பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளிடம் இருந்து உங்கள் வாகனத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய ஐந்து முக்கிய டிப்ஸ்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

கடந்த காலத்தைப் போன்று இல்லை என்றாலும் தீபாவளி கொண்டாட்டம் லேசான கொண்டாட்டங்களுடன் கலைக்கட்டத் தொடங்கியுள்ளது. முன்பெல்லாம் தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே பட்டாசு சத்தங்கள் காதைக் கிழிக்கத் தொடங்கிவிடும். ஆனால், விழாக்காலம் நெருங்கியிருக்கின்ற இந்த நேரத்திலும் பெரியளவில் மக்கள் இந்த விழாவை கொண்டாடாத நிலையே தென்படுகின்றது.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு மக்களின் இந்த நிலைக்கு காரணமாக இருக்கின்றது. இருப்பினும், ஆங்காங்கே வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றது. என்ன இக்கட்டான சூழ்நிலை நிலவினாலும் சந்தோஷங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் பலர் இத்தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

எனவே தற்போது பட்டாசு சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த மாதிரியான நேரத்தில் உங்களின் வாகனங்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய டிப்ஸையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். பட்டாசு, அதனை வெடிப்போருக்கு மட்டுமில்ல அருகில் இருக்கும் எளிதில் தீபற்றக் கூடிய பொருட்களுக்கும் அதிக ஆபத்தானவை. ஆகையால், இவற்றில் இருந்து வாகனங்களை பாதுகாப்பாக சால சிறந்தது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

தீயணைப்பான் (Portable fire extinguisher)

பெரியளவில் இல்லை என்றாலும் சிறியளவிலாவது உங்களது வாகனத்திலோ அல்லது உங்களுத்து வீட்டிலோ சிறியளவு தீயணைக்கும் கருவிகளை வைத்துக் கொள்ளுங்கள். இது நெருப்பு பிடித்தல் போன்ற அசம்பாவிதங்களின் போது உடனடி தீர்வு காண உதவும். தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் பொதுவான விபத்துகளில் ஒன்றாக தீ விபத்து இருக்கின்றது.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

ஆகையால், தீயணைக்கும் கருவிகள் இதுமாதிரியான பண்டிகைகளின் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. அதிலும், கார் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை பாதுகாக்க இது மிகவும் உதவியாக இருக்கின்றது. சிறு துளி நெருப்பு கூட நொடிப்பொழுதில் தீ விபத்தை ஏற்படுத்திவிடும். ஆகையால், இந்த விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம் என்பதே எங்களின் முதன்மையாக ஆலோசனை ஆகும்.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

கார்களை பத்திரமாக பூட்ட வேண்டும் (Lock cars properly)

தீபாவளியைக் கொண்டாடும் முன்பு காரை நன்கு மூடியிருக்கின்றோமா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, காரின் அனைத்து ஜன்னல்களும் மூடியிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காருக்குள் இருக்கும் இருக்கை மற்றும் மேட் ஆகியவை எளிதில் நெருப்பைப் பிடித்துக் கொள்ள கூடியவை.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

ஆகையால், சிறு துளி நெருப்பு உட்புகுந்தால்கூட நிலைமை மிக மோசமானதாக மாறிவிடும். பூந்தொட்டி, சங்கு சக்கரம் போன்றவை சிறிய அளவு நெருப்பு துகள்களை மிகவும் வேகமாக வீசக்கூடியவை. இவற்றினாலே பல இடங்களில் தீ விபத்துகள் அதிகம் அரங்கேறியிருக்கின்றன. ஆகையால், காரின் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களும் முழுமையாக மூடியிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

பார்கிங்

காரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவது நல்லது. அடைத்து வைக்கப்பட்ட பெட்டகம் போன்ற பார்க்கிங் அல்லது முறையான பார்க்கிங் யார்ட் போன்ற இடங்களில் பாதுகாப்பாக காரை நிறுத்தி வைப்பது மிக நல்லது. அதேநேரத்தில், வழக்கமான கார் போர்வையைக் கொண்டு காரை மூட கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

கார் கவர்கள் மிக மிக எளிதில் நெருப்பு இறையாகக் கூடியவை. ஆகையால், இவற்றைக் கொண்டு காரை மூடுவது நல்லது இல்லை. குறிப்பாக, தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் அதிகம் வெடிக்கின்ற நேரத்தில் கார் கவரைக் கொண்டு போர்த்துவது ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போன்று ஆகும். ஆகையால், காரை முறையான அடைக்கப்பட்ட பகுதியில் நிறுத்துவது மிகவும் சிறந்தது.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

பொறுப்புடன் வாகனத்தை ஓட்டுங்கள்

தெரு அல்லது ஓர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் போது சற்றே கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். திருவிழா காலம் என்பதால் தெருக்களில் மக்கள் கூட்டமாக கூடியிருப்பர். வெடியினால் ஏற்பட்ட புகை மூட்டம் அவர்கள் இருப்பதை உங்களது பார்வையில் இருந்து மறைத்துவிடும். ஆகையால், மற்றவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சற்றே குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குவது மிக சிறந்தது.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

அதுமட்டுமின்றி, சிறுவர்கள் எந்த நேரத்தில் எங்கு வெடிக்களை வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாது. குறிப்பாக, சிலர் வெடிக்கு பயந்து பட்டாசை பற்ற வைத்த உடன் வீட்டுக்குள் ஓடி புகுந்துக் கொள்வர். ஆனால், வாகன ஓட்டிகள் அங்கு வெடி வைத்திருப்பதை அறியாமல் அப்பகுதிக்குள் நுழைந்து விடுவர்.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

இதுமாதிரியான சூழல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆகையால், அதிக கவனத்துடன் தெருவிற்குள் நுழைவது இந்த நேரத்தில் அவசியமானதாக பார்க்கப்படுகின்றது. மேலும், ஓர் வெடி வைத்த பின்னர் அது முழுமையாக வெடித்த பின்னர் அங்கிருந்த நகர்வது மிகவும் நல்லது.

பட்டாசுக்கு புது கார் எது? பழைய கார் எதுனு தெரியாது? நீங்கதான் பத்தரமா பாத்துக்கணும்... இதோ 5 டிப்ஸ்கள்!

முதல் உதவி பெட்டி (First Aid Box)

முதல் உதவி பெட்டி உங்களை பாதுகாக்க உதவும். சிறு பொறி நெருப்புக் கூட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் அதிக கவனம் தேவை. அத்துடன், முதல் உதவி பெட்டி போன்ற மருத்துவ உபகரணங்களை உங்களுடன் வைத்திருப்பது மிகவும் சிறந்தது. பஞ்சு, ஆயின்மென்ட் மற்றும் பேன்டேஜ் போன்றவற்றை முன்னேற்பாடாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்ட பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் உங்களின் காருக்கு மட்டுமல்ல இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வாசகர்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is important tips to keep your cars and bikes safe from crackers
Story first published: Wednesday, November 3, 2021, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X