புதிய பிஎச் சீரிஸில் வாகனங்களை பதிவு செய்வது எப்படி? மின்சார வாகனங்களுக்கு 2சதவீதம் வரி குறைப்பு செய்றாங்க!

பிஎச் சீரிஸில் வாகனங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த முக்கியமான தகவலைக் கீழே காணலாம்.

பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

பாரத் சீரிஸ் எனும் புதிய பதிவு முறையை அண்மையில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த புதிய பதிவு முறை வரும் செப்டம்பர் 15ம் தேதி முறையில் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. பாதுகாப்பு துறை, ஒன்றியம் மற்றும் மாநில அரசு பணியில் இருப்பவர்கள், பொது பணி துறையில் பணியாற்றுபவர் மற்றும் நான்கிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளை வைத்து செயல்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஏதுவாக இப்புதிய பதிவு முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

இப்புதிய பதிவு முறையின் வாயிலாக பதிவு செய்யப்படும் வாகனங்கள் வேறொரு மாநிலத்திற்கு இடம் பெயரும்போது அந்த மாநிலத்திற்கான பதிவை செய்தல் மற்றும் கூடுதல் வரிச் செலுத்துவதைத் தவிர்க்க உதவும். இவற்றில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல்களைக் களையும் நோக்கிலேயே புதிய பாரத் சீரிஸ் பதிவு முறையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) அறிமுகம் செய்திருக்கின்றது.

பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

தற்போது ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் தகவலின்படி, வருடம் - பிஎச் - நான்கு இலக்க எண் - இரு ஆங்கில எழுத்துகள் ஆகியவை இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

 • YY: பதிவு செய்யப்பட்ட வருடம்
 • BH- பாரத் என்பதைக் குறிக்கும் வகையில்
 • ####- நான்கு இலக்க எண் (0000 முதல் 9999 வரை)
 • XX- ஆங்கில எழுத்து (AA தொடங்கி ZZ வரை) இவ்வாறு புதிய பாரத் சீரிஸ் வாயிலாக பதிவு செய்யப்படும் வாகனங்களின் பதிவெண் காட்சியளிக்க இருக்கிறது.
 • பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

  மேலே கூறியதைப் போல் அரசு மற்றும் பொதுப் பணி துறை அல்லது நான்கு மாநிலங்கள் வரை கிளைகளை வைத்து செயல்படும் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் இப்புதிய பதிவு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  புதிய பார்த் சீரிஸ் பதிவு முறையின்கீழ் எப்படி பதிவு செய்வது?

  • நீங்கள் தனியார் நிறுவனத்தில் பணி புரிபவராக இருந்தால் வாகன பதிவுக்கான ஆவணங்களுடன் ஃபார்ம் 60-யையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்.
   • அதுவே நீங்கள் அரசு பணியாளராக இருந்தால் உங்களின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை சமர்பித்தாலே போதுமானது.
   • பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

    இந்த ஆவணத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கான வரியையும் செலுத்த வேண்டும். எந்தெந்த விலையுள்ள வாகனங்களுக்கு எத்தனை சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும் என்பது பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்.

    விலை வரி சதவீதம்
    Rs. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் 8%
    Rs. 10-20 லட்சம் 10%
    Rs. 20 லட்சத்திற்கும் அதிகமான விலைக் கொண்ட கார்கள் 12%
    பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

    மேலே பார்த்த வரியுடன் கூடுதல் 2 சதவீதம் வரியை டீசல் வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட இருக்கின்றது. அதேவேலையில், மின்சார வாகனங்களுக்கு 2 சதவீதம் குறைந்த வரியும் வசூலிக்கப்பட இருக்கிறது. இதற்காக விண்ணப்பிக்கப்படும் அனைத்து சான்றுகளும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே சரி பார்க்க இருக்கின்றன. அதேசமயம், பழைய மற்றும் புதிய வாகன பதிவுமுறை இரண்டுமே ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன.

    பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

    புதிய பிஎச் சீரிஸ் பதிவு முறையின் பயன்கள்:

    மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 47 இன் கீழ், ஓர் குறிப்பிட்ட மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் அதன் தாய் மாநிலத்தை விட்டு வேறொரு மாநிலத்திற்கு இடம் மாறுமானால் 12 மாதங்களுக்கு உள்ளாக அந்த மாநிலத்தின் ஆர்டிஓ-வில் பதிவு செய்ய வேண்டும். இத்துடன், அந்த மாநிலத்திற்கான சாலையை வரியைச் செலுத்த வேண்டும்.

    பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

    இவற்றைக் கலைக்கும் விதமாக புதிய பிஎச் சீரிஸ் பதிவு முறையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கொண்டு வந்திருக்கின்றது. ஆகையால், பிஎச் சீரிஸ் பதிவு முறையை பயன்படுத்தும் வாகனங்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் தடையின்றி பயன்படுத்தலாம். தொடர்ந்து, இதற்காக எந்த வரியையும் கூடுதலாக செலுத்த வேண்டியதில்லை.

    பிஎச் சீரிஸில் பதிவு செய்யும் வழி முறை: எலெக்ட்ரிக் காருக்கு 2 சதவீதம் வரை வரி குறைவாக செலுத்தலாம்!

    இந்தியாவில் நம்பர் பிளேட் விஷயத்தில் ஒன்றிய அரசு இதுபோன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக அரசு எச்எஸ்ஆர்பி எனும் அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட வாகன பதிவெண் முறையை அறிமுகப்படுத்தியிருந்தது. ரிவட் முறையில் வாகனங்களில் பொருத்தப்படும் இந்த நம்பர் பிளேட் போலி பதிவெண் மற்றும் வாகன திருட்டு போன்றவற்றை தவிர்க்கும் நோக்கில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to apply for bh series registration here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X