இந்தியாவில் கார்கள் அதிகம் விற்பனை ஆகும் நகரங்கள்!! சென்னைல கொஞ்சம் கம்மி தாங்க!
இந்தியாவில் அதிகளவில் கார்கள் விற்பனையாகும் டாப்-10 இந்திய நகரங்களை பற்றி இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாங்க செய்திக்குள் போகலாம்.

இந்த செய்தியில் குறிப்பிடப்படும் கார்கள் விற்பனை அனைத்துமே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 2021 மார்ச் மாதம் வரையில், அதாவது கடந்த நிதியாண்டில் நடந்தவை ஆகும்.

அதேபோல் இவை கார் தயாரிப்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அங்கீகாரம் பெற்ற டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவைகளின் எண்ணிக்கை ஆகும். அதேநேரம் இவை 100 சதவீதம் துல்லியமானவை கிடையாது, தோராயமானவை தான்.

| Rank | City | Industry | Monthly Average |
| 1 | NCR | 1,36,869 | 12,443 |
| 2 | Delhi | 1,28,907 | 11,719 |
| 3 | Bangalore | 1,08,870 | 9,897 |
| 4 | Hyderabad | 1,02,691 | 9,936 |
| 5 | Mumbai | 1,01,681 | 9,244 |
| 6 | Ahmedabad | 77,283 | 7,026 |
| 7 | Pune | 77,090 | 7,008 |
| 8 | Chennai | 62,660 | 5,696 |
| 9 | Kolkata | 53,580 | 4,871 |
| 10 | Lucknow | 51,148 | 4,650 |
Source: Autopunditz
இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ள என்சிஆர் பகுதியில் மாதந்தோறும் கிட்டத்தட்ட 12,443 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தமாக கடந்த நிதியாண்டில் 1,36,869 பயணிகள் கார்கள் இந்த நகரத்தில் விற்கப்பட்டுள்ளன.

பயணிகள் கார்கள் என்றால் அதில் எஸ்யூவிகள், ப்ரீமியம் செடான்கள் மற்றும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் உள்பட அனைத்து விதமான கார்களும் அடங்கும். என்சிஆர் நகரத்திற்கு அடுத்து தலைநகர் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.

என்சிஆர் பகுதியை காட்டிலும் டெல்லியில் சற்று குறைவாகவே கார்கள் விற்பனையாகுகின்றன. டெல்லியில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 11,719 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் 1,28,907 கார்கள் டெல்லியில் விற்கப்பட்டுள்ளன.

மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் நமது அண்டை மாநிலங்களின் தலைநகர்களான பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளன. மும்பை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இவை ஐந்தும் தான் இந்தியாவின் பிரதான கார் விற்பனை நகரங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு அடுத்துள்ள நகரங்களில் சிறிது சுமார் தாங்க. கடந்த நிதியாண்டில் விற்பனை 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

அகமதாபாத் மற்றும் புனே நகரங்கள் அடுத்த 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன. இந்த லிஸ்ட்டில் நமது சென்னை சராசரியாக 5,696 கார்களின் விற்பனை உடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் மிக பெரிய மாநகராட்சிகளுள் ஒன்றான சென்னையில் 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் மொத்தம் 62,660 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








