அபுதாபி காவல்துறையும், அவர்களிடம் இருக்கும் சூப்பர்கள் கார்களும்.. இந்த காரை எல்லாம் அவங்க பயன்படுத்துறாங்களா!

அபுதாபி காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் சூப்பர் கார்கள் பற்றிய சிறப்பு தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை காணலாம்.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

துபாய் காவல்துறையில் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர கார்கள் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நாட்டின் காவல்துறை மட்டுமே ஆடம்பரமான கார்களை பயன்படுத்தி வருகின்றதா என்று கேட்டால், இல்லை என்பதே எங்களின் பதிலாகும். இதுபோன்று, பல நாடுகள் தங்களின் காவல்துறையில் மிக அரிய வகை மற்றும் உயரிய விலைக் கொண்ட சூப்பர் கார்களை பயன்படுத்தி வருகின்றன.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

அவற்றில், அபுதாபி காவல்துறையும் ஒன்று. இந்திய காவல்துறையில் மஹிந்திரா பொலிரோ மற்றும் மாருதி ஜிப்ஸி கார்களைப் பயன்படுத்தி வருவதைப் போலே அபுதாபி காவல்துறையில் மிக விலையுயர்ந்த கார் மாடலான ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் உள்ளிட்ட மிக மிக அதிக விலைக் கொண்ட லக்சூரி கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அபுதாபி காவல்துறையிடம் பயன்பாட்டில் இருக்கும் சில அற்புதமான கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls Royce Phantom)

அபுதாபி காவல்துறையில் முதல் முறையாக களமிறக்கப்பட்ட சொகுசு காராக ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் இருக்கின்றது. இந்த காரை 2015 ஆண்டிலேயே அபுதாபி அரசு அந்நாட்டு காவல்துறையில் பயன்படுத்தத் தொடங்கியது. சுற்றுலா பயணிகளைக் கவரும் பொருட்டு இந்த கார் காவல்துறையின் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

ரோல்ராய்ஸ் பேந்தம் சொகுசு காரில் வி12 6.8 லிட்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 453 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் வெறும் 6.1 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 240 கிமீ ஆகும். இந்தியாவில் இக்கார் ரூ. 8.99 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

லைகன் ஹைபர்ஸ்போர்ட் (Lykan Hypersport)

உலகில் விற்பனைக்கு கிடைக்கும் மிக அதிக விலைக் கொண்ட கார் மாடல்களில் லைகன் ஹைபர்ஸ்போர்ட்-ம் ஒன்று. இது மிக அதிக விலைக் கொண்டது மட்டுமில்லைங்க. மிக மிக அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட காரும்கூட. இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃப்ளாட்-6 3.7 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 770 எச்பி பவரையும், 960 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இக்கார் வெறும் 2.8 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 385 கிமீ ஆகும். இந்த கார் சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 21.7 கோடிக்கு அது விற்கப்பட்டு வருகின்றது. இத்தகைய மிக மிக அதிக விலைக் கொண்ட காரை அபுதாபி காவல்துறை பயன்படுத்தி ஒட்டுமொத்த உலகிற்குமே வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan)

அபுதாபி காவல்துறையில் லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் ஒரு சில வருடங்களுக்கு முன்னரே இணைக்கப்பட்டது. இந்த காரில், 5.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பைரேட்டட் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

இத்தகைய அதிக திறன் வெளிப்பாட்டை வழங்கும் சூப்பர் காரும் அபுதாபியின் காவல்துறையில் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரியர் வீல் டிரைவ் மற்றும் அனைத்து வீல் டிரைவ் என இரண்டு விதமான தேர்வுகளில் கிடைத்து வருகின்றது. ரூ. 2.99 கோடி தொடங்கி 3.97 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் இக்கார் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

நிஸ்ஸான் ஜிடி-ஆர் (Nissan GT-R)

அபுதாபி காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பு வாய்ந்த கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இந்த காரில் இடம் பெற்றிருக்கும் வி6 3.8 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 542 எச்பி திறன் வரை வெளியேற்றும். இது ஓர் 24 வால்வுகள் கொண்ட ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் மூன்றே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டிவிடும். இந்தியாவில் இக்கார் ரூ. 2.12 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

செவ்ரோலட் கேமரோ (Chevrolet Camaro)

2009ம் ஆண்டில் அமெரிக்காவின் மஸ்குலர் கார் எனும் விருதை வென்ற வாகனமே இந்த செவ்ரோலட் கேமரோ. இந்த கார் டிராக் ஸ்ட்ரிப் செய்வதற்கு உகந்த வாகனம் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை அபுதாபி காவல்துறையே செய்து காட்டியது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 50 லட்சம் தொடங்கி ரூ. 1.50 கோடி வரையிலான விலையில் இக்கார் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

அபுதாபி காவல்துறையும், அவர்களிடத்தில் இருக்கும் சூப்பர்கள் கார்களும்... இந்த காரை எல்லாம் போலீஸ்காரங்க பயன்படுத்துறாங்களா!!

மேலே பார்த்த இவையே அபுதாபி காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் மிக அரிய மற்றும் சிறப்பு வாய்ந்த சூப்பர் கார் மாடல்கள் ஆகும். இவை மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகள் கொண்ட கார்கள் அபுதாபி காவல்துறையின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஃபோர்டு டாரஸ் (Ford Taurus), மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes Benz), ஃபோக்ஸ்வேகன் டூவரெக் (Volkswagen Touareg) உள்ளிட்ட பல கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here list of abu dhabi police car collection
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X