ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் கண்ணாடியை மாற்றுவது எப்படி? இத யாரும் சொல்ல மாட்டாங்க!

உடைந்த கார் ஜன்னல் கண்ணாடியை மாற்றுவது எப்படி? மற்றும் அதனை மாற்றும்போது நாம் கவனிக்க வேண்டியவை என்ன? என்பது பற்றிய தகவலையும் இப்பதிவில் காணலாம், வாங்க.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

ஓர் காரின் உரிமையாளராக சிறந்த ஓட்டுநராக இருந்தால் மட்டுமே போதாது, கார்குறித்த சில முக்கிய விஷயங்களையும் அறிந்திருக்க வேண்டும். சிறிய சிறிய கோளாறுகளை நாமே நிவர்த்தி செய்யும் வகையில் குறிப்பிட்ட சில விஷயங்களை அறிந்திருத்தல் வேண்டும்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

இதனடிப்படையிலேயே உடைந்த கார் கண்ணாடி ஜன்னல்களை எப்படி மாற்றுவது என்பதுகுறித்த தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். பொதுவாக, இதுமாதிரியான செயல்களை எல்லாம் மெக்கானிக்குகளால் மட்டுமே செய்ய முடியும், நாம் எங்கிருந்து இதை செய்வது என்ற அச்சம் நம்மில் பலருக்கு இருப்பது உண்டு. இதனைப் போக்கும் வகையில் இப்பதிவு அமையும் என நம்புகின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

உடைந்த ஜன்னலை மாற்றுவதற்கு முன்னர் செய்ய வேண்டியவை:

முதலில் காரில் நொறுங்கி விழுந்துகிடக்கும் கண்ணாடி துண்டுகளை காரில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும். இதேபோன்று, ஜன்னல்களில் ஒட்டியிருக்கும் கண்ணாடி துகள்களையும் அகற்ற வேண்டும். சிறு துண்டிருந்தாலும்கூட புதிய கண்ணாடியைப் பொருத்தும்போது சிக்கலை ஏற்படுத்திவிடும்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

மிக முக்கியமாக காருக்குள் இருக்கும் உடைந்த கண்ணாடி துண்டுகளை அகற்றும் சற்று கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அவை எளிதில் கைகளை பதம் பார்த்துவிடும் என்பதால் வேக்யூம் க்ளீனர் அல்லது சிறப்பு கருவிகளைக் கொண்டு பாதுகாப்புடன் அகற்று அவசியம். இல்லையெனில் கையுறை (gloves) அணிந்து அதிக பாதுகாப்புடன் சிதறி கிடக்கும் துகள்ளை அகற்றலாம்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

புதிய கண்ணாடி பொருத்துவது எப்படி? சுலபமான வழிமுறைகள்:

முதலில் உபகரணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

சாக்கெட் செட்

க்ரீவ் டிரைவர்கள்

ட்ரிம்மர் கருவி

கையுறைகள்

பாதுகாப்பான கண்ணாடி

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

மேற்கூறியவற்றை தயாராக வைத்துக் கொண்டு ஜன்னல் கண்ணாடியை மாற்றும் பணியில் களமிறங்க வேண்டும். முதலில் கார் கதவின் உட்பக்க பேனல்களை அகற்ற வேண்டும். இதனை கழட்டும் அதிக கவனம் தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக, எந்த போல்ட், நட்டுகளை எந்த இடத்தில் இருந்து கழற்றப்படுகின்றன என்பதை ஞபாகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

இத்துடன் மிக முக்கியமாக போல்டுகளை தொலைத்துவிடாமல் பத்திரமாக காருக்குள்ளோ அல்லது ஓர் பெட்டுக்குள்ளோ வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து, உட்பகுதியில் ஏதேனும் ஜன்னல் கண்ணாடியின் துண்டுகள் அவற்றை அகற்ற வேண்டும். இதன் பின்னர் புதிய கண்ணாடியை அந்த நிலை நிறுத்துங்கள்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

தொடர்ந்து, காரின் கதவின் பேனல்களை மூடுவதற்கு முன்னர் புதிதாக பொருத்திய ஜன்னல் கண்ணாடிகள் சரிவர திறந்து மூடுகிறதா என்பது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பலர் இதனை மறந்து மூடிவிடுவர். இதன்பின்னர் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மீண்டும் அதனைக் கழட்டி பார்க்க வேண்டும். ஆகையால், முழுவதுமாக அடைப்பதற்கு முன்னர் ஒரு முறை இயக்கத்தை சரிபார்த்துக் கொள்வது சிறந்தது.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேசமயம், ஒவ்வொரு கார்களிலும் வெவ்வேறு விதங்களில் கார் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வேறொரு பிராண்டு காரின் ஜன்னல் கண்ணாடிகள் மாற்றிய அனுபவம் உண்டு என நினைத்து துணிச்சலாக புதிய கார் பிராண்ட் கார்களில் கையை வைத்துவிடக் கூடாது. அது அதிக சிக்கலை ஏற்படுத்தும்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆகையால், ஒரு முறை எந்த விஷயத்தையும் செய்யும் முன்னர் காருக்காக வழங்கப்பட்டிருக்கும் மேனுவல் புத்தகத்தைப் பார்த்துக் கொள்வது சிறந்தது. அது உங்களை சுலபமாக உடைந்த ஜன்னலை மாற்ற வழிகாட்டும். மேலும், பவர் விண்டோக்களில் கண்ணாடிகளை மாற்றும் முன்பு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் மின் இணைப்பை முதலில் துண்டித்து விட வேண்டும். இது கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

தொடர்ந்து, பேனல்களை மூடும் முன் இந்த ஒயர், பாயிண்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் நீங்கள் கண்ணாடியை மாற்றியதில்லை என்றால் இது உங்களுக்கு சற்று சிக்கலானதாக தென்படலாம்.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால், ஒரு முறை செய்துவிட்டால் அது சுலபமாகிவிடும். குறிப்பாக, ஜன்னல் கண்ணாடியை அது இருக்க வேண்டிய இடத்தில் நுழைப்பது பலருக்கு சிக்கலாக தெரியும். அந்த மாதிரியான நேரத்தில் கண்ணாடியை 90 டிகிரி கோணத்தில் திருப்பி உள் நுழைக்க வேண்டும். இல்லையெனில் அது உட்பகுதியில் நுழையாது.

ஆஹா, நாமே செய்திடலாம் போலிருக்கே! உடைந்த கார் ஜன்னல் காண்ணாடியை மாற்றுவது எப்படி! இத யாரும் சொல்ல மாட்டாங்க!

மேலும், பொறுமையாக கண்ணாடியை உள் நுழைத்தல் வேண்டும். கண்ணாடிகள் எளிதில் உடையக் கூடியவை என்பதால் இதனை அதிக கவனத்துடன் செய்ய வேண்டும். இதுபோன்ற சிறிய சிறிய வழிகாட்டுதல்களை கவனித்தாலே பிறரின் துணையின்றி கண்ணாடிகளை நாமே மாற்றிவிடலாம். பைசாவையும் மிச்சப்படுத்தலாம்.

Most Read Articles

English summary
How To Replace Broken Car Window: Here Is SOme Simple Steps. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X