இந்தியாவின் 10 சிறந்த மைலேஜ் தரும் கார்கள்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நமக்கு ஆறுதல்!

இந்தியாவின் டாப் 10 மைலேஜ் தரும் கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

சமீப சில காலமாக பலர் பெட்ரோல், டீசல் விக்குற விலைக்கு சொந்த வாகனங்களை தவிர்த்துவிட்டு பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர். ஏன், இந்தியர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி புதிய வாகனங்களை வாங்குவதைகூட குறைத்திருக்கின்றனர் என்றுகூட கூறலாம். இதற்கு கடந்த மாதத்தில் விற்பனையாகிய புதிய வாகனங்களின் எண்ணிக்கையே சான்று.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

இதன் விளைவாக முன்னணி நிறுவனங்கள் பல நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் தற்போதும் தவித்து வருகின்றன.இதற்கு மிகக் கடுமையாக உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலை உயர்வு ஓர் காரணம் என்றால், தொடர்ச்சியாக உயர்ந்து வரும் புதிய வாகனங்களின் விலை உயர்வு மற்றுமொரு காரணமாக இருக்கின்றது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் பெரியளவில் பெட்ரோலைக் குடிக்காமல் அதிக மைலேஜ் தரும் சில வாகனங்கள் நமக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நம் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. அவை குறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் டாப் 10 கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அது குறித்த தகவலை பார்க்கலாம்.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி செலிரியோ (Maruti Celerio)

மைலேஜ்: 26.68 கிமீ

மாருதி சுசுகி நிறுவனம் அதன் செலிரியோ கார் மாடலின் புதிய தலைமுறையை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய தோற்றம் மற்றும் தொழில்நுட்பம் பல இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், இது மிக அதிக மைலேஜ் தரும் என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி செலிரியோ அதிகபட்சமாக 26.68 கிமீ வரை மைலேஜ் தரும். செலிரியோவின் ஏஎம்டி தேர்வே இத்தகைய அதிகபட்ச மைலேஜை தருகிறது. இந்த அதிகபட்ச மைலேஜிற்கு நிறுவனத்தின் ட்யூவல் ஜெட் கே10 பெட்ரோல் எஞ்ஜினே முக்கிய காரணம் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 67 எச்பி மற்றும் 89 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. புதிய தலைமுறை செலிரியோ இந்தியாவில் ரூ. 4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி டிசையர் (Maruti Suzuki Dzire)

மைலேஜ்: 24.12 கிமீ

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்பே பிடித்திருக்கின்றது. டிசையர் ஒரு லிட்டருக்கு 24.12 கிமீ மைலேஜை வழங்கி இவ்விடத்தைப் பிடித்திருக்கின்றது. இக்காரில் 1.2 லிட்டர் கே12என் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரின் ஏஎம்டி தேர்வே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.12 கிமீ வரை மைலேஜ் தருகிறது. மாருதி டிசையர் இந்தியாவில் ரூ. 5.99 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

டொயோட்டா க்ளான்ஸா (Toyota Glanza)

மைலேஜ்: 23.87 கிமீ

மாருதி சுசுகி நிறுவனத்தின் பலினோ கார் மாடலையே டொயோட்டா நிறுவனம் கூட்டணியின் வாயிலாக க்ளான்ஸா எனும் பெயரில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஒரு சில மாற்றங்களை மட்டுமே செய்து இக்கார் மாடலை நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. அராய் வெளியிட்ட தகவலின்படி டொயோட்டா க்ளான்ஸா அதிகபட்சமாக 23.87 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

1.2 லிட்டர் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன் 12வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது. இவை அனைத்தும் சேர்ந்தே க்ளான்ஸாவை இந்தியாவின் மூன்றாவது அதிகம் மைலேஜ் தரும் காரா உயர்த்தியிருக்கின்றது. மைல்டு ஹைபிரிட் வசதி உடன் கிடைக்கும் க்ளான்ஸாவிற்கு ரூ. 7.65 லட்சம் என்ர விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Maruti Swift)

