அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

அராய் அமைப்பு கூறியதைவிட ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி அதிக மைலேஜ் தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக அல்கஸார் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இது ஓர் பிரமாண்ட தோற்றம் கொண்ட 7 இருக்கை வசதியுடைய காராகும். டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் அல்கஸாரை இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது ஹூண்டாய்.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

போட்டியை கடுமையாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளையும், தொழில்நுட்பங்கள் நிறைந்த காராகவும் இதனை வடிவமைத்துள்ளது, ஹூண்டாய். அறிமுகமான வெகுசில நாட்களே ஆகின்றநிலையில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அல்கஸார் காரை புக் செய்திருக்கின்றனர்.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

இந்த காரின் 1.5 லிட்டர் மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட வேரியண்ட் 20.4 கிமீ வரை ஒரு லிட்டர் டீசலுக்கு மைலேஜ் தரும் என அராய் அமைப்பு தகவல் வெளியிட்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இளைஞர் ஒருவர் புத்தம் புதிய அல்கஸார் காரை மைலேஜ் டெஸ்டிற்கு உட்படுத்தியிருக்கின்றார்.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

அவர் மேற்கொண்ட பரிசோதனையில் அல்கஸார் எஸ்யூவி என்ன மைலேஜை வழங்கியது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். மைலேஜ் டெஸ்ட்குறித்த வீடியோவை பன்னி புனியா எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

முதலில் அல்கஸார் எஸ்யூவி காரில் தானாக நிறுத்தும் வரை இளைஞர் டீசலை நிரப்பியிருக்கின்றார். இதன் பின்னரே மைலேஜ் விவரத்தை வழங்கும் திரையை இளைஞர் ரீசெட் செய்தார். இதைத்தொடர்ந்தே, அல்கஸார் மைலேஜ் டெஸ்டிற்கான பயணத்தைத் தொடங்கியது. இந்த பரிசோதனையின்போது ஏசி 22 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

தொடர்ந்து, க்ரூஸ் கன்ட்ரோல் வசதியுடன் மணிக்கு 85 கிமீ எனும் வேகத்தில் அல்கஸார் இயக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இயக்கியதில் ஒரு லிட்டர் டீசலுக்கு அல்கஸார் 21 கிமீ மைலேஜ் கொடுப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் ஒவ்வொரு 4.7 லிட்டர் எரிபொருள் செலவுக்கும் 100கிமீ வரை பயணித்திருக்கின்றது.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

பன்முக தகவல்களை வழங்கும் திரை வாயிலாக இத்தகவல் கணிக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது அராய் வெளியிட்டதைக் காட்டிலும் சிறந்த மைலேஜ் திறனாகும். டிராஃபிக், நெரிசலான சாலை, வளைவுகள் என பல விதமான களங்களைச் சந்தித்தப் போதிலும் இந்த சிறந்த மைலேஜை அல்கஸார் வழங்கியிருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அராய் சொன்னதவிட அதிக மைலேஜ் தரும் அல்கஸார்! டாடா சஃபாரிக்கு ஏற்ற போட்டியாளன்தான்! அட இவ்ளோ மைலேஜ் தருதா!

1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் கொண்ட அல்கஸார் எஸ்யூவி காரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Image Courtesy: Bunny Punia

தொடர்ந்து, 2.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கிறது. இது 159 பிஎஸ் மற்றும் 192 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது அதிகபட்சமாக 14.5 கிமீ வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மைலேஜ் தரக் கூடியது.

Most Read Articles

English summary
Hyundai Alcazar SUV Diesel Variant Mileage Test. Read In Tamil.
Story first published: Saturday, June 26, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X