இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் க்ரெட்டா எஸ்யூவி காரின் மூன்று இருக்கை வரிசை வெர்சனாக அல்கஸாரை இந்த ஆண்டு துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்தது. க்ரெட்டாவை போல் அல்கஸார் மாடலுக்கும் சிறப்பான வரவேற்பை நம் மக்கள் அளித்து வருகின்றனர்.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

இந்தியாவில் அல்கஸாருக்கான முன்பதிவுகளை பெற்றுவரும் அதேநேரம் இந்த காரினை மெக்ஸிகோ நாட்டில் க்ரெட்டா கிராண்ட் என்கிற பெயரில் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது ஹூண்டாய். மெக்ஸிகோவில் ஹூண்டாய் க்ரெட்டா கிராண்ட் மாடலின் ஆரம்ப விலையினை 455,000 மெக்ஸிகன் பெசோ ஆக நிர்ணயித்துள்ளனர். இந்திய ரூபாயில் ரூ.16.80 லட்சம்.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

இந்த அமெரிக்க நாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள க்ரெட்டா கிராண்ட் மாடலாக இந்தியாவில் தயாரிக்கப்படும் நமது அல்கஸார் தான் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஜிஎல்எஸ் பிரீமியம் மற்றும் லிமிடெட் ஆட்டோமேட்டிக் என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் அந்த நாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள க்ரெட்டா கிராண்ட் காரின் அதிகப்பட்ச விலை ரூ.18.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் அந்த நாட்டு சந்தைக்கென சில வேறுபாடுகளை கொண்டிருப்பது உண்டு. இதன் காரணமாக இந்திய வெர்சன் உடன் ஒப்பிடுகையில் அவை சில விஷயங்களில் வேறுபடலாம். ஆனால் க்ரெட்டா கிராண்ட்-ஐ பொறுத்தவரையில், நம் இந்தியாவில் விற்பனையில் உள்ள அல்கஸார் தான் அச்சு அசலாக அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

முப்பரிமாண க்ரில் அலங்கரிப்பு, காரின் உடல் நிறத்தில் டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், இரட்டை-குழல் எக்ஸாஸ்ட் குழாய், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட கதவு கைப்பிடிகள், எல்இடி ப்ரேக் உடன் பின்பக்க ஸ்பாய்லர், சில்வர் நிறத்தில் பக்கவாட்டு படிக்கட்டு மற்றும் ரூஃப் ரெயில் என அதே தோற்றத்தில் தான் க்ரெட்டா கிராண்ட் வெளிப்பக்கத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

மெக்ஸிகோவில் 7-இருக்கை தேர்வில் மட்டுமே இந்த க்ரெட்டா மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்ரெட்டா கிராண்டின் உட்புறத்தில் டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியினை கொண்ட தொடுத்திரை, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர் இல்லா போன் சார்ஜிங், பனோராமிக் சன்ரூஃப், எலக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, கேபினை சுற்றிலும் விளக்குகள், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் என வழக்கமான அல்கஸாரின் வசதிகளே வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

பாதுகாப்பிற்கு 6 காற்றுப்பைகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் உதவி, டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு மற்றும் பின்பக்க பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மெக்ஸிகோ நாட்டில் ஒரே ஒரு பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே க்ரெட்டா கிராண்ட் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

இதன்படி பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் எம்பிஐ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 157 பிஎச்பி மற்றும் 191 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதேபோல் இதனுடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்திய அல்கஸாரில் வழங்கப்படும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

இந்திய சந்தையில் அல்கஸார் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் தேர்விலும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகப்பட்சமாக 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் பெட்ரோல் என்ஜினிற்கு வழங்கப்பட்டுள்ள அதே கியர்பாக்ஸ் தேர்வுகள் தான் கொடுக்கப்படுகின்றன.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

இந்த நீளமான எஸ்யூவி காரில் ஈக்கோ, சிட்டி & ஸ்போர்ட் என்ற மூன்று ட்ரைவிங் மோட்களையும், பனி, மணல் மற்றும் சகதி என்ற டிராக்‌ஷன் மோட்களையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவில் அல்கஸார் பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் (ஒ), பிளாட்டினம், பிளாட்டினம் (ஒ), சிக்னெச்சர், சிக்னெச்சர் (ஒ), சிக்னெச்சர் இரட்டை நிறம் மற்றும் சிக்னெச்சர் (ஒ) இரட்டை நிறம் என்ற 8 வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றது.

இந்தியாவில் பிரபலமாகிவரும் காரை மெக்ஸிகோவில் களமிறக்கி இருக்கும் ஹூண்டாய்!! ஆனால் பெயர் புதியது

தற்சமயம் ரூ.16.30 லட்சத்தில் இருந்து ரூ.20.14 லட்சம் வரையிலான விலைகளில் அல்கஸார் எஸ்யூவி மாடலை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்கிறது. தற்போதைக்கு அல்கஸாருக்கு இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
New Hyundai Creta Grand Launched In Mexico – Is Alcazar From India.
Story first published: Tuesday, November 9, 2021, 2:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X