புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

வாடிக்கையாளர்களை காத்திருக்க வைத்துள்ள புதிய அல்கஸார் எஸ்யூவியின் எஞ்சின், இருக்கை அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

அல்கஸார் என்ற பெயரில் விரைவில் புதிய எஸ்யூவி மாடலை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. க்ரெட்டா அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், வடிவமைப்பிலும், வசதிகளிலும் கூடுதல் அம்சங்களுடன் வர இருக்கிறது. இந்த எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதன் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

க்ரெட்டாவைவிட புதிய அல்கஸார் எஸ்யூவி 30 மிமீ கூடுதல் நீளமும், அதிக வீல்பேஸ் நீளம் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, மூன்றாவது வரிசை இருக்கையை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு வகையிலான இருக்கை தேர்வு கொண்ட மாடல்களில் வர இருக்கிறது. அதாவது, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் வரும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

மேலும், பயணிகள் காரில் எளிதாக ஏறி, இறங்குவதற்கு வசதியாக போதுமான இடவசதியை அளிக்கும் வகையில் இரண்டாவது வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன் டச் தம்பிள் ஃபோல்டு வசதியுடன் இரண்டாவது இருக்கை கொடுக்கப்படுகிறது. இதனால், மூன்றாவது வரிசை இருக்கைக்கு செல்வோருக்கு எளிதாக செல்லும் வாய்ப்பை பெற முடியும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

கூடுதல் நீளம் மற்றும் கூடுதல் பயணிகளின் பாரத்திற்கு தக்கவாறு சஸ்பென்ஷனில் சில மாறுதல்களை செய்துள்ளனர். முன்புறத்தில் ஹைட்ராலிக் ரிபவுண்ட் ஸ்டாப்பர் என்ற பாகத்தையும், பின்புறத்தில் செங்குத்தான ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட உள்ளது. இதனால், கூடுதல் சுமை தாங்குவதற்கு ஏதுவானதாகவும், சிறப்பான கையாளுமையையும் வழங்கும் வகையில் மாற்றம் பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

மூன்றாவது வரிசை இருக்கையை முழுமையாக மடக்கி வைக்க முடியும். இதனால், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை வெகுவாக அதிகரித்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யவியில் புதிய க்ரில் அமைப்பு, வலிமையான சி பில்லர் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்கள்

கருப்பு மற்றும் பழுப்பு வண்ணத்திலான இன்டீரியர் தீம் வழங்கப்படுகிறது. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா ஆகியவை இடம்பெற உள்ளன.

அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்களை வெளியிட்டது ஹூண்டாய்... மிஸ் பண்ணிடாதீங்க!

தவிரவும், பனோரமிக் சன்ரூஃப், 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் மற்றும் சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை வழங்கப்படும். மூன்று வரிசைகளுக்கும் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது வரிசை இருக்கை ஏசி வென்ட்டுகளில் காற்று வேகத்தை கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்களை வெளியிட்டது ஹூண்டாய்... மிஸ் பண்ணிடாதீங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 159 பிஎஸ் பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்களை வெளியிட்டது ஹூண்டாய்... மிஸ் பண்ணிடாதீங்க!

இதன் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

அல்கஸார் எஸ்யூவியின் முக்கிய விபரங்களை வெளியிட்டது ஹூண்டாய்... மிஸ் பண்ணிடாதீங்க!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியின் அறிமுக தேதி குறித்து மிக விரைவில் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 7, 2021, 10:42 [IST]
English summary
Hyundai Alcazar SUV details leaked ahead of its launch in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+