சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

இந்தியாவில் சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 பெண்கள் பற்றியும், அவர் பயன்படுத்தும் சூப்பர் கார்களின் சிறப்புகள் குறித்த முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

இந்தியாவில் சூப்பர் கார்களை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பயன்படுத்துவதாக பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், நம் நாட்டில் வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட சில பெண்களும் இருக்கின்றனர். அவர்களும் சூப்பர் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நாட்டில் சூப்பர் கார்களை பயன்படுத்தி வரும் 7 பெண்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

மம்தா மோகன்தாஸ்

பயன்டுத்தும் சூப்பர் கார்: போர்ஷே 911 (Porsche 911)

பாடகர், தயாரிப்பாளர் மற்றும் நடிகை என பல ரோல்களை மேற்கொண்டு வரும் பிரபலமாக மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்தா மோகன்தாஸ் இருக்கின்றார். இவர் தமிழ் திரையுலகிலும் தோன்றி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிரபலமே மிக சமீபத்தில் போர்ஷே 911 மாடல் சூப்பர் காரை வாங்கினார்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

இந்த கார் இந்தியாவில் ரூ. 1.84 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. மஞ்சள் நிற பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த கார் மிக அதி-திறன் கொண்ட வாகனமாகும். இந்த வாகனத்தில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 450 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

வெறும் 3.5 செகண்டுகளிலேயே இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது. இத்தகைய உச்ச வேகத்தில் செல்லக் கூடிய காரையே சமீபத்தில் மம்தா மோகன்தாஸ் வாங்கினார். இதன் வாயிலாக இந்தியாவில் சூப்பர் கார்களை பயன்படுத்தும் இளம் பெண்களில் ஒருவராக மம்தா மாறினார்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

சுமன் மேதா

பயன்டுத்தும் சூப்பர் கார்: லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan)

ஆட்டோ ரிக்ஷா மீது விலையுயர்ந்த காரை மோதியதன் வாயிலாக இந்தியாவில் ஃபேமஸானவர் சுமன் மேதா. இவர் லம்போர்கினி ஹூராகேன் காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த காரையே ஆட்டோ ரிக்ஷா மீது மோதி விபத்து செய்திருந்தார் சுமன் மேதா. இந்த காரை அவரது கணவர் அவருக்கு பரிசாக அளித்திருந்தார்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

இவரின் கணவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரே தனது மனைவிக்காக அரன்சியோ போரியலிஸ் நிற ஹூராகேன் காரை வாங்கி கொடுத்தார். இதன் வாயிலாக இந்தியாவில் சூப்பர் காரை பயன்படுத்தும் ஓர் பெண்ணாக சுமன் மேதா மாறினார்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

மல்லிகா செராவத்

பயன்டுத்தும் சூப்பர் கார்: லம்போர்கினி அவென்டேடர் எஸ்வி (Lamborghini Aventador SV)

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா செராவத் இடம் இருக்கும் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றாக லம்போர்கினி அவென்டேடர் எஸ்வி இருக்கின்றது. இந்த காரே அவரிடத்தில் இருக்கும் மிக அதி திறன் வாய்ந்த சூப்பர் கார் மாடலும் ஆகும். இந்த காரில் 6.5 லிட்டர் நேட்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 740 பிஎச்பி மற்றும் 690 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ வேகம் ஆகும். மேலும், இக்கார் வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் துள்ளியமான விலை விபரம் பற்றிய தகவல் தெரிய வரவில்லை.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

ஷீதல் துக்கர்

பயன்டுத்தும் சூப்பர் கார்: லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan)

இந்தியாவில் சூப்பர் காரை வாங்கிய பெண்ணாக ஷீத்தல் துக்கர் இருக்கின்றார். இவரின் தொழிலதிபர் கணவரே இக்காரை வாங்கிக் கொடுத்தவர் ஆவார். இந்த காரின் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலையுயர்ந்த சூப்பர் காரின் உரிமையாளராக ஷீத்தல் துக்கர் இருக்கின்றார்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

இந்த சூப்பர் காரில் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 610 பிஎச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். இதன் உச்ச வேகம் மணிக்கு 325 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.2 செகண்டுகளில் இக்கார் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை தொடும் திறனை இந்த எஞ்ஜின் கொண்டிருக்கின்றது.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

ஹார்ட் கவுர்

பயன்டுத்தும் சூப்பர் கார்: ஃபெர்ராரி 458 இட்டாலியா

பிரபலமான இந்தியன் ரேப்பராக வலம் வந்துக் கொண்டிருக்கும் தரண் கவுர் தில்லன் என்கிற ஹார்ட் கவுர், ஃபெர்ராரி 458 இட்டாலியா காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த காரை மிக சமீபத்திலேயே பிக் பாய்ஸ் டாய்ஸ் எனும் விற்பனையாளரிடம் இருந்து இக்காரை வாங்கினார். என்ன விலை கொடுத்து இக்காரை அவர் வாங்கினார் என்பது தெரியவில்லை. இதில் 568 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க்கை வெளியேற்றும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

ஸ்வாதி பக்கா

பயன்டுத்தும் சூப்பர் கார்: ஃபெர்ராரி கலிஃபோர்னியா டி (Ferrari California T)

ஸ்வாதி பக்கா, இவர் ஃபெர்ராரி கலிஃபோர்னியா டி சூப்பர் காரை பயன்படுத்தி வருகின்றார். சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இக்கார் மிக சிறந்த சூப்பர் கார்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த காரில் வி8 ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 553 பிஎச்பி மற்றும் 755 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஸ்வாதி பக்கா இடத்தில் எஃப்430 ஸ்பைடர் மற்றும் 458 இத்தாலியா ஆகிய சூப்பர் கார்களை பயன்படுத்தி வருகின்றார். பிஎம்டபிள்யூ இசட்4 மற்றும் ஜாகுவார் எஃப்-டைப் வி6எஸ் ஆகிய கார்களையும் பயன்படுத்தி வருகின்றார்.

சூப்பர் கார்களை பயன்படுத்தும் 7 இந்திய பெண்கள்... ஒவ்வொரு காரோட விலையும் கண்ண கட்டுது!

ஷில்பா ஷெட்டி

பயன்டுத்தும் சூப்பர் கார்: பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8)

பிஎம்டபிள்யூ ஐ8 ஓர் உலகின் முதல் ஹைபிரிட் ஸ்போர்ட் கார் மாடலாகும். 1.5 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன் இரு மின் மோட்டார்களும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து 357 பிஎச்பி பவரையும், 570 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும். இது வெறும் 4.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is list of seven women supercar owners in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X