2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகிய கார்களின் பட்டியலில் இருந்து 8 ஹாட்டான் கார் மாடல்களை தேர்வு செய்து இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் எந்தெந்த கார்கள் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன என்பது பற்றிய கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

கொஞ்சம் நாட்கள் முழு லாக்டவுண், கொஞ்சம் நாட்கள் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுண் என பல நிலைகளில் நடப்பு 2021ம் ஆண்டு நம்மைக் கடந்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த ஆண்டு நம்மை விட்டு முழுமையாகக் கடக்க இருக்கின்றது. என்னதான் இந்த ஆண்டில் கொரோனா வைரசால் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும், சில முன்னணி நிறுவனங்கள் அதன் புதுமுக தயாரிப்புகளை மிக துணிச்சலுடன் விற்பனைக்குக் களமிறக்கின.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

அந்தவகையில், நடப்பு 2021ம் ஆண்டில் இந்தியாவை கலக்கும் வகையில் விற்பனைக்கு வந்த மிகவும் ஹாட்டான 8 கார் மாடல்களை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அனைத்தும் பன் மடங்கு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

டாடா பஞ்ச் (Tata Punch)

இதனை மிகவும் ஹாட்டான அல்லது மிகவும் பாதுகாப்பான அல்லது மிகவும் குறைவான விலைக் கொண்டது என எப்படி வேண்டுமானாலும் இதனைக் கூறலாம். இவையனைத்தையும் தாங்கிய ஓர் வாகனமாகவே பஞ்ச் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. டாடா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு அந்தஸ்துக் கொண்ட வாகனமாகும். பன்முக சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை தாங்கிய வாகனமாகவும் இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. தற்போது டாடா மோட்டார்ஸின் இரண்டாவது மிக சிறந்த விற்பனையாகும் காராக இது மாறியிருக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700)

இக்காரை சிறப்பம்சங்கள் நிரப்பப்பட்ட ஓர் வாகனம் என்றே கூறலாம். அந்தளவிற்கு பன்முக சிறப்பு வசதிகளை தாங்கிய கார் மாடலாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் அதன் சின்னத்தை மாற்றிய பின்னர் விற்பனைக்கு வந்த முதல் தயாரிப்பு இதுவாகும். ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதற்கு புக்கிங் தொடங்கப்பட்ட இரண்டே நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை, டிஜிட்டல் டிரைவர் திரை, ஸ்மார்ட் டூர் ஹேண்டில், அடாஸ், ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 12.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

எம்ஜி அஸ்டர் (MG Astor)

இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ மற்றும் லெவல் 2 தன்னியக்க ஓட்டுநர் திறன் கொண்ட காராகும். இந்த அம்சத்துடன் விற்பனைக்கு வரும் முதல் மின்சார காராக இது இருக்கின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 9.78 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இதன் உச்ச நிலை வேரியண்டில் மட்டுமே அடாஸ் சிறப்பு தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 15.78 லட்சமாக இருக்கின்றது. இக்காரை கார்-அஸ்-ஏ-பிளாட்பாரத்தின் வாயிலாக நிறுவனம் விற்பனைக்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

டாடா சஃபாரி (Tata Safari)

நிறுவனத்தின் மிகவும் சிறப்பான தயாரிப்பாக சஃபாரி இருக்கின்றது. 21 ஆண்டு கால தனி சிறப்பு வரலாறு இக்காருக்கு உண்டு. இதற்கு நவீன கால தோற்றமளித்தே புதிய சஃபாரி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் இக்கார் ரூ. 14.99 லட்சம் தொடங்கி ரூ. 23.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar)

நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஒன்றான க்ரெட்டா எஸ்யூவியை தழுவி உருவாக்கப்பட்ட மாடலாக அல்கஸார் இருக்கின்றது. டாடா சஃபாரி போன்ற பிரமாண்ட தோற்றம் கொண்ட காருக்கு போட்டியாக இதனை ஹூண்டாய் நிறுவனம் இந்தியா கொண்டு வந்திருக்கின்றது. மிகவும் ஹாட்டான தோற்றத்தைக் கொண்டிருக்கும் இக்காருக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த கார் தற்போது ரூ. 16.30 லட்சம் தொடங்கி ரூ. 20.14 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq)

கார் இணைப்பு தொழில்நுட்பம், பன்முக பாதுகாப்பு சிறப்பம்சங்கள், காற்றோட்டமான இருக்கைகள் என இன்னும் ஏராளமான பிரீமியம் தர அம்சங்களைக் கொண்ட வாகனமாக குஷாக் இருக்கின்றது. இதன் வருகை பிரீமியம் தர கார் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றுகூட கூறலாம்.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

குஷாக் காருக்கு ஸ்கோடா நிறுவனம் 4 வருடங்கள் வாரண்டி, மற்றும் 6 வாருடங்கள் கூடுதல் வாரண்டி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றது. 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய எஞ்ஜின் தேர்வுகள் குஷாக்கில் வழங்கப்படுகின்றன. இக்கார் இந்தியாவில் ரூ. 10.79 லட்சம் தொடங்கி ரூ. 17.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha)

மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு கடுமையான சவாலை வழங்க வேண்டும் என்பதற்காக ஃபோர்க்ஸ் களமிறக்கியதே குர்கா. இந்த கார் கடந்த 27ம் தேதி அன்றே இந்தியாவில் அறிமுகமானது. பன்முக சிறப்பு வசதிகளை இவ்வாகனம் கொண்டிருக்கின்றது. எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறன்,700 மிமீ ஆழமுள்ள நீர் நிலைகளைக் கூட கடக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்கள் குர்காவில் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், மிக சிறந்த மற்றும் ஹாட்டான வாகனமாக குர்கா காட்சியளிக்கின்றது. இந்த கார் ரூ. 13.59 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 ஸ்பெஷல்: 2021ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான செம்ம ஹாட்டான கார் மாடல்கள்... மொத்தம் 8 அறிமுகமாகியிருக்கு!

டாடா டிகோர் இவி (Tata Tigor EV)

இந்தியாவின் மிகவும் குறைவான எலெக்ட்ரிக் காராக டிகோர் இவி இருக்கின்றது. இந்த கார் ரூ. 11.99 லட்சம் தொடங்கி ரூ. 13.14 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இம்மின்சார காரிலி ஜிப்ட்ரான் எனும் தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தி இருக்கின்றது. இதில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் 26 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி ஒற்றை முழுமையான சார்ஜில் 306 கிமீ வரை ரேஞ்ஜ் வழங்கும். இத்தகைய வசதிகளால் இந்தியாவின் ஹாட்டான அறிமுகங்களில் டிகோர் இவி-யும் ஒன்றாக இடம் பிடித்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hottest cars models launched in 2021 eight car models list
Story first published: Monday, December 20, 2021, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X