திரை படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல்ல இருக்குங்க!

திரைப்படங்களின் வாயிலாக சில கார்கள் உலக மக்கள் மத்தியில் செம்ம ஃபேமஸாக ஆகி இருக்கின்றன. அவைகுறித்த கூடுதல் விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: Juanyo/Wiki Commons

ரியல் லைஃபில் பார்க்க முடியாத சில கார்களை கூட நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தக் கூடிய தளமாக இருக்கின்றது, சினிமா. இப்படி ஒரு வாகனம் இந்த உலகில் இருக்கின்றதா என கேள்வி எழுப்பக் கூடிய தயாரிப்புகள்கூட சினிமாவின் வாயிலாகவே அதன் தரிசனத்தை வழங்கியிருக்கின்றன. இவ்வாறு, திரைகளில் தரிசனம் வழங்கி பிரபலமடைந்தவை வாகனங்கள் பல இந்த உலகில் இருக்கின்றன.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: DougW/Wiki Commons

நம் மக்களை பற்றி சொல்லவா வேண்டும் திரையில் தோன்றும் எதுவாக இருந்தாலும் அதனை தங்களின் கனவாகவும், தலைவனாகவும் மாற்றிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படியானவர்கள் மத்தியில் கண்ணைக் கவரும் தோற்றத்தில் திரையில் தோன்றினால் அதற்கு ரசிகனாகமல் இருப்பார்களா என்ன?.. அப்படி பலரை திரையின் தோன்றி கவர்ந்த சில கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: Sicnag/Wiki Commons

டிஎம்சி டெலோரியன் (DMC DeLorean) - பேக் டு தி ஃபியூச்சர் சீரிஸ் (Back to the Future series)

புகழ்பெற்ற ஜியோர்கெட்டோ கியுகியாரோவால் (Giorgetto Giugiaro) வடிவமைக்கப்பட்ட வாகனமே டிஎம்சி டெலோரியன். இந்த கார் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. இது முதல் பேக் டு தி ஃபியூச்சர் எனும் பிரபல தொடரில் கால எந்திரமாக இடம் பெற்றது.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: Thilo Parg/Wiki Commons

இந்த திரைத் தோன்றலுக்கு பின்னர் இந்த வாகனம் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியது. மிகவும் முரட்டுத்தனமான மற்றும் கவர்ச்சியான தோற்றம் இந்த காருக்கு மிகவும் ஹாட்டான கார் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது. இந்த காரை உலகளவில் மிகக் குறுகிய அளவிலான நபர்களே பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், 6,500 நபர்கள் இப்போது இக்காரை பயன்படுத்தி வருகின்றனர்.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: richebets/Wiki Commons

1961 ஃபெர்ராரி 250 ஜிடி கலிஃபோர்னியா ஸ்பைடர் (1961 Ferrari 250 GT California Spyder) - ஃபெர்ரிஸ் ப்யூல்லர்'ஸ் டே ஆஃப் (Ferris Bueller's Day Off)

'ஃபெர்ரிஸ் ப்யூல்லர்'ஸ் டே ஆஃப்' எனும் திரைப்படத்தில் ஃபெர்ரிஸ் எனும் கதாப்பாத்திரம் மற்றும் அவரது நண்பர்கள், 1961 ஃபெர்ராரி 250 ஜிடி கலிஃபோர்னியா ஸ்பைடர் காரையே தங்களது ஜாலி ரைடுக்காக பயன்படுத்தி இருப்பர். இந்த திரைத் தோன்றலின் வாயிலாக பன் மடங்கு பிரபலமான வாகனமாக இது இந்த உலகில் உருவெடுத்தது. இந்த திரைப்படத்தின் இறுதியில் இக்கார் விபத்துக்குள்ளாவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியின்போது ஃபெர்ரிஸ் ப்யூல்லர்'ஸ் டே ஆஃப் டம்மியே பன்படுத்தப்பட்டிருந்தது.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: Andrew Bone/Wiki Commons

1966 ஃபோர்டு தண்டர்பேர்டு (1966 Ford Thunderbird) - தெல்மா அண்ட் லூயிஸ் (Thelma & Louise)

