பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இத உங்களுக்கு யாரும் சொல்லி தர மாட்டாங்க!

பழைய பாதுகாப்பில்லா கார்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான சுலபமான வழிமுறைகளை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலை இந்த கீழே காணலாம்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது வாகனங்கள் மிக அதிக பாதுகாப்பானதாக மாறிவிட்டன. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய விதிகளை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஆரம்ப நிலை கார் மாடல்களில்கூட ஏபிஸ், ஏர்பேக், அதிக வேக எச்சரிக்கை, இபிடி, பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் எச்சரிக்கை ஆகிய அம்சங்கள் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றன.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

இவை பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், இதுமாதிரியான எந்தவொரு பாதுகாப்பான அம்சங்களும் இல்லாத வாகனங்கள் பல தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பான வாகனங்களாக மாற்ற முடியுமா?, எப்படி பாதுகாப்பான வாகனங்களாக அவற்றை மாற்ற முடியும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

இயந்திரங்களை மேம்படுத்துதல்

பெரும்பாலான விபத்துகள் இயந்திர கோளாறினாலயே அரங்கேறுகின்றன. ஆகையால், பழுதடைந்த அல்லது தேய்மானமடைந்த பாகங்களை உடனடியாக மாற்றுவது நம்முடைய பழைய வாகனங்களை பாதுகாப்பான வாகனங்களாக மாற்றுவதற்கான முதல் படியாகும். குறிப்பாக, விரைவில் தேய்மானமடையக் கூடிய பாகமான பிரேக் கட்டையை உரிய நேரத்தில் மாற்றுவது மிக சிறந்தது.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

பழதடைந்த உலோக பிரேக் கட்டைக்கு பதிலாக பீங்கான் பட்டைகளை பயன்படுத்துவது நல்ல பலனை வழங்கும். ஏனெனில் பீங்கான் பட்டைகள் நீண்ட நாட்கள் உழைக்கும் திறன் கொண்டது. எளிதில் தேய்மானமடையாது. மேலும், குறைந்த வெப்ப கடத்தியாகவும் இது செயல்படுகின்றது. ஆகையால், இதனையே வாகன ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

சஸ்பென்ஷன் விஷயத்திலும் கவனம் இருக்க வேண்டும். கார்களில் அதிகம் பாதிப்பைச் சந்திக்கக் கூடிய மற்றுமொரு அம்சமாக சஸ்பென்ஷன் இருக்கின்றது. இந்தியாவின் கரடு, முரடான பாதையினால் இவை எளிதில் பாதிப்பைச் சந்திக்கின்றன. ஆகையால், சஸ்பென்ஷனை மேம்படுத்துவது நல்ல பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இது நல்ல கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொடுக்கவும் உதவும்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

கார் இயக்கும் பாணியை மாற்றுங்கள்

ஓர் வாகன ஓட்டி பின்பற்ற வேண்டிய மிக முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று. சாரசரி வேகம் (கட்டுப்படுத்தக் கூடிய வேகம்), நெடுஞ்சலை விதிகளைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை ஒருபோதும் மறந்து விடவேக் கூடாது. இதுவே நமக்கு பாதியளவு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும். மேலும், எதையும் சமாளிப்பதற்கான தயார் நிலையில் ஓட்டுர் இருத்தல் வேண்டும்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

சாலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற கவனத்துடன் இருத்தலை இது குறிக்கின்றது. பிரேக், ஸ்டியரிங் வீல் ஆகியவை எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றினால் அதிகபட்ச பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்ள முடியும்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார்கள்

காரின் பின்புறத்திற்கான கேமிரா மற்றும் சென்சார்கள் தற்போது வெளிப்புற சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதன் வாயிலாக ரிவர்ஸ் மற்றும் பிற செயல்களின் ஏற்படும் கசப்பான அனுபவங்களைத் தவிர்க்க முடியும். குறிப்பாக, பாதசாரிகளின் பாதுகாப்பை இதன் வாயிலாக உறுதிப்படுத்த முடியும்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் உட்பக்கம்

பழைய கார் மாடல்களில் ஓட்டுநரையும், பயணிகளையும் பாதிக்கும் வகையில் சில பாகங்கள் உள்ளன. அவற்றை மாற்ற சிறிதும் தயங்க வேண்டாம். அசௌகரியமான உணர்வை வழங்கும் வகையில் இருக்கைகள் இருந்தால் அவற்றை நீக்கிவிடுவது நல்லது. தற்போது சந்தையில் அதிக சொகுசான அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கைகள் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இது நீண்ட தூர பயணங்களைக் கூட மிகவும் அலாதியானதாக மாற்ற உதவும். ஆகையால் பாதுகாப்பு மற்றும் நல்ல பயணத்திற்கு இது உதவியாக இருக்கும்.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

வெளிப்புறம்

வெளிப்புறத்தை வரை பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியவை இருக்கின்றன. டயர், ஹெட்லேம்ப், ஸ்டாப் (சிவப்பு மின் விளக்கு, இன்டிகேட்டர் ஆகியவை நல்ல இயங்குநிலையில் இருக்கின்றதா என்பதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால்கூட நமது நாட்டில் பல விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன.

பழைய பாதுகாப்பற்ற கார்களை பாதுகாப்பான வாகனமாக மாற்றுவது எப்படி?.. இது வெளிய யாரும் சொல்ல மாட்டாங்க!

இதேபோல், தேய்ந்து போன டயர்களாலும் அதிக விபத்துகள் அரங்கேறி வருகின்றன. ஆகையால், இந்த விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. இதேபோல், டயரில் தேவையான அளவு காற்று இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இவை அனைத்தும் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும். குறிப்பாக உங்கள் வாகனத்தை அதிக பாதுகாப்பான காராக வைத்திருக்க உதவும்.

Most Read Articles

English summary
Here is some tips to make old car safer on road
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X