அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா முதலமைச்சர் பயணிக்கிறாரு! ஸ்டாலின் பயன்படுத்தும் புதியகார் பற்றிய சுவாரஷ்ய தகவல்!

நம்ம தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பயன்படுத்தும் புதிய லேண்ட் ரோவர் டிஃபெனடர் 110 சொகுசு எஸ்யூவி ரக கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். காரின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமீப காலமாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை பயன்படுத்தி வருகின்றார். சொகுசு மற்றும் ஆடம்பர வாகன பிரியர்களின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக இந்த கார் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே தென்னிந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக கருதப்படும் முக ஸ்டாலின் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றார்.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

அவர் வெள்ளை நிறத்திலான லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சமீபத்தில் சென்னை சாலையில் சென்ற முதலைமச்சரின் கான்வாயில் இந்த கார் தென்பட்டது. அப்போது, முக ஸ்டாலின் அக்காரினுள் தென்பட்டார். இது ஓர் லேண்ட் ரோவர் டிஃபென்டரின் 5 கதவுகள் கொண்டா பதிப்பாகும். டிஃபென்டர் எனும் பெயரில் இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரிய மற்றும் பிரீமியம் தர எஸ்யூவி வாகனங்கள் பிடித்தமானவை. இது பலருக்கு தெரியாது. முதலமைச்சர் இடத்தில் இருக்கும் பிரமாண்ட தோற்றம் கொண்ட கார்களே இதற்கு சான்று. அவரிடத்தில் வெள்ளை நிற லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் மற்றும் கருப்பு நிற லெக்சஸ் எல்எக்ஸ் 470 ஆகிய கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இது போன்ற தென்னிந்திய அரசியல்வாதிகள் பலர் வாகன பிரியர்களாக இருக்கின்றனர்.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

சமீபத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிவப்பு நிறத்திலான லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 கார் மாடலை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காருக்கு முன்னதாக அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பயன்படுத்தி வந்தார். இதனை புதுப்பிக்கும் வகையில் அவர் அதிக விலைக் கொண்ட டிஃபென்டர் 110 மாடல் காரை வாங்கினார்.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

லேண்ட் டிஃபெண்டர் மிக அதிக சொகுசு வசதிகளைக் கொண்டது. ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு விதமான சாலைகளையும் அசால்டாக சமாளிக்கும். மேடு ,பள்ளங்களில் ஏறி இறங்கினாலும்கூட பெரியளவில் அதனால் ஏற்படும் அசௌகரியமான உணர்வு காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு தெரியாது. இதற்கேற்ப வடிவமைப்பை இக்கார் பெற்றிருக்கின்றது.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இதற்காக அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரடு, முரடான சாலையைப் போலவே 900 மிமீ ஆழம் வரையிலான நீர் நிலைகளைக் கூட இக்கார் அசால்டாக கடந்துவிடும் வசதியைப் பெற்றிருக்கின்றது. இதுபோன்ற பன்முக நிலப்பரப்புகளை சமாளிக்கும் விதமாக டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் -2 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இத்துடன், மிக அதிக சொகுசான இருக்கைகள், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஓட்டுநர் இருக்கை, ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதி, நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டு உள்ளன.

லேண்ட்ரோவர் டிஃபென்டர் கார்களில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 296 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து இந்த திறனை வெளியேற்றுகின்றது. இத்துடன், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இந்த மோட்டார் 400 பிஎஸ் பவரை வெளியேற்றும். இதேபோல் 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வும் டிஃபென்டரில் வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 300 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும். லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் ரூ. 86.24 லட்சம் தொடங்கி ரூ. 1.08 கோடி வரையிலான உச்சபட்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இத்தகைய உச்ச விலைக் கொண்ட காரிலேயே தமிழக முதலைச்சர் முக ஸ்டாலின் அவ்வப்போது தனது பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.

அட இவ்ளோ விலை உயர்ந்த காரிலா நம்ம முதலமைச்சர் பயணிக்கிறாரு! முக ஸ்டாலின் பயன்படுத்தும் கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்!

இந்தியாவில் இந்த விலையுயர்ந்த காரை இன்னும் பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாலிவுட் திரை பிரபலங்களான ஆயுஷ் ஷர்மா மற்றும் அர்ஜூன் கபூர், தொழிலதிபரான முகேஷ் அம்பானி என பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is the full details about tn cm mk stalin s new car land rover defender
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X