இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைகள் இவ்ளோ அதிகமா?

பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் 2021ம் ஆண்டில் மிகவும் பிரபலமாக காட்சியளித்த இரு மிக மிக விலையுயர்ந்த சொகுசு மற்றும் அதி திறன் வாய்ந்த கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

நான் அந்த நடிகரின் ஃபேன், இந்த நடிகையின் ஃபேன் என நாம் கூறிக்கொள்ளும் அந்த நடிகர்கள் ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த கார்களின் மிக பெரிய ஃபேன்களாக இருந்து வருகின்றனர். அதிலும், பாலிவுட் நடிகர்கள் மத்தியில் விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

புதிதாக ஓர் கார் சந்தைக்கு வந்தால் போதும் அதை வாங்கும் முதல் நபராக ஹிந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அந்தளவிற்கு மிக பெரிய ஆடம்பர கார் பிரியர்களாக அவர்கள் இருக்கின்றனர். விலையை பற்றி அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. அந்தவகையில், விலை காத்திருப்பு காலம் என எதையும் பொருட்படுத்தாமல் இரு சொகுசு கார்களுக்கு இந்தி நடிகர்கள் பேராதரவு கொடுத்திருக்கின்றனர்.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

இதனால், 2021ம் ஆண்டில் பாலிவுட் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற சொகுசு கார்களாக அவை மாறி இருக்கின்றன. அந்த இரு சொகுசு கார்கள் எது, அதன் சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Benz Maybach GLS 600)

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆடம்பர கார் மாடலை இந்தியாவிற்காக மிகக் குறைவான யூனிட்டுகளையே ஒதுக்கியது. 50 யூனிட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இவற்றில் ஐந்திற்கு மேற்பட்டம் யூனிட்டுகளை பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களே வாங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குரானா, அர்ஜூன் கபூர், கிரிதி சனோன் உள்ளிட்ட இந்தி திரைப்பட பிரபலங்கள் இக்காரை வாங்கியிருக்கின்றனர். இந்த கார் இந்தியாவில் ரூ. 2.43 கோடிகளுக்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய விலையுயர்ந்த சொகுசு காரே 2021ம் ஆண்டில் இந்தி திரையுலகினரைப் பெரிதும் கவர்ந்த காராக மாறியிருக்கின்றது.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

இந்த காரை முழுக்க முழுக்க சொகுசு வசதிகளை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கியிருக்கின்றது மெர்சிடிஸ் பென்ஸ். ஆகையால், எண்ணற்ற லக்சூரி அம்சங்கள் மேபேக் ஜிஎல்எஸ் மாடலில் இடம் பெற்றிருக்கின்றன. வென்டிலேடட் இருக்கைகள், எலெக்ட்ரானிக் வாயிலாக ஸ்லைட் செய்யும் வசதிக் கொண்ட பனோரமிக் சன்ரூஃப், 12.3 இன்ச் அளவுள்ள திரைகள், பன்முக தேர்வுகள் கொண்ட லைட்டிங் தேர்வுகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

இத்துடன், 'ஹே மெர்சிடிஸ்' குரல் கட்டளை வசதி மற்றும் புத்தம் புதிய எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்பங்களும் பென்ஸ் மேபேக் சொகுசு காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் சொகுசு காரை சொகுசு கப்பலாகவே மாற்றியிருக்கின்றது. ஆம், இந்த காரில் செல்லும்போது காற்றில் மிதப்பதைப் போன்று உணர்வு கிடைப்பதாக அதன் பயனர்கள் கூறுகின்றனர். இந்தளவிற்கு மிக ஏராளமான சிறப்பு சொகுசு வசதிகள் மேபேக் ஜிஎல்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தினாலேயே இந்திய திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus)

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காருக்கு அடுத்தபடியாக 2021ம் ஆண்டில் பாலிவுட் திரையுலகினரை பெரிதும் கவர்ந்த சொகுசு காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இந்த காருக்கு உலகளவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஆகையால், இதற்கு காத்திருப்பு காலம் சற்றே அதிகம். இந்தியாவிலும் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. குறிப்பாக, பாலிவுட் திரைப்பட நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

ரன்வீர் சிங், கார்திக் ஆர்யன், ரோஹித் ஷெட்டி மற்றும் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா உள்ளிட்டோர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரை கார்திக் ஆர்யன் வாங்கியது மிகவும் சுவாரஷ்யமான தகவலைக் கொண்டிருக்கின்றது. உருஸுக்கு டிமாண்ட் சற்று அதிகம் என்பதால் இதற்கான காத்திருப்பு காலம் சற்று அதிகமாக உள்ளது. இதனைத் தவிர்க்க கூடுதலாக பல லட்சங்களைக் கூடுதலாக செலவு செய்து இறக்குமதி செய்தார் கார்திக் ஆர்யன்.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

இந்தளவிற்கு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் லம்போர்கினி உருஸ் சொகுசு காருக்கு 2021ம் ஆண்டில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இக்கார் இந்தியாவில் ரூ. 3.10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. உருஸ் எஸ்யூவி உலகின் மிகவும் அதிகவேக எஸ்யூவி என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சொகுசு காரில் 4.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இரண்டே கார்கள்தான்... 2021ல் இந்தி நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு! எப்பா இதோட விலைய கேட்டா மயக்கமே வருது!

இந்த மோட்டார் அதிகப்பட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. இத்துடன் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இவையிரண்டும் சேர்ந்து வெறும் 3.6 வினாடிகளிலேயே உருஸ் காரை பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் எட்ட செய்யும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ ஆகும். இத்தகைய திறன் வெளிப்பாட்டினாலேயே மிகி திறன் வெளிப்பாடுக் கொண்ட எஸ்யூவி காராக இது காட்சியளிக்கின்றது. லம்போர்கினி நிறுவனம் உருஸ் கார் மாடலில் புதிய கிராஃபைட் கேப்சூல் எடிசனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருப்பது. இந்த எடிசனுக்கும் நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is two luxury cars list which were bought by many bollywood celebs in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X