டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

டாடா பஞ்ச் காரை ரொம்ப தாராளமாக வாங்கலாம் என கூறுமளவிற்கு அதிக சிறப்பம்சங்களுடன் அக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதில் நாம் கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள் பற்றிய தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடலாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பஞ்ச் (Punch) கார் இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இதனை வரும் அக்டோபர் 4ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

இதனை முன்னிட்டு கார்குறித்த சுவாரஷ்ய தகவல்களை நிறுவனம் அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கையில் டாடா களமிறங்கியிருக்கின்றது. அண்மையில் காரின் டைமென்ஷன்ஸ், கேபின் பகுதி, நிறம் மற்றும் வேரியண்ட் உள்ளிட்ட முக்கிய விபரங்களை நிறுவனம் வெளியிட்டது.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

இதனால், பஞ்ச் காரின் மீதான எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்திருக்கின்றது என்றுகூட கூறலாம். மேலும், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள், டாடா பஞ்ச் காரை மிக தாரளமாக வாங்கிக்கொள்ளலாம் என கூறும் வகையில் அமைந்துள்ளன. இதற்கான 5 முக்கிய காரணங்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

டிசைன்:

டாடா பஞ்ச் கார் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அதன் கவர்ச்சிகரமான டிசைனும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. இக்காரை நிறுவனம் அதன் 2.0 டிசைன் தாத்பரியம் மற்றும் ஆல்ஃபா கட்டமைப்பு தளத்தை பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. இந்த யுக்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதே அல்ட்ராஸ் கார் மாடல்.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவைக் குறி வைத்து பஞ்ச் விற்பனைக்கு வந்தாலும் அளவில் பெரிய உருவம் கொண்ட காரைப் போன்று இது காட்சியளிக்கின்றது. மேலும், இக்காரின் முகப்பு பகுதி டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான ஹாரியர் எஸ்யூவியைப் போல் காட்சிளிக்கின்றது. இது நிறுவனத்தின் ஓர் கவர்ச்சியான கார் மாடலாகும்.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

இதன் தோற்றத்தை லேசாக பஞ்ச் பெற்றிருப்பது வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உயரமான பானெட் மற்றும் தட்டையான முகப்பு பகுதி உள்ளிட்டவை வாகன ஆர்வலர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

இத்துடன், காருக்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லைட் மற்றும் டிஆர்எல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரின் உட்புறத்தில் பல அடுக்கு டேஷ்போர்டு, அடர்த்தியான செவ்வக வடிவ ஏசி துவாரங்கள், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியில் இடம் பெற்றிருக்கின்றன.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

பாதுகாப்பு:

டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் காரை தயாரித்து வரும் ஆல்ஃபா (Agile Light Flexible Advanced) கட்டமைப்பு தளத்தைப் பயன்படுத்தியே பஞ்ச் காரையும் உருவாக்கியிருக்கின்றது. இந்த அல்ட்ராஸ் கார் பாதுகாப்பு தர ரேட்டிங்கில் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற வாகனமாகும்.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

ஆகையால், பஞ்ச் காரும் அதிக பாதுகாப்பு தரத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றது. பஞ்ச் காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மற்றும் பல ஏராளமான அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

சிறப்பம்சங்கள்:

டாடா பஞ்ச் மலிவு விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டாலும் அதில் மிக சிறப்பம்சங்கள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், நடுத்தர டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார்ப்ளே மற்றம் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), ஐஆர்ஏ கார் இணைப்பு, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், சாவியில்லா நுழைவு என எக்கசக்க அம்சங்கள் பஞ்சில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

எஞ்ஜின்:

அல்ட்ராஸ் காரில் வழங்கப்படும் அதே எஞ்ஜினே பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் கார் 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் எஞ்ஜின், 1.2 லிட்டர் ஐ-டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், டீசல் எஞ்ஜினை தவிர்த்து பிற இரு பெட்ரோல் எஞ்ஜின் தேர்வுகள் மட்டும் பஞ்ச் காரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

இட வசதி:

டாடா பஞ்ச் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் பெரிய உருவத்தில் உருவாகியிருக்கின்றது. ஆகையால், இதில் இட வசதி மிக தாரளமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கேயூவி100, மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஆகிய கார்களைக் காட்டிலும் கூடுதல் அளவில் பஞ்ச் உருவாகியுள்ளது.

டாடா பஞ்ச் காரை தாராளமாக வாங்கலாம்... இதோ 5 முக்கிய காரணங்கள்... இது தெரிஞ்சா இப்பவே புக் செய்ய ஆசப்படுவீங்க!

இதுகுறித்த தகவலை விரிவாக பட்டியலில் கீழே பார்க்கலாம்:

Dimensions Punch KUV100 Swift Ignis Grand i10 Nios
Length 3840mm 3700mm 3845mm 3700mm 3805mm
Width 1800mm 1735mm 1735mm 1690mm 1680mm
Height 1635mm 1655mm 1530mm 1595mm 1520mm
Ground Clearance 187mm 170mm 163mm 180mm 165mm
Wheelbase 2450mm 2385mm 2450mm 2435mm 2450mm
Most Read Articles

English summary
Here is top 5 reasons to buy tata punch micro suv
Story first published: Wednesday, September 29, 2021, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X