மைலேஜ்: 23.76 கிமீ

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் ரக காராக ஸ்விஃப்ட் இருக்கின்றது. இந்த கார் அதிகம் விற்பனையாவதற்கு அதன் மைலேஜ் திறனும் ஓர் காரணமாகும். குறைவான விலை, குறைந்த பராமரிப்பு செலவு உள்ளிட்டவை இந்த ஹேட்ச்பேக் கார் அதிகம் விற்பனையாவதற்கு காரணமாக இருக்கின்றது. இக்காரில் கே12என் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் ஏஎம்டி வெர்ஷனே 23.76 கிமீ வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மைலேஜ் தருகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 5.85 லட்சம் ஆகும்.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி ஆல்டோ (Maruti Suzuki Alto)

மைலேஜ்: 22.05 கிமீ

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிக சிறிய கார் மாடலாக ஆல்டோ இருக்கின்றது. பெரிய பார்க்கிங் இட வசதி இல்லாதவர்கள், அதிக நகர்ப்புற பயணங்களை மேர்கொள்வோரின் மிக சிறந்த வாகனமாகவும் பலினோ இருக்கின்றது. இந்த காரில் 0.8 லிட்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

இந்த எஞ்ஜின் அராய் அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலின்படி 22.05 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இக்காரில் சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 31.59 கிமீ வரை மைலேஜ் தரும். இக்கார் ரூ. 3.15 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

ரெனால்ட் க்விட் (Renault Kwid)

மைலேஜ்: 22 கிமீ

ரெனால்ட் க்விட் கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே அது கிடைக்கிறது. இதில், 1.0 லிட்டர், ஏஎம்டி கியர்பாக்ஸ் மோட்டார் தேர்வே 22 கிமீ அதிகபட்ச மைலேஜை வழங்குகின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 4.11 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

டட்சன் ரெடிகோ (Datsun Redigo)

மைலேஜ்: மைலேஜ் 22 கிமீ

இந்தியாவின் மிக மலிவு விலை கார் மாடல்களில் டட்சன் ரெடிகோவும் ஒன்று. குறைவான விலை காராக இருந்தாலும் பல சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் 1.0 லிட்டர், ஏஎம்டி மோட்டாரே அதிக ரேஞ்ஜை வழங்கும். டட்சன் ரெடிகோ இந்தியாவில் ரூ. 3.98 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR)

மைலேஜ்: 21.79 கிமீ

இந்தியாவின் உயரமான ஹேட்ச்பேக் கார் என்ற பெயரைக் கொண்டிருக்கின்றது மாருதி சுசுகி வேகன்ஆர். இந்த கார் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இத்துடன், இது சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிஎன்ஜி தேர்வில் கிடைக்கும் வேகன்ஆர் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 32.52 கிமீ மைலேஜ் தரும்.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி எஸ்-ப்ரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)

மைலேஜ்: 21.7 கிமீ

மாருதி சுசுகி எஸ்-ப்ரெஸ்ஸோ 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் உயர்நிலை தேர்வுகளான விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ-ப்ளஸ் வேரியண்டே அதிக மைலேஜே தருகின்றன. 21.7 கிமீ வரை மைலேஜ் தருகின்றது. இந்த காரை மாருதி சுசுகி நிறுவனம் அதன் பிற தயாரிப்புகளைப் போல சிஎன்ஜி தேர்விலும் விற்பனைச் செய்கின்றது. இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 3.78 லட்சம் ஆகும்.

இந்தியாவின் 10 மிக சிறந்த மைலேஜ் தரும் கார்கள் பட்டியல்... பெட்ரோல் விக்குற விலைக்கு இந்த கார்கள்தான் நம்மோட ஆறுதல்!

மாருதி சுசுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis)

மைலேஜ்: 20.89

நம்முடைய இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருக்கின்றது. மாருதி சுசுகி இக்னிஸ். இந்த கார் ஒரு லிட்டருக்கு 20.89 கிமீ வரை மைலேஜ் தருகின்றது. 1.2 லிட்டர் கே12எம் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் இக்னிஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் தானியங்கி தேர்வான ஏஎம்டி வெர்ஷனே 20.89 கிமீ மைலேஜை தருகின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 5.10 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is list top mileage cars maruti Celerio to renault kwid
Story first published: Friday, December 17, 2021, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X