Just In
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தன்னுடைய 74வது வயதில் சூப்பர் கார் வாங்கிய பிரபல நடிகர்... யார் அவர் தெரியுமா? தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!
பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் ஒருவர் தன்னுடைய 74வயதில் சூப்பர் கார் ஒன்றை வாங்கியிருக்கின்றார். இக்கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்களைக் கீழே காணலாம்.

உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களில் செவ்ரோலே நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்திய சந்தையை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறியது. ஆகையால், நிறுவனத்தின் வர்த்தகம், உற்பத்தி என அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இருப்பினும், கடந்த காலங்களில் தான் விற்பனைச் செய்த கார்கள் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் அந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக உதிரி பாகங்களை விற்பனைச் செய்வது, சர்வீஸ் வழங்குவது என சில தனித்துவமான பணிகளில் மட்டும் செவ்ரோலே தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

இந்தியாவை விட்டு இந்நிறுவனம் வெளியேறி இருந்தாலும் உலக நாடுகளில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மிக சிறப்பான நிலையில் காணப்படுகின்றது. அந்தவகையில், நிறுவனத்தின் சிறப்பான வரவேற்பைப் பெறும் சூப்பர் கார்களில் கொர்வெட் கன்வர்டபிள் கார் இருக்கின்றது.

இது ஓர் சூப்பர் லக்சூரி ஸ்போர்ட்ஸ் ரக காராகும். சொகுசு மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் திறனை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் காராக இது இருந்து வருகின்றது. இத்தகைய காரையே பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரான சில்வெஸ்டர் ஸ்டால்லோன் வாங்கியிருக்கின்றார். ஆமாங்க, இவர்தான் இந்த விலையுயர்ந்த சூப்பர் காரை வாங்கியவர்.

இவரை அறியாதவரை காண்பது மிக அரிது. ரேம்போ போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் இவர். எனவே உலகளவில் இவருக்கு ரசிக பட்டாளம் உண்டு. தற்போது இவர் ஃப்ளோரிடாவில் வசித்து வருகின்றார். இங்குள்ள டென்னஸ்ஸீ டீலர்ஷிப்பின் வாயிலாகவே கொர்வெட் சூப்பர் காரை சில்வெஸ்டர் வாங்கியிருக்கின்றார்.

இவர் வாங்கியிருப்பது ரேபிட் ப்ளூ நிறத்திலான செவ்ரோலே கொர்வெட் காராகும். இதில், ஸ்போர்ட் கார்களுக்கு இணையான சூப்பர் பவர் திறன் மற்றும் சொகுசு கார்களுக்கு இணையான சொகுசு வசதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதன் காரணத்தினாலயே தனது பயணங்களில் பங்கு கொள்ளும் விதமாக இந்த அதி திறன் கொண்ட காரை ஹாலிவுட் நடிகர் வாங்கியிருக்கின்றார்.

இக்காரில் நேட்சுரல்லி அஸ்பயர் திறன் கொண்ட வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 495 எச்பி பவர் மற்றும் 470 டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 194 மைல் ஆகும். தொடர்ந்து, பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிமீ எனும் வேகத்தை 2.9 செகண்டுகளிலேயே இக்கார் தொட்டுவிடும்.

இந்த சூப்பர் திறனைக் கொண்டிருக்கும் செவ்ரோலே கொர்வெட்டே காரையே 74 மதிப்புள்ள சில்வஸ்டர் தற்போது வாங்கியிருக்கின்றார். சில குறிப்பிட்ட காரணங்களால் கொர்வெட்டே சி8 கார் மாடலின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது. வருகின்ற 16ம் தேதியில் இருந்து இப்பணி மீண்டும் தொடங்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த காரணத்தினாலயே இக்காரின் டெலிவரி பணிகள் சற்று காலதாமதாக செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், சில்வஸ்டர் அவ்வாறு இல்லாமல் மிக குறுகிய காலத்தில் கார் டெலிவரியைப் பெற்றிருக்கின்றார்.