27.8 கிமீ மைலேஜ்... பெரும் ஆவலை ஏற்படுத்தும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல்... விரைவில் இந்தியா வருகிறது!

ஹோண்டா சிட்டி காரின் ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை எலெக்ட்ரிக் மோடில் வைத்து இயக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்தியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு புதிய தலைமுறை மாடலாக ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் முற்றிலும் புதிய மாடலாக வந்தது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

இந்த நிலையில், இந்த காரின் ஹைப்ரிட் மாடல் கடந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மலேசியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

இந்த சூழலில், ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்தியாவில் களமிறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி கூறுகிறது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

இந்த ஹைப்ரிட் கார் மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. அதாவது, இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின், மின் மோட்டார்களை தனித்தனியாகவும், சேர்ந்தும் இயக்கும் வாய்ப்பை வழங்குவதுதான் இதன் ஆகச் சிறந்த அம்சமாக உள்ளது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

இந்த புதிய ஹோண்டா சிட்டி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு மின் மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரையும், 127 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் இருக்கும் இரண்டு மின் மோட்டார்களில் ஒன்று முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டு நேரடியாக முன்சக்கரங்களுக்கு பவரை வழங்கும் விதத்தில் உள்ளது. இந்த சக்திவாய்ந்த மின் மோட்டார் 108 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

மற்றொன்று, பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து செயல்படும். தேவைப்படும்போது கூடுதல் டார்க் திறனை வழங்கும் வகையில் இந்த மின் மோட்டார் செயல்படும். இதனால், இந்த கார் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். கணக்கீடுகளின்படி, இந்த கார் ஹைப்ரிட் மோடில் லிட்டருக்கு 27.8 கிமீ மைலேஜ் வரை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலில் விசேஷ கருப்பு வண்ணப்பூச்சு கொண்ட க்ரில் அமைப்பு, ரியர் டிஃபியூசர், அலங்கார அம்சங்களுடன் பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், ரியர் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை உள்ளன.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளககுகள், எல்இடி டெயில் லைட்டுகள், கீ லெஸ் என்ட்ரி, புஷ் ஸ்டார்ட் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்தியா வருகிறது!

ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோ ஹை பீம் என இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் தொழில்நுட்ப அம்சங்களுக்கு தக்கவாறு விலையும் அதிகமாக இருக்கிறது. சாதாரண சிட்டி கார் மாடலைவிட புதிய சிட்டி ஹைப்ரிட் மாடல் விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 11, 2021, 16:24 [IST]
English summary
According to report, Honda is planning to launch City Hybrid sedan car in India very soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+