தெல்மா அண்ட் லூயிஸ் இதுவரை இப்படி ஒரு திரைப்படம் வந்ததே இல்லை என்று கூறுமளவிற்கு மிகவும் புதிய திரைக்கதையுடன் அந்த காலகட்டத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வார இறுதியை வேடிக்கையாக கழிக்க விரும்பும் பெண்களின் சின்ன சின்ன பயணத்தை பற்றியதாகும். இன்றும் பல பெண்களின் விருப்பமான படமாக இது இருக்கின்றது.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

பெண்கள் தங்களின் பயணத்திற்காக பயன்படுத்திய வாகனமே 1966 ஃபோர்டு தண்டர்பேர்டு ஆகும். இது ஓர் கன்வெர்டபிள் மேற்கூரை வசதிக்கொண்ட காராகும். இந்த அம்சம் பெண்களின் சுதந்திரமான பயண அனுபவத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்தது. இந்த காரணத்தினாலேயே, முக்கிய பெண்கள் மத்தியில் இந்த கார் நல்ல புகழை பெற்றது.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: Alf van Beem/Wiki Commons

1967 ஷெல்பி ஜிடி500 (1967 Shelby GT500) - கோன் இன் 60 செகண்ட்ஸ் (Gone in 60 Seconds)

கோன் இன் 60 செகண்ட்ஸ் படத்தில் அற்புதமான பல கார்கள் தோன்றியிருக்கும். ஆனால், இதில் பெரும்பாலானோரை கவரும் ஓர் வாகனமாக 1967 ஷெல்பி ஜிடி500 இருக்கின்றது. இதன் பிரத்யேகமான உடல் வடிவமைப்பு இப்போதும் பலரின் பிரியமான காராக இதனை தென்பட செய்கின்றது. திரைப்படத்தின் படப்பிற்காக இதுபோன்று ஒரே மாதிரியான 12 கார்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் ஐந்து தயாரிப்பின்போது அழிக்கப்பட்டன என்பது அதிர்ச்சியான தகவல்.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

1964 அஸ்டன் மார்டின் டிபி5 (1964 Aston Martin DB5)- கோல்டு ஃபிங்கர் (Goldfinger)

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் இடம் பெற்ற கார்களிலேயே பலரை கவர்ந்த காராக 1964 அஸ்டன் மார்டின் டிபி5 இருக்கின்றது. இந்த காரின் உடல் பேனல்கள் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், 282 பிஎச்பி மற்றும் மணிக்கு 233 கிமீ எனும் உச்சபட்ச வேகம் ஆகிய திறன்கள் கொண்ட 6 சிலிண்டர் எஞ்ஜினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: jcw1967/Wiki Commons

1963 ஃபோக்ஸ்வேகன் பீட்டில் (1963 Volkswagen Beetle) - ஹெர்பீ (Herbie)

வாகன பிரியர்கள் அனைவரின் பிரியமான கார் மாடலாக ஃபோக்ஸ்வேகன் பீட்டில் இருக்கின்றது. அதிலும், இந்த கார் ஹெர்பீ திரைப்படத்தில் தோன்றிய பின்னர் பலரின் லவ்வபிள் வாகனமாகவே அது மாறியது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்த கார் மாடல் பல மில்லியன் பேரின் மனதைக் கவர்ந்த வாகனமாக உருவெடுத்திருக்கின்றது. இது தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் தோன்றியதன் விளைவாக பல மடங்கு விற்பனை வளர்ச்சியைப் பெற்றது.

திரைப்படங்களால் வேர்ல்டு ஃபேமஸான கார் மாடல்கள்... நிறைய கார்கள் இந்த பட்டியல் இருக்குங்க!

Image Courtesy: Sicnag/Wiki Commons

மேலே பார்த்த கார்களைப் போலவே இன்னும் பல வாகனங்கள் திரையில் தோன்றியதனால் மக்கள் மத்தியில் பிரபலமான வாகனங்களாக மாறியிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தைக் காட்டிலும் பல ஆண்டுகளாக தற்போதும் கார் பிரியர்களின் மனம் கவர்ந்த கார் மாடல்களாக மேலே பார்த்த வாகனங்கள் இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here list some cars that have good relationship with big screens
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X