கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

ஹோண்டா நிறுவனம் ஹைனெஸ் சிபி350 பைக்கை மேலும் மூன்று புதிய நிறங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

ஹோண்டா நிறுவனம் அதன் புதுமுக பைக்குகளில் ஒன்றான ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை மேலும் புதியாக மூன்று நிறங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் மிக சமீபத்திய அறிமுகமாக இப்பைக் இருக்கின்றது.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதே ஹைனெஸ் சிபி350 பைக். ஆனால், இப்பைக்கை தற்போது தனது தாய் நாடான ஜப்பானிற்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது ஹோண்டா. இதற்காக சில மாற்றங்கள் இப்பைக்கில் செய்யப்பட்டு வருகின்றன.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

அந்தவகையில், சேர்க்கப்பட்டிருப்பதே மூன்று புதிய நிறங்கள். மேட் பியர் மோரியன் கருப்பு, மேட் ஜீன் ப்ளூ மெட்டாலிக் மற்றும் கேன்டீ க்ரோமோஸ்பியர் சிவப்பு ஆகிய நிறங்களில் இப்பைக் ஜப்பானுக்கு பறக்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி இப்பைக்கை ஜிபி350 எனும் பெயரிலேயே ஜப்பானில் விற்பனைச் செய்ய இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

ஆகையால், இந்தியாவில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் இப்பைக் ஜப்பானில் ஜிபி350 எனும் பெயரில் களமிறங்க இருக்கின்றது. எனவே புதிய மூன்று நிற தேர்வுள்ள ஹைனெஸ் சிபி350 பைக்கை இந்தியர்களால் வாங்கவே முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

நிறம் மற்றும் பெயர் மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றங்களையும் ஜப்பானியர்களுக்காக ஹோண்டா சிபி350 பைக்கில் செய்யப்படவில்லை. ஆகையால், இந்தியாவில் என்ன எஞ்ஜினில் ஹைனெஸ் சிபி350 பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றதோ, அதே எஞ்ஜினிலேயே ஜப்பானில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் 348.36சிசி திறனை வெளியேற்றக் கூடிய 4 ஸ்ட்ரோக், எஸ்ஐ எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 15.5கிலோவாட் (20.8 பிஎச்பி) திறனை 5,500 ஆர்பிஎம்மிலும், 30என்எம் டார்க்கை 3,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த எஞ்ஜின் இயங்குகின்றது. இத்துடன், டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் சிஸ்டமும் கூடுதல் தொழில்நுட்பங்களாக இந்த எஞ்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பைக்கின் டிஎல்எஸ் வேரியண்ட் ரூ. 1,89,905 என்ற விலையிலும், டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட் ரூ. 1,95,905 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

கூடுதலாக 3 புதிய நிறங்களை பெறுகிறது ஹோண்டா ஹைனெஸ் சிபி350... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல!!

மேற்கூறியவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் கருப்பு, சிவப்பு, வெள்ளி, நீலம், சாம்பல் மற்றும் பச்சை என ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Honda Highness CB350 Bike Gets Three New Colours. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X