Just In
- 45 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
வரலாற்று நிகழ்வு.. இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண் கொடுத்த அதிரடி புகார்... சிக்கலில் பிரபல ஹிந்தி நடிகர்... என்ன நடந்தது தெரியுமா?
பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல ஹிந்தி நடிகர் மீது மும்பை நகர போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று உலக காதலர்கள் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் தங்களின் இணையுடன் அந்த நாளை கொண்டாடினர். இந்த நாளை காதல் ஜோடிகள் மட்டுமின்றி இளம் தம்பதிகள் முதல் முதிர்ந்த தம்பதியினர் வரை தங்களின் அன்பை தங்களுடைய வாழ்க்கை துணையுடன் பரிமாறிக் கொண்டனர்.

அந்தவகையில், பிப்ரவரி 14 காதலர் தினத்தை தனது மனைவியுடன் கொண்டாடியததற்காகவே பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் தற்போது சிக்கலில் சிக்கியிருக்கின்றார். ஆமாங்க, பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிக்கலில் சிக்கிய பிரபல நடிகர் இவரே ஆவார்.

இவர், கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று தனது மனைவியுடன் ஹார்லி டேவிட்சன் பைக்கில் ஓர் ஜாலி ரைடு சென்றிருந்தார். அப்போது, அவரும், அவரது மனைவியும் ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகின்றது. இதனை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவும் உறுதி செய்கின்றது. இந்த வீடியோ அதிகப்படியாக வைரலானநிலையில் பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.

இது ஓர் தவறான முன் உதாரணம் என தங்களின் எதிர்பார்ப்பை நெட்டிசன் சிலர் முன் வைத்தனர். இதில் சுவாரஷ்யம் என்னவென்றால் இந்த வீடியோவை வெளியிட்டவரே விவேக் ஓபராய்தான். "இந்த அழகான காதலர் தினத்தின் தொடக்கத்தில் நானும், என் மனைவியும். உண்மையில் இது ஓர் புத்துணர்ச்சியூட்டும் ஜாய்ரைடு!" என பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவே தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது. மனைவியுடன் ஜாலி ரைடு சென்றபோது ஹெல்மெட் அணியவில்லை மற்றும் தற்போதைய கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்பட்டு வருகின்றது. இந்த விதியையும் அவர் கடைபிடிக்காமல் ஜாலியாக வலம் வந்திருக்கின்றார்.

இதுவே இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்திருக்கின்றது. அந்தவகையில், இது ஓர் ஆபத்தான முன்னுதாரணம் என்பதை உணர்ந்த சமூக ஆர்வலர் மீனு வர்கீஸ் என்பவர், விவேக் ஓபராயின் தவறுகளை சுட்டிக் காட்டி புகார் அளித்தார். இந்த விவகாரம் மஹாராஷ்டிரா உள்துறை அமைமச்சர் அணில் தேஷ்முக் காதுவரை சென்றது.

இதனையடுத்து அவரே களத்தில் இறங்கி, நடிகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்தே மும்பை சான்டாக்ரூஸ் போக்குவரத்து போலீஸார், நடிகர் விபேக் ஓபராய்க்கு அபராத செல்லாணை அனுப்பி வைத்தனர். ரூ. 500க்கான அபராத செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இது ஹெல்மெட் அணியாததற்கான அபராதம் மட்டுமே ஆகும். மாஸ்க் அணியாமல் இருந்ததற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. மும்பை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதி வாழ் மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயம். இந்த விதியையும் விவேக் ஓபராய் மீறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் ஓபராய் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவும் விதமாக அண்மையில் ரூ. 16 கோடியை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை சந்திக்க நிதி ரீதியாக சிக்கலை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு உதவும் விதமாக இந்த தொகையை அவர் ஒதுக்கியிருக்கின்றார்.