பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

இந்திய சந்தையில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை களமிறக்க இருப்பதை Honda நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

இந்திய சந்தையில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றை அறிமுகம் செய்யும் பணிகளில் Honda நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவலை Honda நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் வகையில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றை Honda நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

இந்திய வாடிக்கையாளர்கள் பலர் தற்போது மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் கார்களுக்கு மாறி கொண்டுள்ளனர் என்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. சமீபத்தில் Skoda Kushaq இந்த செக்மெண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

இதை தொடர்ந்து Volkswagen Taigun மிட்-சைஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. வரும் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில், Volkswagen Taigun விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புனேவிற்கு அருகே உள்ள தொழிற்சாலையில் தற்போது இந்த காரின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்பதிவுகளும் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டு வருகின்றன.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் அடைந்து வரும் வளர்ச்சியை கவனித்து வரும் Honda, தானும் அதில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என விரும்புகிறது. ஏனெனில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த செக்மெண்ட் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது பெரும் வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

31XA என்ற குறியீட்டு பெயரில் Honda நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி அழைக்கப்படும். Honda City காரின் பிளாட்பார்ம் அடிப்படையில், இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரத்யேகமாக இந்திய சந்தைக்கான மாடலாக இருக்கும் என Honda கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் Rajesh Goel கூறியுள்ளார்.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

எனவே இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி முதலில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு சர்வதேச சந்தைகளுக்கும் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கொண்டு செல்லப்படலாம். ஏனெனில் புதிய ஒரு எஸ்யூவியை உருவாக்குவதற்கு அதிக முதலீடும், நேரமும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

Honda 31XA மிட்-சைஸ் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் வரும் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போதைய நிலையில் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

இந்திய சந்தையில் Hyundai Creta, Kia Seltos மற்றும் Skoda Kushaq உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு, புதிய ஹோண்டா 31XA கார் போட்டியாக இருக்கும். அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள Volkswagen Taigun மிட்-சைஸ் எஸ்யூவி கார் உடனும், Honda 31XA போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

இதுதவிர MG Hector, TATA Harrier மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட Mahindra XUV700 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும் வகையில் 31XA காரை Honda நிறுவனம் சந்தையில் நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் City காரில் பயன்படுத்தப்படும் அதே இன்ஜின்களை 31XA காரிலும் Honda நிறுவனம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

பாகங்களை பகிர்ந்து கொள்வது என்பது இங்கே மிகவும் முக்கியமானது. ஏனெனில் புத்தம் புதிய பவர்ட்ரெயின்களை உருவாக்குவதற்கு அதிக முதலீடும், நேரமும் தேவைப்படும். ஆனால் Honda நிறுவனம் ஏற்கனவே எஸ்யூவி செக்மெண்ட்டில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

பொறுத்தது போதும்... பொங்கி எழுகிறது Honda... இந்திய சந்தையில் தரமான சம்பவத்தை நிகழ்த்த திட்டம்!

எனவே பாகங்களை பகிர்ந்து கொள்வது முகவும் முக்கியமானதாக இருக்கும். இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் நேற்றுதான் இந்திய சந்தையில் புதிய 2021 Honda Amaze facelift காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் டிசைன் மற்றும் கேபினில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda confirms new mid size suv for the indian market here are all the details
Story first published: Thursday, August 19, 2021, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X