கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துவரும் அனைத்து கார் மாடல்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

ஹோண்டாவின் விலை அதிகரிப்பு நடவடிக்கைக்கு அதன் ஜாஸ், டபிள்யூஆர்-வி, அமேஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை சிட்டி கார்கள் உட்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் வேரியண்ட்களை பொறுத்து அதிகப்பட்சமாக ரூ.20,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

வழக்கம்போல் கார் தயாரிப்பு பாகங்களுக்கான செலவு அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரும்பின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

இதற்கு கொரோனா வைரஸ் பரவலையும், அதற்காக கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளையும் மிக முக்கிய காரணமாக சொல்லலாம். இதன் எதிரொலியாகவே ஹோண்டா மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களும் தங்களது விற்பனை வாகனங்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

ஹோண்டா ஜாஸில் இருந்து ஆரம்பிப்போம். ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனை செய்யப்படும் இந்த காரை மேனுவல் அல்லது சிவிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் பெறலாம். இதன் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் தலா ரூ.5 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

இதனால் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் இனி ரூ.7.55 லட்சம் - ரூ.9.79 லட்சம் ஆகும். ஹோண்டா பிராண்டின் காம்பெக்ட் செடான் மாடலான அமேஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்விலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

இதன் விலைமிக்க டாப் சிவிடி ட்ரிம்-ஐ தவிர்த்து மற்ற அனைத்தின் விலைகளும் ரூ.5,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பிறகான ஹோண்டா அமேஸ் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.6.22 லட்சத்தில் இருந்து ரூ.8.84 லட்சம் வரையிலும், டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.7.68 லட்சத்தில் இருந்து ரூ.9.09 லட்சம் வரையிலும் உள்ளன.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் வாங்கலாம். புதியதாக ரூ.8.55 லட்சத்தில் இருந்து ரூ.11.05 லட்சம் வரையில் விலைகளை பெற்றுள்ள இந்த ஹோண்டா காரின் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் ரூ.5,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

ஹோண்டா பிராண்டில் இருந்து கடைசியாக இந்திய சந்தையில் அறிமுகமான ஐந்தாம் தலைமுறை சிட்டி காரின் விலைகளும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதன் விலைமிக்க வேரியண்ட்களின் விலைகள் ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலைகள் ரூ.10,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்களின் விலைகளை உயர்த்தியது ஹோண்டா!! முழு விபரம் இதோ!

இந்த விலை உயர்வுக்கு பிறகு ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விலைகள் ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.14.64 லட்சமாக வரையில் மாற்றமடைந்துள்ளன. இது அதன் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகளாகும். டீசல் வேரியண்ட்களின் புதிய விலைகள் ரூ.12.49 லட்சத்தில் இருந்து ரூ.14.84 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Honda Cars Price Hike Announced In India: Here Are The New Model-Wise Pricelist
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X