ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி அறிமுகம் குறித்த ஒரு சந்தோஷமான செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த காரை புக்கிங் செய்வதற்கு ஏராளமானோர் காத்துக் கிடக்கும் நிலையில், வெளியாகி இருக்கும் இந்த செய்தி குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. இந்த எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், இதன் 7 சீட்டர் மாடலாக அல்கஸார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த புதிய மாடல் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா பிரச்னை காரணமாக, இந்த எஸ்யூவியின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட அதிக பிரிமீயம் அம்சங்களுடன் வர இருப்பதால், வாடிக்கையாளர்கள் இந்த புதிய மாடலை புக்கிங் செய்வதற்கு வாடி வாசலில் இருக்கும் காளைகளை போல காத்துக் கிடக்கின்றனர்.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன்படி, வரும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில், ஜூன் 14 முதல் 17ந் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அல்கஸார் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், இந்த எஸ்யூவிக்கு ஹூண்டாய் டீலர்களில் ரகசியமாக முன்பதிவு ஏற்கப்படுவதாகவும் ஆட்டோகார் இந்தியா செய்தி கூறுகின்றது.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் வீல்பேஸ் நீளம் 150 மிமீ கூடுதலாக இருக்கிறது. அதாவது, 2,760 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளது. இதனால், மூன்றாவது வரிசை இருக்கை கொடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலில் நடுவரிசையில் பெஞ்ச் வகை இருக்கை அமைப்பும் இடம்பெற்றிருக்கும். மூன்று வரிசை இடம்பெற்றிருப்பதால், 151 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற்றுள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வென்டிலேட்டட் வசதி கொண்ட முன் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இதில், பெட்ரோல் எஞ்சின் 159 பிஎஸ் பவரையும், டீசல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் அல்கஸார் அறிமுகம் குறித்து ஒரு சந்தோஷமான செய்தி!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
According to reports, Hyundai Alcazar to be launched in India by third week of June, 2021.
Story first published: Wednesday, May 26, 2021, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X