Just In
- 7 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 12 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...
மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் 7 இருக்கைகள் வசதிகள் கொண்ட ஐந்து புதிய கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் சப்-4 மீட்டர் மற்றும் 7 இருக்கை வசதிக் கொண்ட கார்களுக்கு அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. முன்னதாக இத்தகைய வசதிகளைக் கொண்ட கார் மாடல்களின் எண்ணிக்கை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே நாட்டில் கிடைத்து வந்தன. ஆனால், இந்த எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்து காணப்படுகின்றது.

தொடர்ந்து, அதிகரித்தும் வருகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இப்பிரிவின் சற்று கூடுதல் கவனம் செலுத்தி தங்களின் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. அந்தவகையில், விரைவில் இந்த சந்தையைக் குறி வைத்து விற்பனைக்கு வரவிருக்கும் 7 இருக்கை வசதிக்கொண்ட கார்கள் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

ஹூண்டாய் அல்கேஸர்:
ஹூண்டாய் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே இக்காரை அறிமுகப்படுத்தியது. இக்காரை ஆறு மற்றும் 7 இருக்கை வசதிகளுடன் விற்பனைக்குக் களமிறக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகு நீண்ட நாட்களாக இக்காரை எதிர்பார்த்து வந்தநிலையில் இந்த ஆண்டே இக்கார் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் கூறுகின்றன. இது ஓர் க்ரெட்டா எஸ்யூவி ரக கார் அடிப்படையிலான காராகும்.

இக்காரில் இருப்பினும் சில வித்தியாசங்களை வழங்கியிருக்கின்றது ஹூண்டாய். 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் என மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் இக்காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது ஹூண்டாய். இத்துடன், பன்முக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500:
மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 500 காரிலேயே 7 இருக்கைத் தேர்வு கொண்ட மாடலை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த மாடல் விற்பனைக்கு களமிறக்கும் வகையில் தற்போது தீவிர பல பரீட்சையில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு, சாலை சோதனையில் அது ஈடுபடும்போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக வெளியாகிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இக்கார் தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி500 காரைக் காட்டிலும் பிரமாண்ட உருவம் கொண்டதாக விற்பனைக்கு வரும் என தெரிகின்றது. மேலும், அதிக திறன்கள் 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜினில் இக்கார் விற்பனைக்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், எக்கசக்க சிறப்பு வசதிகளும் இக்காரில் இடம்பெற இருக்கின்றன.

மஹிந்திரா ஸ்கார்பியோ:
மஹிந்திரா நிறுவனம் அதன் ஸ்கார்பியோ காரிலும் 7 இருக்கை தேர்வை வழங்க திட்டமிட்டிருக்கின்றது. இந்த மாற்றத்தால் இக்காரை 4X4 பிரிவில் அல்லாமல் 4X2 பிரிவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இந்த எஸ்யூவி காரில் மிக அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்பம் மற்றும் சொகுசு வசதிகளை வழங்கவும் ஸ்கார்பியோ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கோடா கோடியாக்:
ஸ்கோடா நிறுவனம் அதன் கோடியாக் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலிலேயே அது 7 சீட்டர் தேர்வை வழங்க திட்டமிட்டுள்ளது. இக்கார் 2.0லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினில் எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பாண்டின் முதல் அல்லது இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

ஜீப் காம்பஸ் 7 சீட்டர்:
ஜீப் நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்திய சந்தையில் பன்முகப்படுத்த பார்க்கிறது. தற்போது, காம்பஸ் மட்டுமே இந்திய சந்தையில் வெகுஜன பிரிவில் விற்கப்பட்டு வருகின்றது. இதனையே ஏழு இருக்கைகள் கொண்ட பதிப்பாக இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஐந்து இருக்கைகள் வசதிக் கொண்ட பதிப்பில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றனவோ அந்த அம்சங்களுடனேயே இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலே பார்த்த இந்த ஐந்து கார்களே 7 இருக்கைகள் வசதியுடன் நடப்பாண்டிலேயே உள்நாட்டு சந்தையை அதகளப்படுத்தும் வகையில் களமிறங்க இருக்கின்றன. ஒவ்வொன்றும் படிப்படியாக நடப்பாண்டில் அறிமுகமாக இருக்கின்றன.