வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருக்கு அமோகமாக புக்கிங் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், மிக சமீபத்தில் அல்கஸார் எனும் ஓர் புதுமுக எஸ்யூவி ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் ஐந்தாம் எஸ்யூவி ரக காராகும்.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

இந்த காருக்கே இந்திய எஸ்யூவி கார் பிரிவில் அமோகமான வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருக்கு 12 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகள் கடைசி ஐந்து நாட்களில் கிடைத்தவை என்ற ஆச்சரியமிகு தகவலே தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஐந்து நாட்களுக்குள்ளாக புதிதாக ஆயிரம் புக்கிங்குகள் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருக்கு கிடைத்திருக்கின்றன.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

கடந்த வாரம் வரை எஸ்யூவிக்கு 11 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்ததாக ஹூண்டாய் அறிவித்திருந்தது. இதில், முதல் 4 ஆயிரம் புக்கிங்குகள் ஹூண்டாய் அல்கஸார் விற்பனைக்கு அறிமுகமான பத்து நாட்களில் கிடைத்தவையாகும். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது கடந்த ஐந்து நாட்களில் ஆயிரம் புக்கிங்குகள் அல்கஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் எஸ்யூவி காருக்கான புக்கிங்கை ஜூன் 9 தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் அல்காஸ் எஸ்யூவி பன்முக தேர்வில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கிறது.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

இத்துடன், இரண்டு விதமான எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்விலும் அல்கஸார் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் 5,600 யூனிட் அல்கஸார் எஸ்யூவி கார்களை விற்பனைச் செய்துவிட்டது. இத்துடன், தற்போது உயர்ந்து வரும் புக்கிங்கைக் கருத்தில் கொண்டு தயாரிப்பு பணிகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5லிட்டர் டீசல் என இருவிதமான எரிபொருள் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 157 பிஎச்பி மற்றும் 191 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

இதேபோன்று டீசல் எஞ்ஜினானது 113 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இரு எஞ்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஹூண்டாய் நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற எஸ்யூவி காரான க்ரெட்டா மாடலை தழுவியே அல்கஸார் எஸ்யூவியை உருவாக்கியிருக்கின்றது.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

இருப்பினும், தோற்றம் மற்றும் சில முக்கிய அம்சங்களில் இது வித்தியாசத்துடன் காட்சியளிக்கின்றது. குறிப்பாக அதிக பிரீமியம் வசதிகளை ஹூண்டாய் அல்கஸார் தாங்கியிருக்கின்றது. 10.25 இன்சிலான தொடுதிரை வசதிக் கொண்டஇன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது) மற்றும் ப்ளூலிங்க் இணைப்பு வசதி உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

இதுமட்டுமின்றி 64 நிறங்கள் கொண்ட ஆம்பிசியன்ட் மின் விளக்கு, குரல் கட்டளை, பவரால் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, போஸ் சரவுண்ட் சிஸ்டத்தின் எட்டு ஸ்பீக்கர்கள், வென்டிலேட் வசதிக் கொண்ட முன்பக்க இருக்கை, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஏர் ப்யூரிஃபையர் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 29, 2021, 18:12 [IST]
English summary
Hyundai Alcazar SUV Receives Over 12 Thousand Bookings. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+