.

இதையடுத்து, டீசல் எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட் முழுமையாக தீர்ந்துவிடுவதற்கு முன்னர் அதை நிரப்பிவிட வேண்டும் என்பதற்காக மீண்டும் அவர் சர்வீஸ் சென்டருக்கு சென்றிருக்கின்றார். அங்கு, திரவத்தை நிரப்ப குறைந்தது ஒரு மணி நேரங்கள் ஆகும் பணியாளர்கள் கூறியிருக்கின்றனர். இது சஃபாரி உரிமையாளரை மேலும் எரிச்சலூட்டும் வகையில் அமைந்தது.

டீசல் எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட் திரவத்தை நிரப்ப முழுமையாக இரண்டு நிமிடங்களே போதுமானது. ஆனால், ஒரு மணி நேரம் காத்திருந்து அவர் அதை நிரப்பினார். பணியாளர்களின் இத்தகைய அணுகல் மிக மோசமானது என கூறி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு ஓர் மின்னஞ்சலை சஃபாரி உரிமையாளர் அனுப்பினர்.

இதற்கு பின் நடந்ததுதான் மிக ஆச்சரியமான சம்பவமாக அமைந்தது. ஆமாங்க, சஃபாரி உரிமையாளர் புகாரை அனுப்பி வைத்த உடன், டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் பாதிப்புக்குள்ளானவரை தொடர்பு கொண்டு நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும், டாடா சஃபாரி புதிய தயாரிப்பு என்பதால் பணியாளர்களுக்கு சில செயல்கள்குறித்த தகவல் தெரிவதில்லை. எனவேதான் இந்த தவறு நேர்ந்தது என உரிய காரணம் கூறினர்.
தொடர்ந்து, பிர்சனைகளுக்கான தீர்வையும் அவர்கள் உடனடியாக வழங்கினர். இதுமட்டுமின்றி, சர்வீஸ் மையத்தில் நடைபெற்ற இன்னல்களுக்காக அவர்கள் மன்னிப்பையும் கோரினர். பொதுவாக, உற்பத்தியாளர்களிடத்தில் ஓர் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பது இதுமாதிரியான அனுபவத்தையே ஆகும். இதனை, டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் உடனுக்குடன் வழங்கியது சஃபாரி காரின் உரிமையாளரை மிகுந்த மகிழ்ச்சிக்கு அளித்திருக்கின்றது.
எனவேதான், இரண்டாம் வீடியோவில் டாடா மோட்டார்ஸின் இந்த அணுகல்குறித்து வீடியோவை அந்த நபர் வெளியிட்டிருக்கின்றார். டாடா நிறுவனம், இதுபோன்று வாடிக்கையாளர்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் பல அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.