புது ஹோண்டா கார் வாங்கப் போறீங்களா?... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர்? பார்த்துட்டு புக் பண்ணுங்க!

ஹோண்டா கார்களுக்கு இந்த மாதமும் தள்ளுபடி மற்றும் சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர் பெற முடியும் என்ற விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புது ஹோண்டா கார் வாங்கப் போறீங்களா?... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர்? பார்த்துட்டு புக் பண்ணுங்க!

கொரோனா பிரச்னை காரணமாக, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனது கார்களுக்கு தொடர்ந்து ஆஃபர்களை வழங்கி வருகிறது ஹோண்டா கார் நிறுவனம். விலையில் நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவற்றுடன் இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புது ஹோண்டா கார் வாங்கப் போறீங்களா?... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர்? பார்த்துட்டு புக் பண்ணுங்க!

ஹோண்டா ஜாஸ்

புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.21,098 வரை அதிகபட்சமாக சேமிப்பை பெற முடியும். இந்த காருக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும். விலை தள்ளுபடி வேண்டாம் என்பவர்கள் மாற்றாக ரூ.11,908 மதிப்புடைய கூடுதல் ஆக்சஸெரீகளை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

புது ஹோண்டா கார் வாங்கப் போறீங்களா?... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர்? பார்த்துட்டு புக் பண்ணுங்க!

ஹோண்டா டபிள்யூஆர்வி

ஹோண்டா டபிள்யூஆர்வி காருக்கு ரூ.22,158 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.10,000 தள்ளுபடி அல்லது இதற்கு மாற்றாக ரூ.12,158 மதிப்புடைய கூடுதல் ஆக்சஸெரீகளை பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

புது ஹோண்டா கார் வாங்கப் போறீங்களா?... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர்? பார்த்துட்டு புக் பண்ணுங்க!

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.33,469 வரை தள்ளுபடி பெற முடியும். ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களுக்கு மட்டுமே இந்த மாதம் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அமேஸ் வி எம்டி, விஎக்ஸ் எம்டி வேரியண்ட்டுகளுக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ரூ.5,000 தள்ளுபடியும் உள்ளது. இந்த தள்ளுபடிக்கு பதிலாக ரூ.5,998 மதிப்புடைய கூடுதல் ஆக்சஸெரீகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

புது ஹோண்டா கார் வாங்கப் போறீங்களா?... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர்? பார்த்துட்டு புக் பண்ணுங்க!

ஹோண்டா அமேஸ் எஸ் எம்டி வேரியண்ட்டிற்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15,000 நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. நேரடி தள்ளுபடிக்கு பதிலாக ரூ.18,496 மதிப்புடைய கூடுதல் ஆக்சஸெரீகளை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

புது ஹோண்டா கார் வாங்கப் போறீங்களா?... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு ஆஃபர்? பார்த்துட்டு புக் பண்ணுங்க!

மேற்கண்ட கார்களுக்கான ஆஃபர்கள் வரும் ஜூன் 30ந் தேதி வரை புதிய ஹோண்டா காரை புக்கிங் செய்பவர்கள் பெற முடியும். ஆனால், இதுகுறித்த கூடுதல் விபரங்களை அருகிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்வது அவசியம். புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு இந்த மாதம் எந்த ஆஃபரும் அறிவிக்கப்படவில்லை.

Most Read Articles

English summary
Honda has announces June discount offers for their some of the car models in India.
Story first published: Monday, June 7, 2021, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X