ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

ஜிடி எனும் வார்த்தைக்கு பின்னால் இருக்கும் வரலாற்று தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் சில அதன் கார் மாடல்களில் 'ஜிடி' (GT) எனும் தேர்வை பிரத்யேக தேர்வாக வழங்கி வருகின்றன. ஜிடி எனும் பேட்ஜ் அந்த தேர்வில் சிறப்பு தோற்றமாக வழங்கப்பட்டிருக்கும். இந்த தேர்வு சற்று கூடுதல் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்படி என்ன சிறப்பு வசதியை இந்த தேர்வுக் கொண்டிருக்கின்றது?, ஜிடி என்பதற்கான அர்த்தம் என்ன?, என்பது பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

தற்போதைய சூழ்நிலையில் ஜிடி என்பதற்கான அர்த்தம் என்ன?

ஜிடி எனும் எழுத்திற்கு இப்போது பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன. கிராண்ட் தெஃப்ட், கிராண்ட் டூரர் என பல்வேறு அர்த்தங்கள் கூறப்படுகின்றன. ஆனால், 1980-களுக்கு முன்னர் வரை இந்த எழுத்திற்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே காணப்பட்டது. ஆனால், இதற்கு பின்னர் பன்முக அர்த்தம் கொண்ட எழுத்தாக அது மாற தொடங்கிவிட்டது. இதற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக அதிகளவில் இவ்-வார்த்தையை பயன்படுத்தியதே காரணமாக இருக்கின்றது.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

ஒவ்வொரு நிறுவனங்களும் இந்த வார்த்தையை வெவ்வேறு விதமாக பயன்படுத்த தொடங்கின. அந்தவகையில், ஒரு சில நிறுவனங்கள் ஜிடி எனும் வார்த்தையை ஸ்போர்ட்ஸ் ரக பயன்பாட்டு வசதிக் கொண்ட கார் மாடல்களுக்கு பயன்படுத்தின. ஒரு சில நிறுவனங்கள் வழக்கமான தயாரிப்பைக் காட்டிலும் சற்று விளையாட்டுத் தனம் அதிகம் கொண்ட குறிப்பிட்ட தேர்வுகளுக்கு ஜிடி என்ற பெயரைப் பயன்படுத்துகின்றன.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

இந்த ஜிடி என்ற பெயர் பேட்ஜ் கொண்டிருக்கும் வாகனங்கள் அதிக திறன் வெளிப்பாடு வசதிக் கொண்ட எஞ்ஜினைக் கொண்டிருக்கும் கார்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்போது இந்த பெயரின் நவீன கால அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

முந்தைய நாட்களில் ஜிடி பெயருக்கான உண்மை அர்த்தம் என்ன?

கிராண்ட் டூரிஸ்மோ (Grand Turismo) அல்லது கிரண்ட் டூரிங் (Grand Touring) ஆகியவற்றின் சுருக்கெழுத்தே ஜிடி ஆகும். இந்த வார்த்தையை முதலில் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களே பயன்படுத்தின. ஹைபர் மற்றும் சொகுசு ரக சூப்பர் ஸ்போர்ட் கார்களிலேயே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

இந்த பெயரைக் கொண்டு வரும் வாகனங்கள் பெரிய எஞ்ஜின், சொகுசான பயணம், ஆடம்பர ரக உட்பக்கம் மற்றும் கவர்ச்சிரமான உடல் தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பதும் அர்த்தமாக இருந்தது. மேலும், மலைப் பாதை மற்றும் அதிக வேக பயணத்திற்கான வாகனமாகவும் ஜிடி பெயருடன் விற்பனைக்குக் கிடைத்த கார்கள் இருக்கின்றன.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

ஜிடி தோற்றம்

ஜிடி பெயரை மெருகேற்றிய முதல் ஆட்டோமொபைல் நிறுவனம் ஆல்பா ரோமியோ (Alpha Romeo) ஆகும். 6சி 1750 ஜிடி (6c 1750 GT) எனும் பெயரிலேயே அதன் கார் விற்பனைக்கு வந்தது. இந்த கார் 1930 இல் இரண்டு வெவ்வேறு எஞ்ஜின் வகைகளுடன் உற்பத்தி செய்யப்பட்டது.

ஜிடி என்ற வார்த்தைக்கு பின்னால் இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா?.. ரொம்ப சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம்!

எஸ்ஓஎச்சி (SOHC) எனும் குறைந்த சக்தி வாய்ந்த எஞ்ஜினுடனும், டிஓஎச்சி (DOHC) எனும் அதிக சக்திவாய்ந்த எஞ்ஜின் உடனும் அது விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. 6சி கார் பெரும்பாலும் மோட்டார் பந்தயம் போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is the full details about gt
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X