காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

காரை வெறுமனே டெஸ்ட் டிரைவ் செய்யாமல் காரை எப்படி முழுமையாக பரிசோதிப்பது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

ஓர் புதிய காரை வாங்குவதற்கு முன்னர் அந்த கார் எப்படி இருக்கின்றது என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து வாங்குவது நல்லது. குறிப்பாக, காரை பரிசோதனை ஓட்டம் செய்து பார்த்து வாங்குவது மிக சிறந்தது. இதன் வாயிலாக கார் பற்றிய பல்வேறு விபரங்களை அறிந்துக் கொள்ள முடியும். ஹேண்ட்லிங் திறன் மற்றும் எஞ்ஜின் திறன் உள்ளிட்டவை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து வாகன விற்பனையாளர்கள் புதிய காரை வாங்க வரும் வாடிக்கயாளர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் பேரில் டெஸ்ட் சோதனையோட்டத்திற்கு வாய்ப்பளிக்கின்றன. இப்படியான வேலையில், காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் முன்பு எதை எல்லாம் கவனிக்க வேண்டும், எப்படி காரை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும் என்பது பற்றிய தகவல்களையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த விரிவான தகவலை கீழே காணலாம், வாங்க.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

தெளிவான பார்வை (Visibility):

இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசலுடனே காட்சியளிக்கின்றன. ஆகையால், நாம் வாங்க இருக்கும் தெளிவான பார்வையை வழங்கும் வகையில் இருக்கின்றதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், போக்குவரத்து நெரிசலான நேரங்களில் பம்பர்-டூ-பம்பர் எனும் அளவிற்கு மிக நெருக்கமாக பிற வாகனங்கள் நிற்கும் நிலை உருவாகும்.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

அந்த மாதிரியான நேரங்களில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க தெளிவான பார்வை திறனை வழங்கக் கூடிய காராக இருப்பது மிக சிறந்தது. மேலும், ஒவ்வொரு காருக்கும் ஓர் தனித்துவமான பிளைண்ட் ஸ்பாட்டுகள் இருக்கின்றன. எனவே, இதுபோன்ற சிக்கல்களை நன்கு ஆராய்ந்து பின்னர் புதிய காரை டெஸ்ட் டிரைவ் செய்வது தேர்வு செய்ய வேண்டும்.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

சௌகரியமான இருக்கை அமைப்பு (Seating Comfort):

சௌகரியமான இருக்கை மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கும். ஆகையால், இந்த விஷயத்தில் மட்டும் அலட்சியம் காட்டவே வேண்டாம். நீண்ட நேரம் பயணிக்க ஏதுவான அமைப்பு கொண்ட, குறிப்பாக, நமக்கு ஏற்றவாறு உயரங்களை அட்ஜெஸ்ட் மாற்றிக் கொள்ளும் வசதி உடன் இருப்பதை உறுதிப்படுத்துக் கொள்ள வேண்டும். இது மிக நீண்ட தூர பயணத்தைக் கூட சுவாரஷ்யமானதாக மாற்ற உதவும். குறிப்பாக உடல் வலி அல்லது சோர்வை வழங்காமல் பார்த்துக் கொள்ளும்.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Infotainment System):

இன்றைய காலத்தில் பல வித சிறப்பம்சங்களுடன் இன்ஃபோடெயின்மென்ட் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றது. ஆகையால், இந்த அம்சம் மிக சுலபமான பயன்பாட்டை வழங்கக் கூடியதா என்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள். ஸ்மூத் மற்றும் சுலபமான அக்சஸிபிளிட்டி இருத்தல் அவசியம். இதன் கன்ட்ரோல்கள் டிரைவருக்கு மிகவும் சுலபமானதாக இருத்தல் அவசியம்.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் ஏசி, வென்டிலேட் இருக்கை மற்றும் டிரைவிங் மோட் போன்ற முக்கியமான அம்சங்களைக் கன்ட்ரோல் செய்யும் வசதி இன்ஃபோடெயின்மென்டிலேயே வழங்கப்படுகின்றன. ஆகையால், அது டிரைவருக்கு அருகில் இருப்பது சிறந்தது.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

டிரைவிங் டைனமிக்ஸ் (Driving Dynamics):

டிரைவிங் டைனமிக்ஸ் இதற்கு சற்று அதிக கவனத்தைச் செலுத்துதல் அவசியம். சஸ்பென்ஷன், நல்ல எஞ்ஜின் திறன் கொண்ட காராக இருப்பதை பார்த்து வாங்குதல் வேண்டும். இவையிரண்டும் அலாதியான ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடியவை. அதிகம் பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையைக் கூட மிக சுலபமாக சமாளிக்கும் வசதியை சிறந்த சஸ்பென்ஷன்கள் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், அதிக வைப்ரேஷன் மற்றும் அலுங்கல் - குலுங்கல்களை வழங்கக் கூடிய காராக இருத்தல் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

புதிய காரை வாங்க செல்லும் முன் குடும்பத்தினரிடம் அவசியம் ஆலோசிக்க வேண்டும்:

புதிய காரை வாங்கும் நன்கு ஆராய்வது மட்டுமல்ல நம் குடும்பத்தினரிடம் ஆராய்வது சிறந்தது. நாம் மட்டுமின்றி நம் குடும்பத்தினரும் மிக சிறந்த அனுபவத்தை நாம் வாங்கும் கார் கொடுக்க வேண்டும். ஆகையால், வீட்டாரிடமும் கலந்தாலோசித்து பின்னர் அவர்களுடன் சேர்ந்து டெஸ்ட் டிரைவ் செய்து பின்னர் புதிய கார் வாங்குவதற்கான திட்டத்தைப் போடுவது மிக சிறந்தது.

காரை டெஸ்ட் டிரைவ் செய்ய போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த விஷயங்களை மனசுல வச்சுட்டு காரை தொடுங்க!

இங்குதான் அதிக கவனம் வேண்டும்:

பொதுவாகவே விற்பனையாளர்கள் பலர் டாப் என்ட் வேரியண்டில் இருக்கும் கார்களையே டெஸ்ட் டிரைவிற்கு வழங்குகின்றனர். அவை பொதுவாக மிக சிறந்த ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும். ஆகையால், இதில் இருக்கும் சௌகரியம் குறைந்த (ஆரம்ப நிலை) வேரியண்டுகளில் இருக்காது. ஆகையால், நாம் வாங்க இருக்கும் வேரியண்டிற்கும், டெஸ்ட் டிரைவ் செய்த வேரியண்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை ஒரு முறை நன்கு ஆராய்ந்துவிடுங்கள். முடிந்தால் வாங்க இருக்கும் வேரியண்டை ஒரு முறை கண்களிலாவது அலசி ஆராய்ந்துவிடுவது நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is important things to keep in mind while test drive a car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X