நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

வாகனங்களை சரியாக பராமரிப்பது என்பதும் ஒரு கலைதான். உங்களுக்கு நம்பிக்கையான/சிறந்த மெக்கானிக் இருந்து விட்டால், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட மெக்கானிக்குகள் கிடைப்பது கடினம். இதன் காரணமாக வாகனங்களை சரியாக சர்வீஸ் செய்ய முடியாமல், பலர் சிரமப்படுகின்றனர்.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

ஏதாவது ஒரு மெக்கானிக்கிடம் வாகனத்தை கொடுத்து விட்டு, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே சிறந்த மெக்கானிக்கை எப்படி கண்டுபிடிப்பது? என்பது தொடர்பான தகவல்களை நாங்கள் இந்த செய்தியின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம். நீங்கள் சரியான மெக்கானிக்கை கண்டுபிடிப்பதற்கு, இந்த எளிமையான டிப்ஸ்கள் உதவும் என நம்புகிறோம்.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

ஆன்லைன் ரிவியூக்களை பாருங்கள்

மெக்கானிக்குகளின் அனுபவத்தை ரிவியூக்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் மெக்கானிக் ஷாப்பில் என்னென்ன வசதிகள் உள்ளன? பணியாளர்கள்? உள்பட பல்வேறு தகவல்கள் ரிவியூக்கள் மூலமாக கிடைக்கும். ஆனால் அனைத்து ஆன்லைன் ரிவியூ தளங்களும் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

சிறியதாக தொடங்குங்கள்

உங்கள் வாகனத்தில் பெரிய கோளாறு ஏற்படுவதற்கு முன் நல்ல மெக்கானிக்கை கண்டறியலாம். அதாவது உங்கள் கார் தற்போது நன்றாக ஓடிக்கொண்டுள்ளது என்றால், ஆயில் மாற்றுவது, டயர் ரொட்டேஷன் உள்ளிட்ட சிறிய பணிகளுக்கு நீங்கள் பரிசோதிக்க விரும்பும் மெக்கானிக்கிடம் காரை விடலாம். இதன்மூலமாக அவரது திறமை மற்றும் தொழில் நேர்த்தியை அறிந்து கொள்ளலாம்.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

இதில், உங்களுக்கு திருப்தி என்றால், பெரிய பிரச்னைகளை சரி செய்யவும் அவரையே நீங்கள் அணுகலாம். எனவே பெரிய பிரச்னை ஏற்பட்ட பிறகு, மெக்கானிக்குகளை பரிசோதிப்பதை தவிர்த்து விடுங்கள். சிறிய பிரச்னைகளின்போதே யார் சரியானவர்? என்பதை உறுதி செய்து கொள்வதுதான் மிகவும் சிறந்த நடவடிக்கை.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

சான்றிதழ்கள்

மெக்கானிக்குகளின் சான்றிதழ்களை நீங்கள் பார்க்கலாம். இதன் மூலமாக மெக்கானிக் எவ்வளவு திறமை வாய்ந்தவர்? என்பதை நீங்கள் அறியலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளில் படிக்காமலும், கூடுதல் சான்றிதழ் கோர்ஸ்களை முடிக்காமலும் ஏராளமானோர் திறமை வாய்ந்த மெக்கானிக்குகளாக உள்ளனர்.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

எனவே உங்கள் உள்ளுணர்வை பொறுத்து முடிவு எடுங்கள். ஒரு திறமையான மெக்கானிக்கிடம் சான்றிதழ் இல்லாமல் இருக்கலாம். எனினும் அந்த மெக்கானிக் ஷாப் நீண்ட காலமாக புகழ்பெற்றதாக இருக்கலாம். அல்லது அவர்களது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக மெக்கானிக் ஷாப்பை நடத்தி வரலாம். எனவே உங்கள் உள்ளுணர்வை பொறுத்து முடிவு செய்யுங்கள்.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

பெரிய மெக்கானிக் ஷாப்தான் சிறந்ததா?

மெக்கானிக்குகள் நேர்மையானவராகவும், திறன்மிக்கவராகவும் இருப்பது அவசியம். ஒரு சிலர் பெரிய மெக்கானிக் ஷாப்புகளுக்கு சென்றால்தான் நன்றாக சர்வீஸ் செய்வார்கள் என நினைப்பார்கள். இந்த எண்ணம் தவறானது. சிறிய மெக்கானிக் ஷாப்களிலும் கூட நீங்கள் நல்ல சேவையை பெறலாம். அது மெக்கானிக்கை பொறுத்தது.

நல்ல மெக்கானிக்கை கண்டுபிடிப்பது எப்படினு தெரியுமா? இந்த சூட்சமத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

மெக்கானிக்கிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

நீங்கள் உங்கள் வாகனத்தின் சாவியை மெக்கானிக்கிடம் ஒப்படைக்கும் முன்பு, உங்கள் மனதில் உள்ள கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும். உதாரணத்திற்கு சில கேள்விகள்:

எவ்வளவு காலமாக இந்த தொழிலில் உள்ளீர்கள்? எவ்வளவு அனுபவம் உள்ளது?

எந்த வகையான வாகனத்தை சரி செய்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்கள்?

எந்த வகையான பாகங்களை பயன்படுத்துகிறீர்கள்?

இதுபோல் உங்கள் மனதில் தோன்றும் கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
How To Find A Best Mechanic: Important Tips. Read in Tamil
Story first published: Wednesday, June 16, 2021, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X